உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம்
உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம்pt web

SIR | "ஆதார் அட்டையை 12வது ஆவணமாக ஏற்க வேண்டும்" - தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஆதார் அட்டையை 12வது ஆவணமாக தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதேவேளையில், ஆதார் குடியுரிமைக்கான சான்றாகக் கருதப்படாது என்றும் உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தெளிவுபடுத்தியிருக்கிறது.
Published on

செய்தியாளர் ராஜீவ்

ஆதார் அட்டையை 12வது ஆவணமாக தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதேவேளையில், ஆதார் குடியுரிமைக்கான சான்றாகக் கருதப்படாது என்றும் நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜோய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு தெளிவுபடுத்தியிருக்கிறது. மேலும், ஆதார் அட்டையின் உண்மைத்தன்மையை மதிப்பிடுவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு உரிமை உண்டு என்றும் கூறியிருக்கிறது.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு
உச்சநீதிமன்றம் தீர்ப்புமுகநூல்

பிகார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.ஜே.டி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். அவர் வாதிடுகையில், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் ஆதார், ரேஷன் அட்டை ஆகியவற்றை தேர்தல் ஆணையம் பெற மறுப்பதாகவும், குறிப்பாக ஆதார் அட்டை அடிப்படையில் வாக்காளர் பட்டியலில்  பெயர்களை மீண்டும் சேர்க்க முடியாது என தேர்தல் ஆணையம் மறுப்பதாகவும் தெரிவித்தார். எனவே தேர்தல் ஆணையம் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாதிட்டார்.

உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம்
SIR | ”1% வாக்காளர்கள் நீக்கப்பட்டாலும்..” எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பும் ADR வெளியிட்ட தரவுகளும்!

இதற்கு நீதிபதிகள், ஆதார் அடையாள அட்டையை குடியுரிமைக்கான அடையாள அட்டையாக கருத வேண்டும் என கூறுகிறீர்களா? என கேள்வி எழுப்பினர்.இதற்கு பதில் அளித்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், "பூத் லெவல் அதிகாரிகளால் குடியுரிமையை முடிவு செய்ய முடியாது. நாங்கள் ஆதாரை குடியிருப்புக்கான அடையாளமாகதான் ஏற்க செல்கிறோம். ஏனென்றால், குறிப்பிட்ட இடத்தில் அவர்கள் வசிக்கிறார்கள் என்பதற்கான ஆதாரமாக ஆதார் அடையாள அட்டைதான் பலரிடம் இருக்கிறது. அது ஏற்கப்படவில்லை என்றால் பலரது விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாமலேயே போய்விடும். அவர்களால் வாக்களிக்க முடியாது. நாடுமுழுதும் ஆதாரை ஆவணமாக பெறும் போது தேர்தல் ஆணையம் ஆதார் அட்டையை தொடர்ந்து பெற மறுக்கிறது. தேர்தல் ஆணையம் கூறியுள்ள 11 ஆவணங்களை மட்டுமே பெற முடியும் என்று தேர்தல் ஆணையும் பிடிவாதமாக உள்ளது, நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை. ஆதார் எண்ணை 12 வது ஆவணமாக சேர்க்க வேண்டும்" என வாதிட்டார்.

பீகார், தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றம்
பீகார், தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றம்எக்ஸ் தளம்

அதற்கு  தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர் லாகேஷ் திவேதி, ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக பெற முடியாது எனவும் சட்டமன்ற உறுப்பினரை தேர்வு செய்யும் வாக்காளர் இந்திய குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கடந்த முறை ஆதார் அட்டையை பெறுவதாக அறிவித்துவிட்டு தற்போது மறுப்பது ஏன்? என கேள்வி எழுப்பினர். ஆதார் என்பது பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமை போன்று ஆதாரபூர்வமான ஆவணம்தானே அதனை பெற மறுப்பது ஏன்? என கேள்வி எழுப்பிய நிலையில் தேர்தல் ஆணையம், ஆதார் அட்டையை முகவரி சான்றாக மட்டுமே பெற முடியும்  என தெரிவித்தது.

உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம்
`பாகுபலி'யில் ஸ்ரீதேவி.. சிவகாமியாக நடிக்க முடியாமல் போனது ஏன்? - போனி கபூர் ஆதங்கம்|Baahubali

இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், "தேர்தல் ஆணையம் ஏன் ஆதார் அட்டையை 12 வது ஆவணமாக சேர்க்க மறுக்கிறது? ஒருவரிடம் ஆதார் மட்டுமே இருந்தால் அதனை பெற்று அவர் குறித்து விசாரணை நடத்தி வாக்காளர் பட்டியலில் சேர்க்க தேர்தல் ஆணையத்துக்கு என்ன பிரச்னை? ஆதார் அட்டை குடியுரிமை சான்றாகாது. இருப்பினும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (Representation of People Act) பிரிவு 23(4)-ஐ கருத்தில் கொண்டு, ஆதார் அட்டை ஒருவரின் அடையாளத்தை நிரூபிக்கும் ஆவணங்களில் ஒன்றாக கருதப்படும். பிகார் மாநிலத்தின் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் ஒருவரைச் சேர்ப்பதற்கும் நீக்குவதற்கும், அவரது அடையாளத்தை நிரூபிக்கும் ஆவணமாக ஆதார் அட்டை ஏற்றுக்கொள்ளப்படும். அது தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட  வேண்டும்" என  உத்தரவிட்டனர்.

தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
தேர்தல் ஆணையம் நோட்டீஸ்x page

இதற்கு தேர்தல் ஆணையம், "ஆதார் அடையாளத்திற்காக ஏற்றுக்கொள்ளப்படும் என்பதற்கான வழிமுறைகளை இன்று வெளியிடுவோம்" என உறுதி அளித்தது.

இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், "ஆதார் அட்டையை 12வது ஆவணமாக தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும். அதேவேளையில், ஆதார் அட்டையின் நம்பகத்தன்மை மற்றும் உண்மை தன்மையை சரிபார்க்க அதிகாரிகளுக்கு உரிமை உண்டு. மேலும், ஆதார் அட்டை என்பது குடியுரிமைக்கான சான்றாக ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை தெளிவுபடுத்துகிறோம். ஆதார் அட்டையை வாக்காளர் பட்டியலில் இணைவதற்கான 12வது ஆவணமாக ஏற்பது தொடர்பான வழிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று உறுதி அளித்துள்ளதை பதிவு செய்கிறோம்" எனவும் தெரிவித்து வழக்கை அடுத்த திங்கள்கிழமை ஒத்திவைத்தனர்.

உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம்
"நாங்கள் இணைந்து வருகிறோம்..." ரஜினியுடன் இணையும் படத்தை உறுதி செய்த கமல்!|Rajini|Kamal

பிகார் சட்டமன்றத் தேர்தல் நவம்பரில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இது தொடர்பாக ஜூன் 24 ஆம் தேதி வெளியான அறிவிப்பில் 2003 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் இல்லாதவர்கள் தங்களது இந்திய குடியுரிமை மற்றும் இருப்பிடத்தை நிரூபிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அதாவது 2003 ஆம் ஆண்டுக்கு பிறகு வாக்காளர் கணக்கெடுப்பு கணினிமையாக்கப்பட்ட நிலையில் அதற்கு பிறகான கணக்கெடுப்புகளில் இடம்பெற்றவர்களை மீண்டும் உறுதிப்படுத்த தேர்தல் ஆணையம் கோரியிருக்கிறது.

பிகார்
பிகார்

2003 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் பட்டியலில் இடம்பெறாத வாக்காளர்கள், குறிப்பாக, 2003ம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்கள், தாங்கள் இந்தியர்கள் என்பதை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட், கல்விச் சான்றிதழ், அரசு ஊழியர்கள் அல்லது ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை அல்லது ஆணைகள், நிரந்தர குடியிருப்புச் சான்றிதழ், வன உரிமைச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட குடும்பப் பதிவேடு மற்றும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிலம் அல்லது வீட்டு ஒதுக்கீட்டுச் சான்றிதழ், 1967 க்கு முன்பு பல்வேறு பொது அதிகாரிகளால் வழங்கப்பட்ட பிற ஆவணங்கள் ஆகிய 11 ஆவணங்கள் சரிபார்ப்புக்கு ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம்
நிச்சயம் தவறவிடக்கூடாத படம் `பேட் கேர்ள்' | Varsha Bharath|Vetrimaaran| Bad Girl

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com