46% of Indians Suffer From Sleep Problems
தூக்கமின்மை பிரச்னைfb

தூக்கத்தில் 5 கோடி பேருக்கு மூச்சுத்திணறல்.. இந்தியாவில் தூக்கமின்மையால் 46% மக்கள் பாதிப்பு!

இந்தியாவில் தூக்கமின்மை என்பது ஒருசாதாரணப் பிரச்னையாகத் தாண்டி, தற்போது ஒரு தேசிய சுகாதார நெருக்கடியாக உருவெடுத்துள்ளதாக சமீபத்திய ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.
Published on

இந்தியாவில் தூக்கமின்மை என்பது ஒருசாதாரணப் பிரச்னையாகத் தாண்டி, தற்போது ஒரு தேசிய சுகாதார நெருக்கடியாக உருவெடுத்துள்ளதாக சமீபத்திய ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.

இந்தியாவில் தூக்கமின்மை என்பது ஒருசாதாரணப் பிரச்னையாகத் தாண்டி, தற்போது ஒரு தேசிய சுகாதார நெருக்கடியாக உருவெடுத்துள்ளதாக சமீபத்திய ஆய்வறிக்கை எச்சரிக்கிறது. சுமார் 20 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி, இந்தியாவில் 46 சதவீத மக்கள் ஒருநாளைக்கு 6 மணி நேரத்துக்கும் குறைவான தூக்கத்தையே பெறுகின்றனர். இதில் 23 சதவீதம் பேர் 4 மணிநேரம் மட்டுமே தூங்குவதாகக் கவலை தெரிவித்துள்ளனர். 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த நிலை சற்று முன்னேற்றமடைந்திருந்தாலும், இன்னும் 42 சதவீதம் பேர் மட்டுமே ஆரோக்கியமான 6 முதல் 8 மணிநேர உறக்கத்தைப் பெறுகின்றனர். தூக்கம் தடைபடுவதற்கு 72 சதவீத மக்கள் நள்ளிரவில் கழிப்பறை செல்வதையே முக்கியக் காரணமாகக் கூறுகின்றனர்.

இதுதவிர, முறையற்ற கால அட்டவணை மற்றும் கொசுத்தொல்லையும் தூக்கத்தைப் பாதிக்கின்றன. குறிப்பாக, 97 சதவீத ஐடி ஊழியர்கள் தூங்குவதற்கு ஒரு மணிநேரம் முன்பு வரை கைப்பேசி போன்ற மின்னணுச் சாதனங்களைப் பயன்படுத்துவது அவர்களின் உடலின் இயற்கைக் கடிகாரத்தைப் பாதிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. போதிய தூக்கம் இல்லாவிட்டால் உயர்ரத்த அழுத்தம், பக்கவாதம், உடல்பருமன் மற்றும் மனச்சோர்வு போன்ற தீவிர பாதிப்புகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்தியாவில் மட்டும் சுமார் 5.2 கோடி பேருக்குத் தூக்கத்தில் மூச்சுத்திணறல் பாதிப்பு இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆரோக்கியமான வாழ்வுக்கு 18 முதல் 45 வயதுடையவர்கள் தினமும் 6 முதல் 8 மணிநேரம் ஆழ்ந்து உறங்குவது அவசியம் என்று இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.

46% of Indians Suffer From Sleep Problems
இந்தியர்களிடையே அதிகரித்து வரும் தூக்கமின்மை பிரச்னை... எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com