குடிநீர்
குடிநீர்pt web

மைக்ரோ ப்ளாஸ்டிக்குகள் | குடிநீருக்குள் ஒரு கொலைகாரன்.. நெஞ்சை உறையவைக்கும் பகீர் உண்மை!

காற்றில் மாசு, உணவில் ரசாயனங்கள் என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், நம் குடிநீரிலும் நம்முடைய உடலிலும் பிளாஸ்டிக் துகள்கள் இருக்கின்றன என்பது ஒரு அதிர்ச்சி தகவலாகத்தான் உள்ளது..
Published on

மைக்ரோ ப்ளாஸ்டிக்குகள்

இன்று உலகம் முழுவதிலுமுள்ள நீர்நிலைகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது மைக்ரோ ப்ளாஸ்டிக்குகள். நீர் நிலைகளில் கழிவுகளாகச் சேரும் ப்ளாஸ்டிக்குகள் மீது சூரிய ஒளி, வெப்பம் மற்றும் அலைகள் போன்றவைகள் ஏற்படுத்தும் தாக்கத்தால் மைக்ரோ ப்ளாஸ்டிக்குகள் உருவாகி மிகச்சிறிய துகள்களாக நீர்நிலைகளில் கலக்கின்றன.

மைக்ரோபிளாஸ்டிக் என்பது வெறும் சுற்றுச்சூழல் பிரச்சனை மட்டுமல்ல. அவை ஒரு பொது சுகாதார அவசரநிலை - எரிக் சோல்ஹெய்ம், முன்னாள் UNEP தலைவர்.

1950களில் 1.5 மில்லியன் டன்னாக இருந்த பிளாஸ்டிக் உற்பத்தி, 2022ல் 400.3 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. 2050 ஆம் ஆண்டுக்குள் இது 33 பில்லியன் டன்களை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய ப்ளாஸ்டிக்குகளின் உற்பத்தி அதிகரித்திருப்பதும், கழிவு மேலாண்மையில் காணப்படும் சுணக்கமும் மைக்ரோ ப்ளாஸ்டிக்குகளின் அளவையும் அதிகரிக்க வைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். உதாரணத்திற்கு, பிளாஸ்டிக் கழிவுகளில் 9% மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது; 79% கழிவுகள் சுற்றுச்சூழலில் கலக்கின்றன.

குடிநீர்
"சமஸ்கிருதத்துக்கு நிதி ஒதுக்கியது ஏன்?" அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு திமுக பதில்!

அடி ஆழம் முதல் எவரெஸ்ட் வரை

மைக்ரோ ப்ளாஸ்டிக்குகள் என்பது மிக நுண்ணிய ப்ளாஸ்டிக் துகள்கள். இது எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. உதாரணத்திற்கு பசுபிக் பெருங்கடலின் மிக ஆழமான பகுதியாகக் கருதப்படும் Mariana Trench முதல் எவரெஸ்ட் சிகரம் வரை மைக்ரோ ப்ளாஸ்டிக்குகள் கலந்திருக்கின்றன. மிக முக்கியமாக உங்களது வீடுகளிலும் உங்களது கண்களுக்குத் தெரியாமல் நிறைந்திருக்கின்றன.

“நாம் பிளாஸ்டிக்கை உண்கிறோம், குடிக்கிறோம், சுவாசிக்கிறோம்.. அது எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறது” உலக வனவிலங்கு நிதி அறிக்கை, 2019

வீடுகளில் அமைக்கப்படும் குழாய்களில் இருந்து பெறப்படும் நீராக இருந்தாலும், வாட்டர் கேன்களாக இருந்தாலும் அதிலும் மைக்ரோ ப்ளாஸ்டிக்குகள் கலந்திருக்கின்றன என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. பிரான்சின் உணவுப்பாதுகாப்பு நிறுவனமான ANSES வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வில், ப்ளாஸ்டிக் பாட்டில்களை விட அதிகமான மைக்ரோ ப்ளாஸ்டிக்குகள் கண்ணாடி பாட்டில்களில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பீர் பாட்டில்களில் அதிகபட்சமாக மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் இருப்பது அந்த ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. இந்த துகள்கள் அந்த கண்ணாடி பாட்டில்களுக்குப் பயன்படுத்தப்படும் மூடிகளில் இருந்து வந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். Journal of Food Composition and Analysis இதழில் இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கிறது. ஒப்பீட்டளவில் ப்ளாஸ்டிக் பாட்டில்களை விட கண்ணாடி பாட்டில்கள் பாதுகாப்பானவை என ஆராய்ச்சியாளர்கள் ஆரம்பத்தில் நம்பியிருந்த நிலையில், தற்போதைய முடிவுகள் ஆச்சர்யமளிப்பதாக தெரிவிக்கின்றனர்.

குடிநீர்
‘விஜய் ஸ்பாய்லரா? வின்னரா?’ தேர்தலை ஒட்டிய சுற்றுப்பயணம்.. கட்சிகளின் நடவடிக்கைகள் ஒரு பார்வை..

