எடை குறைந்த பிஸ்கெட் பாக்கெட்.. பிரிட்டானியா-க்கு ரூ.60,000 அபராதம்! 5 வருட சட்டப் போராட்டம் வெற்றி!

குறைந்த எடை கொண்ட பிஸ்கெட் பாக்கெட்டை விற்பனை செய்த பிரிட்டானியா நிறுவனத்திற்கு ரூ.60,000 வழங்க நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரிட்டானியா
பிரிட்டானியாட்விட்டர்

கேரள மாநிலம் வாரக்கரையைச் சேர்ந்த ஜார்ஜ் தட்டில் என்பவர், கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி, சக்கிரி ராயல் என்ற பேக்கரியில் இருந்து பிரிட்டானியா நிறுவனம் தயாரிக்கும் நியூட்ரி சாய்ஸ் தின் ஆரோ ரூட் வகையைச் சேர்ந்த இரண்டு பிஸ்கெட் பாக்கெட்டுகளை ரூ. 40க்கு வாங்கியுள்ளார்.

அந்த பாக்கெட்களை அவர் எடை போட்டபோது, ​​248 கிராம் என கண்டறியப்பட்டது. அதேநேரத்தில், அந்தப் பாக்கெட்டில் நிறுவனம் 300 கிராம் அடங்கிய பாக்கெட் என விளம்பரப்படுத்தி இருந்தது. இதையடுத்து ஜார்ஜ் தட்டில், திருச்சூர் நுகர்வோர் மாவட்ட குறைதீர் மன்றத்தில் புகார் அளித்தார்.

இதையும் படிக்க: ”அடுத்த சீசனில் தோனி விளையாடுவாரா.. மாட்டாரா?” - நம்பிக்கை வார்த்தைகள் கூறிய சிஎஸ்கே CEO!

பிரிட்டானியா
விபத்து காப்பீடு வழங்காமல் போக்குக்காட்டிய இந்தியன் வங்கி - நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி ஆணை!

இதுகுறித்த விசாரணை முடிவுக்குப் பிறகு தீர்ப்பளித்த நுகர்வோர் குறைதீர் மன்றம், “இது ஒரு ஏமாற்றுச் செயல்” என்றதுடன், பொருட்களின் நிகர அளவை உறுதிசெய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேரள சட்ட அளவியல் துறைக்கு உத்தரவிட்டது.

மேலும், எடை குறைந்த பிஸ்கெட் பாக்கெட்டை விற்பனை செய்ததற்காக பிரிட்டானியா நிறுவனத்திற்கு ரூ.60,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மனுதாரருக்கு ரூ.50 ஆயிரமும், வழக்குச் செலவுக்காக ரூ.10 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: இஸ்லாமிற்கு மாறாவிட்டால், AI மூலம் ஆபாச Videoவை உருவாக்கி வெளியிடுவேன்” - பெண்ணை மிரட்டிய மர்மநபர்!

பிரிட்டானியா
ஆன்லைன் ஷாப்பிங்கில் பழுதான கணினி விற்பனை-நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி தீர்ப்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com