அபாரஜிதா சாரங்கி, கார்கே, பிரியங்கா காந்தி
அபாரஜிதா சாரங்கி, கார்கே, பிரியங்கா காந்திpt web

தொடரும் கைப்பை அரசியல்... பிரியங்காவுக்கு 1984 சீக்கியர் படுகொலையை நினைவூட்டிய பாஜக!

பாலஸ்தீனம் மற்றும் வங்கதேச படுகொலைகள் குறித்து கவனம் ஈர்க்கும் வகையில் கைப்பைகளை நாடாளுமன்ற வளாகத்துக்கு கொண்டு வந்த பிரியங்கா காந்திக்கு பாஜக 1984-ஆம் வருட சீக்கியர் படுகொலையை நினைவூட்டும் சித்திரம் பதித்த கைப்பையை வழங்கி சலசலப்பை உண்டாக்கியது.
Published on

பாலஸ்தீனம் மற்றும் வங்கதேச படுகொலைகள் குறித்து கவனம் ஈர்க்கும் வகையில் கைப்பைகளை நாடாளுமன்ற வளாகத்துக்கு கொண்டு வந்த பிரியங்கா காந்திக்கு, இன்று (டிச 20) பாரதிய ஜனதா கட்சி ஒரு கைப்பையை பரிசாக வழங்கியது. அது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அது ஏன்? அப்படி 1984-ல் என்ன நடந்தது? பார்க்கலாம்...

சலசலப்புக்கு காரணம் என்ன?

1984-ஆம் வருட சீக்கியர் படுகொலையை நினைவூட்டும் சித்திரம் பதித்த கைப்பையை பிரியங்கா காந்திக்கு பாஜக பரிசாக வழங்கியதுதான் சலசலப்புக்கு காரணம். பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அபராஜிதா சாரங்கிதான், 1984 என சிவப்பு எழுத்துக்களில் அச்சிடப்பட்ட அந்த கைப்பையை கொண்டு வந்தார்.

1984-ல் என்ன நடந்தது?

ரத்தம் சொட்டுவது போல அச்சிடப்பட்டிருந்த அந்த கைப்பை, 1984-ஆம் வருடம் டெல்லியில் இந்திரா காந்தி மரணத்துக்கு பிறகு நடைபெற்ற கலவரத்தில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டதை நினைவூட்டும் வகையில் அமைந்திருந்தது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களே சீக்கியர்களை படுகொலை செய்த கலவரங்களில் ஈடுபட்டார்கள் என குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வரும் நிலையில் இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்தவுடன், 1984 கைப்பையை அபராஜிதா சாரங்கி அவருக்கு "பரிசாக" அளித்தார். பிரியங்கா காந்தி அந்த கைப்பையை எடுத்துக் கொண்டு நாடாளுமன்ற வளாகத்துக்குள் சென்று விட்டார். 1984 வருட கலவரத்தில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என வலியுறுத்தும் வகையில் "கைப்பை அரசியல்" அமைந்திருந்ததை பிற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுவாரஸ்யமாக கவனித்தனர்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெகதீஷ் டைட்டிலர் உள்ளிட்டோர் மீது சீக்கியர் படுகொலை கலவரம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் சீக்கியர் படுகொலை 1984 ஆம் வருடம் காங்கிரஸ் கட்சியை பொறுப்பு என்ன தொடர்ந்து குற்றம்சாட்டி காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

அபாரஜிதா சாரங்கி, கார்கே, பிரியங்கா காந்தி
“டேய் தகப்பா என்னடா இதெல்லாம்?” - ஓய்வு குறித்து விமர்சித்த தன் தந்தைக்கு அஸ்வின் நகைச்சுவை பதில்!

பிரியங்கா காந்தியின் செயல்பாடுகள்

வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரியங்கா காந்திக்கு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்துடன் முதல் கூட்டத்தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டத் தொடரில் தொடர்ச்சியாக பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்ற நிலையில், பாலஸ்தீனம் என அச்சிடப்பட்ட கைப்பையுடன் நாடாளுமன்றத்திற்கு வந்து, இஸ்ரேல் தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருப்பதை பிரியங்கா காந்தி சுட்டி காட்டி கண்டனம் தெரிவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.

அபாரஜிதா சாரங்கி, கார்கே, பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தியின் தோள்பை சர்ச்சை: “காங்.தான் புதிய முஸ்லீம் லீக்” - மொத்தமாக எதிர்க்கும் பாஜக!

பாலஸ்தீனத்துக்கு மட்டும் பிரியங்கா காந்தி குரல் கொடுக்கிறார் என விமர்சனங்கள் எழுந்த நிலையில், வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறையை சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவிக்கும் வகையில் வாசகங்கள் அச்சிடப்பட்டிருந்த கைப்பையை பிரியங்கா காந்தி நாடாளுமன்ற வளாகத்துக்கு கொண்டு வந்தார்.

rahul, priyanka
rahul, priyanka

இதைத் தவிர காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்ற வளாகத்தில் நடத்திய ஆர்ப்பாட்டங்களில், அதானிக்கு எதிரான வாசகம் அச்சிடப்பட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட உடைகளை அணிந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் அதானி, மோடி போல முகமூடி அணிந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசுவது போன்ற காட்சியையும் சித்தரித்து ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் காணொளி பதிவு செய்தனர்.

இவை அனைத்தும் கவனத்தை ஈர்ப்பதற்கான நாடகங்கள் எனவும் நாடாளுமன்றத்தில் விவாதத்தில் பங்கேற்காமல் எதிர்க்கட்சிகள் விளம்பரத்துக்காக இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் பாஜக உள்ளிட்ட ஆளும் கூட்டணியை சேர்ந்தவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில்தான் எம்.பி அபராஜிதா சாரங்கி, சீக்கியர்கள் படுகொலையை நினைவூட்டம் வாசகம் அச்சிடப்பட்ட கைப்பை மூலம் காங்கிரஸ் கட்சிக்கு பதிலடி கொடுக்க முனைந்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

அபாரஜிதா சாரங்கி, கார்கே, பிரியங்கா காந்தி
முதியவர் அணிந்த கிறிஸ்துமஸ் தாத்தா வேடம்.. ரூ 44 லட்சம் சம்பாதித்து அசத்தல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com