யமுனையில் மைக்ரோ ப்ளாஸ்டிக்குகள்

உணவுகளை பேக் செய்து கொடுக்கும் பாலீதீன் பைகள் என ப்ளாஸ்டீக் சம்பந்தமாக என்னென்ன இருக்கிறதோ அனைத்திலிருந்தும் மைக்ரோ ப்ளாஸ்டிக்கின் ஆபத்துகள் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்... யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம்.. பாலிஎஸ்டர், நைலான் துணிகளை துவைக்கும்போது அதிலிருந்து கூட நுண்ணிய ப்ளாஸ்டிக் ஃபைபர்கள் வெளியேறுகின்றன என்றும் அது கழிவு நீருடன் கலந்து சுற்றுச்சூழலிலும் கலக்கிறது என தெரிவிக்கப்படுகிறது. மைக்ரோ ப்ளாஸ்டிக்குகள் பல்வேறு மூலங்களின் வழியாக குடிநீர் ஆதாரங்களுக்குள் நுழைகின்றன என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.

ராஜஸ்தான் நிம்லியில் அமைந்துள்ள அனில் அகர்வால் சுற்றுச்சூழல் பயிற்சி நிறுவனத்தில் வியாழக்கிழமை கூட்டமொன்று நடைபெற்றது. அப்போது ஆய்வறிக்கை ஒன்று மேற்கோள் காட்டப்பட்டது. அதில், தாஜ்மஹாலுக்கு அருகிலுள்ள யமுனை நதிப்படுகையில் அதிக நச்சுத்தன்மை கொண்ட மைக்ரோ ப்ளாஸ்டிக்குகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாஜ்மஹாலுக்கு மிக அருகிலுள்ள நதிப்படுகையிலேயே மைக்ரோபிளாஸ்டிக் செறிவு மிக அதிகமாக இருப்பதை இந்த ஆய்வு கண்டறிந்திருக்கிறது. குறிப்பாக ஒரு கிலோ வண்டலில் 800 மைக்ரோபிளாஸ்டிக்கள் இருப்பது ஆய்வின் முடிவில் தெரிய வந்திருக்கின்றன.

குடிநீர்
“அமெரிக்கா மீதான நேரடித் தாக்குதல்” கனடாவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்ட ட்ரம்ப்

ரத்தத்திலும் ரத்தமாக..

சமீபத்திய கண்டுபிடிப்புகள் மனித ரத்தம், தாய்ப்பால், நுரையீரல் என உடலிலும் மைக்ரோ ப்ளாஸ்டிக்குகள் கலந்திருப்பதை வெளிப்படுத்துகின்றன.

எல்லாவற்றிலும் மைக்ரோ ப்ளாஸ்டிக்குகள் இருக்கிறது சரி. அதை எப்படி உட்கொள்ளாமல் தடுப்பது என்ற கேள்வி எழுகிறது அல்லவா? துரதிர்ஷ்டவசமாக மைக்ரோ ப்ளாஸ்டிக்குகள் நீக்கமற நிறைந்திருப்பதால் அதைத் தவிர்ப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.. மைக்ரோ ப்ளாஸ்டிக்குகளை முழுமையாக தவிர்க்க முடியாவிட்டாலும், அதை உடலில் சேர்த்துக்கொள்வதை குறைத்துக்கொள்ள முடியும். இதற்கு நிபுணர்கள் பரிந்துரைப்பது என்னவென்றால், குடிக்கும் நீர், உண்ணும் உணவு மற்றும் சுவாசிக்கும் காற்று என மூன்றிலும் கவனம் செலுத்த வேண்டுமென்கின்றனர்.

முதலில் ப்ளாஸ்டிக் மற்றும் கண்ணாடி குடிநீர் பாட்டில்களைத் தவிர்க்க வேண்டும். வீடுகளில் சரியான ப்யூரிஃபயர்களை உபயோகிக்க வேண்டும். நீரை கொதிக்க வைத்து குளிரவிட்டபின், அதை வடிகட்டி அருந்துவது மைக்ரோ ப்ளாஸ்டிக்குகளைக் குறைக்கும் பயனுள்ள செயல்முறை என்கின்றனர் நிபுணர்கள். ப்ளாஸ்டிக்கில் பேக் செய்யப்பட்ட உணவை அறவே தவிர்ப்பது மிக மிக நல்லது.

குடிநீர்
அதிபரின் உத்தரவுக்கு பெடரல் நீதிமன்றங்களால் தடை விதிக்க முடியாது- அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

காற்றில் மாசு, உணவில் ரசாயனங்கள் என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், நம் குடிநீரிலும் நம்முடைய உடலிலும் பிளாஸ்டிக் துகள்கள் இருக்கின்றன என்பது ஒரு அதிர்ச்சி தகவலாகத்தான் உள்ளது. இந்த மைக்ரோ ப்ளாஸ்டிக்கைக் குறைக்க அரசாங்க ரீதியாகவே முடிவுகள் அவசியமாகின்றன என்கின்றனர் வல்லுநர்கள். இல்லையெனில், எதிர்கால தலைமுறைகளுக்கு நாம் கொடுப்பது நரகமாகத்தான் இருக்கும்..

குடிநீர்
"He Is My Man.." ஹர்திக் இல்லையென்றால் வெறும் கையோடு நின்றிருப்போம்! - ரோகித் ஓபன் டாக்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com