மைக்கை சுழற்றிய சீமான்...! அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகிறதா நாதக?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில், எப்போதும் போல தனித்து களம் கண்டது நாம் தமிழர் கட்சி
நாதக
நாதகமுகநூல்

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு இன்றே முடிவுகள் வெளியாக இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில், நாதக எப்போதும் போல தனித்து களம் கண்டது.

2016ம் ஆண்டு முதல் தேர்தல் களத்தில் போட்டியிட்டு வரும் நாம் தமிழர் கட்சி, கடைசியாக நடந்த சட்டமன்ற தேர்தலில் கிட்டத்தட்ட 7 சதவீத வாக்குகளைப் பெற்றது. அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறுவதற்கு குறைந்தது 8 சதவீத வாக்குகள் தேவைப்படும் நிலையில், அதனை இந்த நாடாளுமன்ற தேர்தலில் பெற்று அங்கீகாரத்தைப் பெற முயன்று வருகின்றனர். ஆனால், விவசாயி சின்னம் இல்லாதது அவர்களுக்கு பாதகமாக பார்க்கப்படும் நிலையில், கொடுத்த மைக் சின்னத்தை ஓரளவுக்கு வாக்காளர்களிடம் கொண்டு சேர்த்தனர்.

பிரசார மேடைகளில் பேசிய சீமான், “தமிழ்நாட்டில் மிகவும் வலிமையான கூட்டணி என்றால் அது எங்களுடையதுதான். நாங்கள் மக்களோடு கூட்டணி வைக்கிறோம். குறிப்பிட்ட வாக்கு சதவீதம் உயரும்” என்று பேசினார். மேலும், மயிலாடுதுறை, திருச்சி மற்றும் தர்மபுரி போன்ற இடங்களில் நாம் தமிழர் கட்சி மற்றவர்களுக்கு கடுமையான நெருக்கடி தருவார்கள் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் கூறும் நிலவரப்படி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், திருச்சி, புதுச்சேரி மற்றும் ஈரோடு உள்ளிட்ட தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3வது இடத்தில் இருந்து வருகிறது. பெரும்பான்மையான இடங்களில் 4வது இடத்தில் இருக்கிறது அக்கட்சி. தற்போதைய நிலவரப்படி ஒரு தொகுதியிலும் வெற்றி நிலவரம் காணப்படாவிட்டாலும், வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை கணிசமாக உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த நகர்வுகளை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

நாதக
பாஜக-க்கு குடைச்சல் கொடுக்கும் I.N.D.I.A கூட்டணி... கிங் மேக்கராக உருவான சந்திரபாபு நாயுடு! எப்படி?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com