அடுத்த ஆதி குணசேகரன் வந்தாச்சு.. மாரிமுத்து இடத்தில் இவர்தான்!

எதிர்நீச்சல் சீரியலில் ஆதிகுணசேகரன் பாத்திரத்தை ஏற்று நடிப்பது யார் தெரியுமா? முதல் நாள் எண்ட்ரியே வெறித்தனம்... முழு விவரம் என்னன்னு இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
vela ramamoorthy
vela ramamoorthyfile image

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் யார் அடுத்த ஆதி குணசேகரன் என்ற கேள்வி கடந்த 2 வாரங்களாக நீடித்து வந்தது. மறைந்த நடிகர் மாரிமுத்து, ஆதி குணசேகரன் பாத்திரத்தை ஏற்று, அவராகவே வாழ்ந்திருந்தார்.

இவரது உடல்மொழி, வசனங்கள் அனைத்தும் பட்டிதொட்டி எங்கும் சென்று சேர்ந்தது. இந்நிலையில், கடந்த மாதம் எதிர்பாராத விதமாக மாரடைப்பு காரணமாக காலமானார் மாரிமுத்து.

vela ramamoorthy
மாரிமுத்துவை தொடர்ந்து மாற்றப்பட்ட நேரம்.. எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

அவரது மறைவு குடும்பத்தாருக்கு பெரிய இழப்பாக இருந்ததோடு, திரைத்துறைக்கும் பெரிய இழப்பாகவே பேசப்படுகிறது. இந்நிலையில், அவர் ஏற்று நடித்த ஆதி குணசேகரன் பாத்திரத்தில், அடுத்து நடிப்பது யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், அது வேல ராமமூர்த்திதான் என்று பேசப்பட்டது. அதைத்தொடர்ந்து, சீரியலில் ஆதி குணசேகரனின் ரீ எண்டிக்கான காட்சிகளும் ஷூட் செய்யப்பட்டன.

முன்னோட்ட காட்சிகளும் வெளியான நிலையில், முகத்தை காட்டாமலே சஸ்பென்ஸ் கொடுத்து வந்தது சீரியல் குழு. இந்நிலையில், ஆதி குணசேகரனின் மாஸ் எண்ட்ரி நேற்று ஒளிபரப்பானது. அதில், அடுத்த ஆதி குணசேகரன் வேல ராமமூர்த்தியேதான் என்று உறுதியாகியுள்ளது. தனது உடல்மொழி, வசனங்களால் ஆதி குணசேகரன் பாத்திரத்திற்கு மாரிமுத்து வலுசேர்த்தது போல, வேல ராமமூர்த்தியும் நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

vela ramamoorthy
‘ஏம்மா ஏய்.. உனக்கென்னம்மா ஆச்சு..’ - எதிர்நீச்சல் நடிகை மருத்துவமனையில் அனுமதி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com