\
rahul dravids son appointed anvay karnataka U19 Captain
rahul dravidANI

தந்தை வழியில் மகன்.. 17 வயதில் ராகுல் டிராவிட் மகனுக்கு அடித்த ஜாக்பாட்!

ராஜ்கோட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற இந்தியா U-19 அணியின் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடினார்.
Published on: 
Summary

இந்தியாவின் தடுப்புச் சுவர் என அறியப்பட்ட முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டின் மகன் அன்வே டிராவிட் கர்நாடக அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில்,19 வயதுக்குட்பட்டோருக்கான ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார், அன்வே.

இந்தியாவின் தடுப்புச் சுவர் என அறியப்பட்ட முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், கிரிக்கெட்டில் எண்ணற்ற சாதனைகளுக்குச் சொந்தக்காரராக உள்ளார். அவர் இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளராகவும் இருந்து ரோகித் சர்மா தலைமையிலான அணி உலகக் கோப்பையை வெல்வதற்கும் காரணமாக இருந்தார். இந்த நிலையில், தந்தை எவ்வழியோ மகனும் அதே வழி என்பது அவரது மகன் அன்வே டிராவிட்டும் கிரிக்கெட்டில் கலக்கி வருகிறார். இந்த நிலையில், அன்வே டிராவிட், வினூ மங்கட் கோப்பைக்கான கர்நாடக அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்த ஒருநாள் போட்டித் தொடர், அக்டோபர் 8 முதல் 16 வரை விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.

anvay dravid
anvay dravid

வலது கை விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான அன்வே டிராவிட், சமீபத்தில் ராஜ்கோட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற இந்தியா U-19 அணியின் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடினார். செப்டம்பர் 18 அன்று ராஜ்கோட்டில் மழையால் பாதிக்கப்பட்ட முதல் U19 ஒருநாள் போட்டியில், அன்வே டிராவிட்டின் அதிரடியான பேட்டிங்கால், இந்திய U19 அணி, ஆஸ்திரேலிய U19 அணியை ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. அவர், வெறும் 18 பந்துகளில் 38 ரன்கள் விளாசினார். இதில், இரண்டு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களும் அடக்கம். அவரது ஆட்டமே இறுதியில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் காரணியாக அமைந்தது.

அணி விவரம் : அன்வே டிராவிட் (c & wk), நிதிஷ் ஆர்யா, துருவ் கிருஷ்ணன், R ரோஹித் ரெட்டி, ஆதர்ஷ் SJ, சுஜய் கோர்வார், வருண் படேல் (wk), அனிகேத் ரெட்டி, P தேஜஸ் ரெட்டி, சமர்த் M குல்கர்னி, வைபவ் C, கௌரவ் வெங்கடேஷ், ரத்தன் BR, ப்ரீதம் ராஜ், ப்ரீதம் ராஜ்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com