\
shai hope
shai hopeicc

INDvsWI| 162* ரன்கள் குவித்து ஷாய் ஹோப் அதிரடி.. இந்திய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் சாதனை வெற்றி!

வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் அதிரடியான பேட்டிங்கால் 3வது ஒருநாள் போட்டியில் தோல்வியை தழுவியது இந்திய அணி.
Published on: 
Summary

இந்திய மண்ணில் 352 ரன்கள் இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ், கேப்டன் ஷாய் ஹோப்பின் 162* ரன்கள் அதிரடி ஆட்டத்தால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், ஒருநாள் போட்டியில் அதிகபட்ச இலக்கை சேஸ் செய்த சாதனையை வெஸ்ட் இண்டீஸ் படைத்தது. இந்தியா தொடரை கைப்பற்றியது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்ற இந்திய அணி 2-0 என தொடரை வென்றது. ஆனால் 3வது ஒருநாள் போட்டியில் தரமான பதிலடி கொடுத்த வெஸ்ட் இண்டீஸ் இந்தியாவை அவர்களின் சொந்த மண்ணில் வீழ்த்தியது.

kl rahul
kl rahulbcci

நியூ சண்டிகரில் பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கேஎல் ராகுலின் 129* ரன்கள் ஆட்டத்தால் 351 ரன்கள் குவித்தது. 352 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரராக விளையாடிய கேப்டன் ஷாய் ஹோப், கடைசிவரை ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.

shai hope
shai hopeicc

143 பந்துகளில் 17 பவுண்டரிகள் 3 சிக்சர்களை விளாசிய ஷாய் ஹோப் ஆட்டமிழக்காமல் 162 ரன்கள் குவித்தார். அவருக்கு பக்கபலமாக அமிர் ஜாங்கோ, கீமோ பால் இருவரும் 67, 44 ரன்கள் அடித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. ஆட்டநாயகன் விருதை வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப்பும், தொடர் நாயகன் விருதை இந்திய கேப்டன் சுப்மன் கில்லும் பெற்றுக்கொண்டனர்.

இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் போட்டியில் வென்றதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் சேஸ்செய்த அதிகபட்ச இலக்காக சாதனை படைத்தது. இதற்கு முன்பு 331 ரன்களே அவர்கள் சேஸ் செய்த அதிகபட்ச இலக்காக இருந்தது, அதை தற்போது முறியடித்து 352 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி.

shai hope
INDvsWI| 129* ரன்கள் விளாசிய கேஎல் ராகுல்.. 351 ரன்கள் குவித்த இந்தியா!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com