தூக்கமின்மையால் உருவாகும் கருப்பை புற்றுநோய் பாதிப்பு! - அதிர்ச்சி கொடுக்கும் ஆய்வு முடிவுகள்

சரியான தூக்கம் இல்லாமல், தூக்கமின்மையால் அவதி அடையும் பெண்களுக்கு கருப்பை புற்றுநோய்யால் பாதிக்கக்கூடிய அபாயம் அதிகம் உள்ளது என்று சமீபத்திய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
கருப்பை புற்றுநோய்
கருப்பை புற்றுநோய்முகநூல்

சரியான தூக்கம் இல்லாமல், தூக்கமின்மையால் அவதி அடையும் பெண்களுக்கு கருப்பை புற்றுநோய்யால் பாதிக்கக்கூடிய அபாயம் அதிகம் உள்ளது என்று சமீபத்திய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

கருப்பைப்புற்றுநோய் என்பது கருப்பை அல்லது ஃபலோபியன் குழாய்களில் உள்ள அசாதாரண செல்கள் கட்டுப்பாட்டை மீறி வளர்ந்து பெரும்கும்போது உருவாகிறது.

லான்செட்டில் வெளியிடப்பட்டுள்ள கருப்பை புற்றுநோய் குறித்தான ஆய்வு தெரிவிப்பது என்னவென்றால், உலகெங்கிலும் உள்ள பெண்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக கருதப்படும் கருப்பை புற்றுநோயை தூக்கமின்மைக்கு சரியான சிகிச்சையளிப்பதன் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவிக்கிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, புதிதாக 3,13,000 க்கும் மேற்பட்டவர்கள் கருப்பை புற்றுநோயால் பாதிப்படைந்துள்ளனர் என்று கூறுகிறது. இதில், 3.7 சதவீதம் பேருக்கு நோய் இருப்பது கண்டறியப்பட்டும், 4.7 சதவீதம் பேர் இதனால் மரணமும் அடைந்துள்ளனர். மேலும், தூக்கத்தில் பிரச்னை உள்ள பெண்கள் நேரத்தில் எழுந்து கொள்பவர்களாகவும், ஆனால், தூங்குவதற்கு மிகவும் சிரமப்படுபவர்களாகவும் இருக்கிறார்களாம்.

தூக்கமின்மை கருப்பை புற்றுநோயை எவ்வாறு ஏற்படுத்துகிறது?

மருத்துவர்களின் கூற்றுப்படி, தூங்குவதில் ஏற்படும் சிக்கலானது வீக்கம், நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிப்பது,புற்றுநோய் ஏற்படுத்தும் வளர்ச்சி காரணிகளை ஊக்குவிப்பது போன்றவற்றை ஏற்படுத்தும்.

கருப்பை புற்றுநோயை பொறுத்தவரை முன்கூட்டியே கண்டறிவது கடினமான ஒன்றாகும். ஏனெனில் அதனால் ஏற்படும் விளைவுகளை முற்றிய நிலையில்தான் கண்டறிய முடிகிறதாம். சைலண்ட் கில்லர் என்றும் கருப்பை புற்றுநோயை கூறுவதுண்டு. தூக்கம் என்பது மனிதனின் உடலியல் செயல்பாடுகளில் இன்றியமையாதது.

மேலும், நோய் எதிர்ப்பு திறன், வளர்ச்சிதை மாற்றம் என அனைத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே இந்த ஆய்வின் படி, 60 சதவீததிற்கு அதிகமான கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் தூக்கமின்மையால் அவதி அடைந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்ட மாதிரிகள் யுனைடெட் கிங்டம் மற்றும் பயோபேங்க் மற்றும் 23andMe ஆகிய நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டன.

கருப்பை புற்றுநோயின் அறிகுறிகள் என்ன?

கருப்பை புற்றுநோய்
உலகளவில் இன்ஃப்ளூயன்ஸா A(H5N2) வைரஸால் பாதிக்கப்பட்டு மெக்சிகோவை சேர்ந்த நபர் உயிரிழப்பு

அதீத பாதிப்பை ஏற்படுத்திய பின்புதான் இது குறித்த தாக்கம் தெரிய வருகிறது.

இடுப்பு அல்லது வயிற்றுவலி, அசௌகரியம் , வீக்கம், உணவுப் பழக்கங்களில் ஏற்படும் மாற்றம், பசியின்மை, பிறப்புறுப்பு வெளியேற்றம், அசாதரண ரத்த போக்கு, மாதவிடாய் சுழற்சிக்கு வெளியே ரத்தப்போக்கு ஏற்படுவது.

வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், குடல் மாற்றம்,வயிற்றின் அளவு அதிகரிப்பு, அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்றவை ஏற்படும்.

கருப்பை புற்றுநோய்
எழும்பூரில் இலவச செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை மையம் தொடக்கம்

தூக்கமின்மையை போக்குவதற்கான வழிகள் என்ன?

  • முதல் காரணம் தூக்க பழக்கத்தை மாற்றுவது தூக்கமின்மையை சரிய செய்ய வழிவகுக்கும்.

  • படுக்கைக்கு முன் குறைந்தது ஒரு மணிநேரம் ஓய்வெடுப்பது வாசிப்பது, மென்மையான இசையை கேட்பது, சுவாசப்பயிற்சி மேற்கொள்வது நல்லது.

  • படுக்கைக்கு செல்வதற்கு முன் செல்போன் போன்ற மின்னணு சாதங்கள் தவிர்க்கவேண்டும், காரணம் வெளிச்சம் தூக்கத்தை சீர்க்குலைக்கும்.

  • படுக்கும் அறையை இருட்டாகவும், அமைதியாகவும் வைத்து கொள்வது சிறந்தது.

  • மதிய நேரம் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com