\
dorothy
dorothy dorothy / jio studios

‘எங்களுக்கு சுயமரியாதை தான் வேண்டும்.. காதல் அல்ல’ - டோரதி படத்தை விமர்சித்த திருநங்கை!

டோரதி திரைப்படம் மூன்றாம் பாலினத்தவர்களின் எமோசனோடு விளையாடுகிறது, எங்களுக்கு சுயமரியாதை தான் வேண்டுமே தவிர, காதல் அல்ல என திருநங்கை ஒருவர் விமர்சித்துள்ளார்.
Published on: 
Summary

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘டோரதி’ திரைப்படம் சமூகத்தின் பார்வையில் திருநங்கைகளின் வாழ்க்கையை சித்தரிக்க முயன்றாலும், காதல் காட்சிகள் மூலம் உணர்வுகளை தவறாக சித்தரிக்கிறது என விமர்சனம் எழுந்துள்ளது. திருநங்கைகளுக்கு சுயமரியாதை கிடைக்கவேண்டும், அவர்கள் அதிகாரத்தை நோக்கி செல்லவேண்டும் என்பதுபோல படம் காட்டப்படவில்லை என திருநங்கை ஒருவர் விமர்சித்து பேசியுள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் திரைப்படம் ’டோரதி’. இப்படம் திரையரங்கில் வெளியானதிலிருந்தே சில தரப்பினரால் விமர்சிக்கப்பட்டும், மற்றொரு தரப்பினரால் பாராட்டப்பட்டும் வருகிறது.

திரைப்படத்தை பொறுத்தவரையில் ஒரு ஆண் திருநங்கையாக மாறும் போது குடும்ப சூழல், சமூக கட்டமைப்பால் எப்படி பாதிப்பிற்குள்ளாகிறாள், இச்சமூகம் எப்படி அவரை பார்க்கிறது என்பதை மையமாக கொண்டு பேசப்பட்டுள்ளது. அதை உண்மைக்கு நெருக்கமாக படம்பிடித்து காண்பித்துள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

dorothy
dorothydorothy

இருப்பினும் படத்தின் முடிவில் நண்பர்களாக இருந்தவர்கள் காதலர்களாக மாறுவதும், முத்தக்காட்சியுடன் படத்தை முடித்ததும் சில தரப்பு ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இத்திரைப்படம் சுப்புவை கார்த்தி போய் நல்லாயிரு என வண்டியிலிருந்து இறக்கிவிட்டு செல்வதோடு படம் முடிந்திருக்க வேண்டும் அல்லது மீண்டும் தேடிப்போய் நான் உனக்காக இருக்கிறேன் என நண்பனாக கார்த்தி தோள் கொடுத்திருக்க வேண்டும் என்பது போல முடித்திருக்க வேண்டும். எதற்காக காதலிப்பது போல் காட்ட வேண்டும் என்ற கேள்வியை பலர் வைத்துவருகின்றனர்.

dorothy
அமெரிக்காவில் ஹிட்டடித்த 'Dorothy'.. சர்ச்சை, பாராட்டுக்கு மத்தியில் வசூல் நிலவரம் என்ன?

இந்தசூழலில் தான் திருநங்கை ஒருவர், ஏன் எங்களுடைய எமோசனோடு விளையாடுகிறீர்கள், எங்களுக்கு சுயமரியாதை தான் வேண்டுமே தவிர காதல் அல்ல என பேசும் காணொளி ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

dorothy
மண்டாடி 140 கோடி ரூபாய் வசூல்.. மங்காத்தா, துப்பாக்கி வசூலை விஞ்சி சாதனை!

எக்ஸ் தளத்தில் பகிரப்படும் வீடியோவில் பேசியிருக்கும் திருநங்கை, “எனக்கு டோரதி திரைப்படம் சுத்தமாக பிடிக்கவில்லை. ஒரு திருநங்கையாக இருந்துகொண்டு ஏன் இப்படத்திற்கு எதிராக பேசுகிறீர்கள் என நீங்கள் கேட்கலாம். ஆனால் என்னிடம் அதற்கான காரணங்களும், சில கேள்விகளும் இருக்கிறது. பொதுவாகவே ஒரு திருநங்கைக்கு எப்போது பிரச்னை ஆரம்பிக்கும் என்றால், அன்பை தேடிப்போகும்போது தான். ஆனால் மீண்டும் இத்திரைப்படத்தில் அதையே காண்பித்தது போல இருக்கிறது.

ஒவ்வொரு திருநங்கை சகோதரிகளும் இந்தப்பிரச்னையிலிருந்து வெளியே வந்து எவ்வளவோ சாதித்து கொண்டிருக்கிறார்கள், அவர்களை எல்லாம் மீண்டும் பழைய எமோசனில் தள்ளிவிட்டதுபோல படம் இருக்கிறது. ஏன் இத்திரைப்படத்தை திருநங்கையின் ‘Pain to Power' என நாங்கள் அதிகாரத்தை நோக்கி செல்வது போல காண்பிக்கவில்லை. படத்தில் அந்த நண்பன் அவரை திருநங்கையாகவே ஏற்றுக்கொண்டு சகநண்பனாக ஆதரவு கொடுப்பது போல முடித்திருக்க வேண்டும். எங்களுக்கு முதலில் சுயமரியாதை தான் வேண்டுமே தவிர காதல் அல்ல. மீண்டும் எங்களுடைய எமோசனில் ஏன் விளையாடுகிறீர்கள்” என பேசியுள்ளார்.

dorothy
Dorothy| ’டோரதி’ ஒரு மிகச்சிறந்த படைப்பு.. நடிகர் தனுஷ் பாராட்டு!

இவரின் பேச்சுக்கு பதிலளித்திருக்கும் சிலர், ’இவர் கூறுவதில் நியாயம் இருக்கிறது தான், இவர் திருநங்கைகளுக்கு சுயமரியாதையும், வேலைவாய்ப்பும், அதிகாரமும் வேண்டும் என்று கேட்கிறார். முன்னேறியவர்களை மனதில் வைத்து பேசுகிறார். ஆனால் தங்களை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொல்லும் திருநங்கைகளே அதிகம் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் அவர்களாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதானே டோரதி படத்தின் மையக்கருத்து’ என கருத்திட்டு வருகின்றனர்.

dorothy
திரையுலகம் சொல்ல மறந்த உன்னதப் படைப்பு ‘Dorothy'..! விஜய் ஆண்டனி பாராட்டு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com