”யாருடைய வீடுகள் இடிக்கப்பட்டதோ..”- ராமர் கோவில் இருக்கும் தொகுதியிலேயே பாஜக தோல்வி! இதுதான் காரணம்!

அவதேஷ் பிரசாத் 5 லட்சத்து 54 ஆயிரத்து 289 வாக்குகள் பெற்ற நிலையில், லல்லு சிங் 4 லட்சத்து 99 ஆயிரத்து 722 வாக்குகளை மட்டுமே பெற்றார். சரியாக 54 ஆயிரத்து 567 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்துள்ளார் லல்லு சிங்.
pm modi
pm modipt web

அயோத்தி ராமர் கோவில்

மக்களவைத் தேர்தல் பல்வேறு தரப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்லலாம். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் அப்படியே மாற்றம் கண்டுள்ளன. 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் என கணிக்கப்பட்ட பாஜக 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 160 இடங்களை தாண்டாது என கணிக்கப்பட்ட INDIA கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதில் காங்கிரஸ் மற்றும் 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

அயோத்தி ராமர் கோவில்
அயோத்தி ராமர் கோவில்

இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் கூட, பாஜக தங்களது பிரசாரத்தில் முக்கியமான ஒன்றாக கருதியது அயோத்தி ராமர் கோவிலைத் தான். ஆனால், ராமர் கோவில் பாஜகவினர் எதிர்பார்த்ததுபோல், மக்கள் மத்தியில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது தெளிவாகியுள்ளது. அந்த மாநிலத்திலேயே, சமாஜ்வாதி கட்சி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜகவோ 33 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதற்குமுன் நடந்த தேர்தலில் அதாவது 2014 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 71 இடங்களிலும், 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 62 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகூட பரவாயில்லை. பாஜக தொண்டர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்னவென்றால், கோவில் அமைந்துள்ள ஃபைசாபாத் தொகுதியிலேயே பாஜக தோல்வியைச் சந்தித்துள்ளது என்பதுதான். அதிலும், ஜனவரியில் கும்பாபிஷேக விழா நடந்த நிலையில், மே மாதத்தில் நடந்த தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளது பாஜக.

pm modi
மகன்களுடன் நீச்சல் குளத்திற்குச் சென்ற துணி வியாபாரி.. துப்பாக்கியால் சுட்ட இளைஞர்! #ViralVideo

பாஜகவை வீழ்த்திய சமாஜ்வாதி!

பட்டியலின வேட்பாளரான அவதேஷ் பிரசாத்தை பொதுத்தொகுதியான ஃபைசாபாத் தொகுதியில் நிறுத்தியது சமாஜ்வாதி கட்சி. 9 முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ள அவர், பட்டியலின மக்களின் முக்கிய ஆதரவு பெற்ற ஒருவராக அறியப்பட்டார். இந்நிலையில்தான், லல்லு சிங் யாதவிற்கு எதிராக தொகுதியில் அதிருப்தி வாக்குகள் அதிகம் இருந்த நிலையில் கிட்டத்தட்ட 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவதேஷ் பிரசாத் 5 லட்சத்து 54 ஆயிரத்து 289 வாக்குகள் பெற்ற நிலையில், லல்லு சிங் 4 லட்சத்து 99 ஆயிரத்து 722 வாக்குகளை மட்டுமே பெற்றார். சரியாக 54 ஆயிரத்து 567 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்துள்ளார் லல்லு சிங். கிட்டத்தட்ட 1957 ஆம் ஆண்டுக்குப்பிறகு ஃபைசாபாத் தொகுதியில் இருந்து பட்டியலின வேட்பாளர் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அயோத்தியில் பாஜகவின் தோல்விக்கு காரணமாக சொல்லப்படுவது, ராமர் கோவிலை தொடர்ந்து அப்பகுதியின் சுற்றுலா மற்றும் வணிகத்தை மேம்படுத்துவதற்காக பாஜக பல்லாயிரம் கோடி செலவிட திட்டமிட்டுள்ளது. அயோத்தி கோவில் மற்றும் நகரத்தை மேம்படுத்துவதற்காக பல வீடுகள் மற்றும் கடைகள் இடிக்கப்பட்டது மக்களிடையே கடும் எதிர்ப்பினை சம்பாதித்தது. அதுமட்டுமின்றி, மீண்டும் பாதைகள் அமைக்கப்பட்டபோது, மக்களுக்கு கடைகள் ஒதுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது அது நடக்கவில்லை என்றும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

AWADHESH PRASAD, LALLU SINGH
AWADHESH PRASAD, LALLU SINGH

இதை பயன்படுத்திக் கொண்ட சமாஜ்வாதி கட்சி, “சிறுவியாபாரிகள், இளைஞர்கள் பாதிக்கப்படும் அதேவேளையில், சர்வதேச ஹோட்டல்களும், மிகப்பெரிய நிறுவனங்களும் பயனடைகின்றன” என்ற பிரச்சாரத்தை தீவிரமாக முன்வைத்தது. அதுமட்டுமின்றி புதிய ரயில் நிலையம், விமான நிலையம் என நகரத்தை 1200 ஏக்கர் பரப்பளவில் மேம்படுத்தவும் திட்டமிட்டப்பட்டுள்ளது. இதற்காக நிலங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விவகாரங்களை எல்லாம் லல்லு சிங் கண்டுகொள்ளவில்லை என்பதே அப்பகுதி மக்களின் ஆதங்கமாக உள்ளது.

pm modi
கேரளாவில் தடம் பதித்த பாஜக - வாக்கு சதவிகிதமும் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக தகவல்!

சமாஜ்வாதி வேட்பாளரின் வாக்குறுதி

அயோத்தியில் உள்ள வாக்காளர்கள் பெரும்பாலும், பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மக்கள், சிறும்பான்மையினராக உள்ளனர். அம்மக்களிடம், பாஜக கோவிலை மேம்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது என்றும், மக்களின் பிரச்சனைகளை புறக்கணிக்கிறது என்ற உணர்வும் இருந்ததை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டது சமாஜ்வாதி கட்சி.

லல்லு சிங்கின் செல்வாக்கு, ஃபைசாபாத்தின் மொத்தமுள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஃபைசாபாத் மற்றும் அயோத்தி என்ற 2 நகரங்களில் மட்டுமே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே செய்தியாளர்களைச் சந்தித்த அவதேஷ் பிரசாத், “பாஜக அரசால் யாருடைய வீடுகள், கடைகள் இடிக்கப்பட்டதோ அந்த மக்களுக்கு நான் மறுவாழ்வு பெற்றுத் தருவேன். ராமரின் கண்ணியத்தை காப்பாற்ற நான் பாடுபடுவேன்” என தெரிவித்துள்ளார்.

பாஜகவின் தோல்விக்கு இதுமட்டும் காரணம் இல்லை என்றும் சிலர் கூறுகின்றனர். வேலையில்லாத் திண்டாட்டம், வளர்ச்சிப் பணிகள், போட்டித் தேர்வு விவகாரங்கள் போன்றவையும் வாக்காளர்கள் மத்தியில் அதிகமாக இருந்த இளைஞர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கின்றனர்.

pm modi
நீட் தேர்வில் மோசடியா? ஒரே மையத்தில் 8 பேர் முதலிடம்.. 718, 719 மதிப்பெண்கள் எப்படி? எழும் கேள்விகள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com