\
shai hope, viv richards, Lara
shai hope, viv richards, Laragrok ai

51 சராசரி.. 12 அணிகளுக்கு எதிராக சதம்! வெஸ்ட் இண்டீஸ் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் HOPE!

இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் வெற்றிகரமாக 352 ரன்களை சேஸ்செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது. ஆட்டமிழக்காமல் 162 ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப், கோலி, தோனி சாதனைகளை உடைத்துள்ளார்.
Published on: 
Summary

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் பாரம்பரியத்தை மீட்டெடுக்க போராடும் கேப்டன் ஷாய் ஹோப், இந்தியாவிற்கு எதிராக 162* ரன்கள் அடித்து வரலாற்று வெற்றியை பெற்றார். 51 சராசரியுடன் 21 சதங்களை அடித்துள்ள அவர், கிறிஸ் கெய்லின் சாதனையை நெருங்கி, தோனியின் விக்கெட் கீப்பர் கேப்டன் சாதனையையும் முறியடித்துள்ளார்.

கிரிக்கெட் தொடங்கப்பட்ட ஆரம்ப காலத்தில் ஒரு ஜாம்பவான் அணியாக வலம்வந்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, உலக கிரிக்கெட் அணிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியது. “பார்த்தாலே பயம் வரக்கூடிய” அணியாக முதலில் வலம்வந்தது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தான். அவர்களிடம் தலைசிறந்த வீரர்கள் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து தரப்பிலும் இருந்தனர். அதன் காரணமாக தான் முதல் இரண்டு ஐசிசி கோப்பைகளை தொடர்ச்சியாக வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்றாவது முறையும் 1983 உலகக்கோப்பையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Viv Richards
Viv RichardsPA Photo

விவ் ரிச்சர்ட்ஸ், ப்ரைன் லாரா, வால்ஸ், சந்தர்பால், லியாட், ஆம்ரோஸ், சோபர்ஸ், க்றிஸ் கெயில், மார்ஷல், ட்வெய்ன் பிராவோ முதலிய பல ஜாம்பவான் வீரர்கள் நிரம்பி வழிந்த வெஸ்ட் இண்டீஸ் அணி தான், தற்போது நல்ல வீரர்களைக் கொண்டிருந்தாலும் தடுமாறி வருகிறது. திறமையான வீரர்கள் இருந்தபோதும் கூட அந்த அணியால் 2022 டி20 உலகக்கோப்பை, 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கு கூட தகுதிபெற முடியவில்லை. தற்போது 2027 உலகக்கோப்பைக்கும் நேரடியாக முன்னேறாமல் தகுதிச்சுற்றுப் போட்டிகளில் விளையாடவேண்டிய நிலையே இருக்கிறது.

Brian Lara
Brian LaraCricbuzz

“ஒருகாலத்துல எப்படி இருந்த பங்காளி நீ” என்ற கூற்றுமட்டுமே இருந்துவரும் நிலையில், அந்த அணி சமீபத்தில் பெரிய எழுச்சியை பெற போராடிவருகிறது. அதற்கு உந்துகோலாக மாறியுள்ளார் அவ்வணியின் கேப்டன் ஷாய் ஹோப். தொடக்கத்தில் சிறந்த வீரர் என்று ஜாம்பவான் வீரர்களால் அறியப்பட்டாலும், திடீரென அப்படியொன்றும் இல்லையே என்பதுபோல காணாமல் போனார் ஷாய் ஹோப். ஆனால் தற்போது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் ஒரே நம்பிக்கையாக ஹோப் மாறியுள்ளார்.

shai hope, viv richards, Lara
பிறந்தநாளில் தங்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை.. 5-0 என மாஸ் வெற்றி!

நேற்று நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான ODI போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 162 ரன்கள் விளாசிய அவர், 352 ரன்கள் என்ற அதிகபட்ச இலக்கை சேஸ்செய்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் வரலாற்று வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

shai hope, viv richards, Lara
தந்தை வழியில் மகன்.. 17 வயதில் ராகுல் டிராவிட் மகனுக்கு அடித்த ஜாக்பாட்!

ODI கிரிக்கெட்டில் 51 சராசரியுடன் 21 சதங்களை அடித்திருக்கும் ஹோப், அதிக சதங்கள் அடித்த கிறிஸ் கெய்லின் 25 சதங்களை நெருங்கிவருகிறார். அதுமட்டுமில்லாமல் 12 வெவ்வேறு அணிகளுக்கு எதிராக ஒருநாள் சதமடித்த ஒரே வீரராகவும் வலம்வருகிறார். 2020-க்கு பிறகு அதிக ஒருநாள் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 13 சதங்களுடன் விராட் கோலியை பின்னுக்கு தள்ளியிருக்கும் அவர், அதிக ஒருநாள் சதமடித்த விக்கெட் கீப்பர் கேப்டன் என்ற தோனியின் சாதனையையும் முறியடித்துள்ளார்.

இந்தியாவிற்கு எதிராக மட்டும் 17 இன்னிங்ஸில் 85 சராசரியுடன் 5 சதங்கள், 3 அரைசதங்களை அடித்திருக்கும் ஹோப், இந்தியாவிற்கு எதிராக சேஸிங்கில் அதிகபட்ச ரன்கள் அடித்த தில்சன் ரெக்கார்டையும் உடைத்துள்ளார்.

இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய விஸ்வரூபம் குறித்து பேசியிருக்கும் ஹோப், தோனியின் ஒரு சின்ன அட்வைஸ் தன்னுடைய கிரிக்கெட்டை மறுவடிவம் செய்ய உதவியதாக கூறியுள்ளார். தோனியுடன் ஒருமுறை பேசியபோது, நீங்கள் நினைப்பதை விட உங்களுக்கு எப்போதும் அதிக நேரம் இருக்கிறது’ என்று என்னிடம் கூறினார். அது என் கிரிக்கெட் அணுகுமுறையை மாற்றியது. அதனால் இறுதியில் முடிவு என்ன என்பதை பற்றி யோசிக்காமல், தற்போது என்னசெய்யவேண்டும் என பகுப்பாய்ந்து அதை செயல்படுத்துகிறேன். வெஸ்ட் இண்டீஸுக்காக போட்டிகளை வெல்லவேண்டும் என்பதே என் இலக்கு என பேசியுள்ளார்.

தன்னுடைய கரியரை முடிக்கும்போது வெஸ்ட் இண்டீஸின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக ஹோப் முடிப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவருடைய தற்போதைய இலக்கு 2027 உலகக்கோப்பையாக இருக்கிறது!

shai hope, viv richards, Lara
INDvsWI| 162* ரன்கள் குவித்து ஷாய் ஹோப் அதிரடி.. இந்திய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் சாதனை வெற்றி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com