எழும்பூரில் இலவச செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை மையம் தொடக்கம்

செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை மையம் சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.
இலவச செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை மையம்
இலவச செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை மையம் புதிய தலைமுறை

செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை மையம் சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. முற்றிலும் இலவச சிகிச்சை வழங்கி, குழந்தைக்காக ஏங்கும் ஏழை தம்பதிகளை பெற்றோராக மாற்றும் உள்கருத்தரிப்பு மையம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

நவீனகால தம்பதிகளில் சிலருக்கு, ஏதோ ஒரு வகையில், குழந்தை பிறப்பு தள்ளிப்போகிறது. குழந்தைபேறு இல்லாததால் பரந்துபட்ட சமூகத்தில் இருந்து தங்களை சுருக்கிக் கொள்ளும் தம்பதிகள், இனி அப்படி இருக்க வேண்டியதில்லை என்ற நிலை உருவாகி உள்ளது.

ஏனெனில், சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில், செயற்கை கருத்தரிப்பு மையத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கி உள்ளது. தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக உருவாக்கப்பட்டுள்ள செயற்கை கருத்தரிப்பு மையத்தில், தனியாருக்கு நிகரான சிகிச்சை உபகரணங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து எழுப்பூர் மகப்பேறு மருத்துவமனை இயக்குநர் கலைவாணி தெரிவிக்கையில், ” கருப்பை, கருக்குழாய், ஹார்மோன் சுரப்பு இவற்றில் பெண்களுக்கு குறைபாடு ஏற்படும்போது குழந்தை பிறப்பு ஏற்படுவதில் பாதிப்பு உண்டாகிறது. சுவர் எனப்படும் செப்டம் கருத்தரிப்பதில் பிரச்னை ஏற்படுத்தும். ஆகவே, இக்கருக்குழாய் கட்டி சரிசெய்யப்படும். இங்கு அதற்கான வசதியுள்ளது. கருக்குழாயில் பிளாக் இருந்தால், அதை அகற்றும் வசதி உள்ளது.மேலும்,உயிருள்ள விந்தணுக்களை தேர்வு செய்து கருப்பையில் வைத்து கருவை உண்டாக்குவோம்.” என்று தெரிவித்துள்ளார்.

கருத்தரிப்பு சிகிச்சை அளிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதன் மூலம் குழந்தைக்காக ஏங்கும் சாமானிய மக்கள், கோடிகளில் செலவழித்து எடுக்கும் சிகிச்சையை இலவசமாக பெற முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். உயிரணுக்கள், பெண்ணின் கருப்பை, கருக் குழாய், மாதவிடாய் சுழற்சி, கருவுறுதலுக்கான சாதகமான சூழல் ஹார்மோன் சுரப்பு உள்ளிட்ட முழுத்
தகவலும் சேகரிக்கப்பட்ட பின்னரே சிகிச்சை வழங்கப்படும்.

இலவச செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை மையம்
மக்களே உஷார்! சர்க்கரை வியாதி குறித்து, வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட் ! மருத்துவர் சொல்வது என்ன?

முதல் நிலையில், கருவுறுதல் என்பது முடியவே
முடியாது என்ற பிறகுதான், இரண்டாவது நிலை சிகிச்சைக்கு
செல்வோம் என்கின்றனர் கருத்தரிப்பு சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவர்கள்.’கணவன் விந்தணுவை எடுத்து, பெண்ணின் கருப்பையில் வைப்போம். முதல் நிலையில் கரு உண்டாகவில்லை எனில், 2ஆம் நிலை சிகிச்சை அளிப்போம். குழந்தைபெறும் சிகிச்சைக்கு வரும் தம்பதிகளின் உடல் பிரச்னை அறியப்படும்.

கருக்குழாய், கருப்பை, கருப்பை வாய் எப்படி இருக்கிறது என்பதை ஆராய்வோம். கருக்குழாயில் அடைப்பு இருந்தால்,
அதை திறந்துவிட சிகிச்சை இருக்கிறது. கருக்குழாய் பிரச்னை தீவிரமாக இருந்தால், ஐவிஎஃப் சிகிச்சை மூலம் கருவுறலாம்.”
என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இலவச செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை மையம்
உலகளவில் இன்ஃப்ளூயன்ஸா A(H5N2) வைரஸால் பாதிக்கப்பட்டு மெக்சிகோவை சேர்ந்த நபர் உயிரிழப்பு

இந்தியாவில் கருத்தரிப்பின்மை பாதிப்பு என்பது  25 வயதிலிருந்து 45 வயதுக்குட்பட்ட மகளிருக்கு 3.9 சதவிகிதமாக இருப்பது உறுதிபடுத்தப்பட்டிக்கிறது. இந்த நிலையில்தான் அடுத்த ஓராண்டுக்குள் முதல் குழந்தையை, எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை பெறும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் கருத்தரிப்பு சிகிச்சை மைய மருத்துவர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com