\
Lovlina Borgohain sealed asian games gold on birthday
Lovlina Borgohain sealed asian games gold on birthdayasian games

பிறந்தநாளில் தங்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை.. 5-0 என மாஸ் வெற்றி!

ஆசிய விளையாட்டில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் தன்னுடைய பிறந்தநாளிலேயே தங்கம் வென்று அசத்தினார்.
Published on: 
Summary

ஆசிய விளையாட்டில் 75 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டையில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன், சீன வீராங்கனை ஸியி பாவோவை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றார். 12 ஆண்டுகளுக்கு பிறகு மகளிர் குத்துச்சண்டையில் இந்தியா தங்கம் வென்றது. இதே நாளில் பிறந்த லவ்லினா, மேரி கோமிற்குப் பிறகு தங்கம் வென்ற இரண்டாவது இந்தியப் பெண் என்ற பெருமையை பெற்றார்.

இன்றைய ஆசிய விளையாட்டு போட்டியில் 75 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில், சீனாவின் ஸியி பாவோவை எதிர்கொண்டு விளையாடினார் இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன். போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்திய லவ்லினா, ஸியி பாவோவின் ஆக்ரோசமான மூவ்களை சமாளித்து 5-0 என்ற கணக்கில் தோற்கடித்தார்.

இதன்மூலம் 12 ஆண்டுகளுக்கு பிறகு மகளிர் குத்துச்சண்டையில் இந்தியா தங்கம் வென்றது அசத்தியது. அதனுடன் மேரி கோமிற்குப் பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் குத்துச்சண்டை தங்கப் பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியப் பெண் என்ற பெருமையை லவ்லினா பெற்றார். இந்த வரலாற்று சாதனை படைத்த இன்றைய தினம் லவ்லினாவின் பிறந்தநாள் என்பது இரட்டிப்பு சந்தோசமாக மாறியது.

கடந்த 1997ஆம் ஆண்டு இதே நாளில் அக்டோபர் 2ஆம் தேதி பிறந்த லவ்லினா, அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த முறை ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி வென்று சாதித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம், 2022 ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம், 2023-ல் உலக சாம்பியன் பட்டம், 2026 காமன்வெல்த் போட்டியில் வெள்ளி என வென்று இந்தியாவிற்கு பலமுறை பெருமை சேர்த்துள்ளார். நாட்டிற்காக அவருடைய அர்ப்பணிப்பை போற்றி 2020-ல் அர்ஜுனா விருது, 2021-ல் கேல் ரத்னா விருதும் இந்திய அரசு வழங்கியது.

நடப்பு ஆசிய விளையாட்டில் இந்தியா 15 தங்கம் 25 வெள்ளி மற்றும் 34 வெண்கலம் உட்பட மொத்தம் 75 பதக்கங்களை வென்றுள்ளது.

Lovlina Borgohain sealed asian games gold on birthday
30 நிமிடங்களில் 3 தங்கம்.. 1982-க்கு பின் இந்தியா படைக்கப்போகும் வரலாறு!
Lovlina Borgohain sealed asian games gold on birthday
44 ஆண்டுகால ஏக்கம்.. தங்கம் வென்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி.. ஒலிம்பிக்கிற்கு நேரடியாக தகுதி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com