மாரிமுத்துவை தொடர்ந்து மாற்றப்பட்ட நேரம்.. எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

பலரது மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுவரும் எதிர்நீச்சல் சீரியலின் ஒளிபரப்பு நேரத்தை அதிரடியாக மாற்றியுள்ளது சீரியல் குழு.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் File image

ஆணாதிக்கம் மிக்க அண்ணன் - தம்பிகள், தங்கள் வீட்டு பெண்களை எவ்வாறு அடிமைப் படுத்துகிறார்கள் என்பதும், அதை அந்தப் பெண்கள் எதிர்கொண்டு எவ்வாறு மீண்டெழுகிறார்கள் என்பதையும் கதைக்களமாக கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் சீரியல்.

திருச்செல்வன் இயக்கத்தில் வெற்றிநடைபோடும் இந்த சீரியலின் ஹிட்டிற்கு மறைந்த நடிகர் மாரிமுத்துதான் முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது. ஆதி குணசேகரன் என்ற பாத்திரத்தை ஏற்று நடித்த மாரிமுத்து, அனைத்து குடும்பங்களையும் திரும்பி பார்க்க வைத்திருந்தார்.

எதிர்நீச்சல்
இரண்டு கர்ப்பிணிகள் உயிரிழப்பு.. மாற்றப்பட்டதா ஆவணங்கள்? போராட்டத்தில் குதித்த மருத்துவர்கள் சங்கம்

சமீபத்தில் அவர் உயிரிழந்துவிட்ட நிலையில், 2 வாரங்களுக்கும் மேலாக ஆதி குணசேகரன் பாத்திரம் இல்லாமல் காட்சிகள் நகர்த்தப்பட்டு வந்தன. தொடர்ந்து, ஆதி குணசேகரனாக வேல ராமமூர்த்தி தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில், ஆதிகுணசேகரன் பாத்திர மாற்றத்தை தொடர்ந்து, சீரியலின் ஒளிபரப்பு நேரத்தையும் மாற்றியுள்ளனர்.

சன் டீவியில் 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலை பார்த்த பின்னரே ரசிகர்கள் உறங்கச்செல்வதாக சமூகவலைதளத்தில் பேசப்பட்ட நிலையில், ஒளிபரப்பு நேரத்தை 9 மணிக்கு மாற்றியுள்ளது சீரியல் குழு. இதனால், இன்று முதல் 9 மணிக்கே எதிர்நீச்சலை பார்க்கலாம் என்று ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

எதிர்நீச்சல்
“ஆதி குணசேகரன பாக்கணும் வேணாமா..” எதிர்நீச்சல் தொடரில் எகிறும் எதிர்பார்ப்பு

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com