மகன்களுடன் நீச்சல் குளத்திற்குச் சென்ற துணி வியாபாரி.. துப்பாக்கியால் சுட்ட இளைஞர்! #ViralVideo
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர் அர்ஷத். இவர் துணி வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், அர்ஷத் தனது குடும்பத்துடன் நீச்சல் குளத்துக்கு குளிக்கச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மற்ற நபர்களுக்கும் இவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் பேசிக்கொண்டிருந்தபோதே அர்ஷத் மீது இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
அப்போது அவரது மகன்கள் உடன் இருந்தும் அவரைக் காப்பாற்ற முடியாமல் போனது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இதுதொடர்பாக அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள அர்ஷத் துப்பாக்கியால் சுடப்பட்ட காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.