எடி ரிச்
எடி ரிச்முகநூல்

முதியவர் அணிந்த கிறிஸ்துமஸ் தாத்தா வேடம்.. ரூ 44 லட்சம் சம்பாதித்து அசத்தல்!

கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்த 68 வயது முதியவர் ஒருவர், ரூ.44 லட்சம் சம்பாதித்திருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.
Published on

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு இன்னும் சில காலங்களே உள்ள நிலையில், மக்கள் ஆராவாரத்தோடு அதற்காக தயாராகி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க.. மறுபுறம் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து பல லட்சங்களை சம்பாதித்து இருக்கிறார் முதியவர் ஒருவர்.

சப்ளை ஸ்டோர் மேனேஜராக முழுநேரம் வேலை செய்து வந்துள்ளார் எடி ரிச் என்றவர். இவர் தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றப்பிறகு, 1995 ஆம் ஆண்டு தனது அண்டை வீட்டுக்காரர் கேட்டு கொண்டதற்கு இணங்க கிறிஸ்துமஸ் தாத்தாவாக வேடமணிய தொடங்கியுள்ளார். இப்படி ஆரம்பத்தில் வேடிக்கையாக தொடங்கிய இவருக்கு, கிறிஸ்துமஸ் தாத்தாவாக வேடமணிவது பிடித்துப்போக... கிறிஸ்துமஸ் காலங்களில் இணையத்தில் வேடமணிந்து நடிக்க ஆரம்பித்துள்ளார். இவரது நகைச்சுவையான பேச்சு மக்களுக்கு பிடித்துப்போக.. நல்ல பிரபலமும் ஆகியுள்ளார். இதன்மூலம் , லட்சக்கணக்கில் பணமும் கிடைத்துள்ளது.

எடி ரிச்
Top 10 உலகம்: ராணுவ வீரர்களை அதிகரிக்கும் ஜெர்மனி To அமெரிக்கா மெக்சிகோ எல்லையில் குவிந்த அகதிகள்!

பணி ஓய்வுக்கு பிறகு என்ன செய்யலாம்? என்று யோசித்து கொண்டிருந்த எடிக்கு இது நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. இதனால் தொடர்ந்து பல இடங்களில் கிறிஸ்துமஸ் தாத்தாவாக நடித்து வந்துள்ளார். இதற்கு எடியின் மகன் கிறிஸ் பெரிதும் உதவி வந்துள்ளார். கிறிஸ் இதற்காக பிரத்யேக ஸ்கிர்ப்டுகள் எழுதுவது, வீடியோ எடிட்டிங் செய்வது போன்றவற்றை கவனித்து வந்துள்ளார்.

எடி மற்றும் கிறிஸ்
எடி மற்றும் கிறிஸ்

இப்படி கடந்த ஆண்டு மட்டும் இவர்கள் இருவரும் சேர்ந்து கிட்டதட்ட இந்திய மதிப்பில் ரூ.44 லட்சம் ரூபாய் வருமானமாக ஈட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுக்குறித்து தெரிவித்த எடி, “நான் மக்களை கவனித்து கொள்ள விரும்புகிறேன்.. என்னால் முடிந்தவரை அவர்களுக்கு திரும்பித்தர விரும்புகிறேன். மக்களை சிரிக்க வைப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் கேட்போரை மிகவும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com