‘ஏம்மா ஏய்.. உனக்கென்னம்மா ஆச்சு..’ - எதிர்நீச்சல் நடிகை மருத்துவமனையில் அனுமதி!

எதிர்நீச்சல் சீரியல் நடிகை நந்தினி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
nandhini
nandhinifile image

எதிர்நீச்சல் சீரியலில் ‘ஆதி குணசேகரன்’ என்ற பாத்திரத்தை ஏற்று தனது வசனத்தின் மூலமாக பட்டிதொட்டி எங்கு ஹிட் அடித்தவர்தான் நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து. உடல்நலக்குறைவால் மாரிமுத்து சமீபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது இழப்பு திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இவரது மறைவிக்கு பிறகு, அந்த கதாபாத்திரத்திற்கு வேறு நடிகர் இதுவரை தேர்வு செய்யப்படாததாகவே தெரிகிறது. அதற்கு ஏற்றபடி, ஆதி குணசேகரன் சொத்துகளை உறவினர்களுக்கு எழுதி வைத்துவிட்டு காணமால் போனதாக கதை நகர்கிறது.

என்ன இருந்தாலும், ஆதிகுணசேகரனையும், ‘ஏம்மா ஏய்’ என்ற அவரது வசனத்தையும் அதிகம் மிஸ் பண்ணுவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

hari priya insta page
hari priya insta page

இந்நிலையில், எதிர்நீச்சல் சீரியலின் முக்கிய பாத்திரமான நந்தினியாக நடிக்கும் நடிகை ஹரிப்பிரியாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பான போட்டோவை அவரே இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக பதிவிட்டதை பார்த்த ரசிகர்கள், ‘ஏம்மா ஏய்.. உனக்கென்னம்மா ஆச்சு’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இருந்தபோதும், தனக்கு என்ன ஆனது என்று நடிகை ஹரிப்பிரியா குறிப்பிடாதது, ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com