மண்டாடி 140 கோடி ரூபாய் வசூல்.. மங்காத்தா, துப்பாக்கி வசூலை விஞ்சி சாதனை!
மண்டாடி திரைப்படம் 140 கோடி ரூபாய் உலகளவில் வசூல் செய்து, சூரியின் திரைவாழ்க்கையில் மைல்கல் சாதனையாக மாறியுள்ளது. மங்காத்தா மற்றும் துப்பாக்கி போன்ற முன்னணி திரைப்படங்களின் இந்திய வசூலை மிஞ்சியுள்ள மண்டாடி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இயக்குநர் மதிமாறன் இயக்கத்தில் சூரியின் நடிப்பில் வெளிவந்திருக்கும் மண்டாடி திரைப்படம், மீனவர்களின் வாழ்க்கையையும் அவர்களுக்கிடையே நடைபெறும் படகுப்போட்டியையும் மையமாக கொண்டு வெளியானது. சூரியுடன் மகிமா, சுஹாஸ், சத்யராஜ் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். கடல் விளையாட்டு, விறுவிறுப்பான திரைக்கதை, பின்னணி இசை, கேமரா ஒர்க் என அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரு தியேட்டர் விருந்தாக களமிறங்கிய மண்டாடியை பெருவாரியான ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.
இத்திரைப்படம் சூரியின் திரைவாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய மைல்கல் திரைப்படமாக மாறியுள்ளது. இப்படம் உலகளவில் 100 கோடி வசூலை ஈட்டு சாதித்திருந்த நிலையில், இந்தியாவில் மட்டும் தற்போது 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து வரலாறு படைத்துள்ளது.
செப்டம்பர் 30ஆம் தேதிவரை மண்டாடி திரைப்படம் உலகளவில் 140 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. Sacnilk.com அப்டேட்டின் படி மண்டாடி திரைப்படம் இந்தியாவில் மட்டும் மொத்தமாக 113 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இன்றைய நாளில் கூட 321 திரைகளில் தற்போது வரை 0.57 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
சூரியின் திரை வாழ்க்கையில் மைல்கல் திரைப்படமாக மாறியிருக்கும் மண்டாடி, நடிகர் அஜித்குமார் மற்றும் விஜய்க்கு டிரேட்மார்க் திரைப்படங்களாக கருதப்படும் மங்கத்தா மற்றும் துப்பாக்கி படங்களின் இந்திய வசூலை கடந்து சாதித்துள்ளது. அப்போதைய மார்க்கெட்டின் படி மங்காத்தா, துப்பாக்கியின் வசூல் கம்பேர் செய்ய முடியாதது தான் என்றாலும் இந்தியாவில் 100 கோடிக்கு மேல் வசூலித்திருக்கும் மண்டாடி, சூரியின் திரைவாழ்க்கையில் வரலாற்று வெற்றிப்படமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. IMDB அப்டேட்டின் படி மங்காத்தா, துப்பாக்கி திரைப்படங்கள் 100 கோடி ரூபாய்க்கு குறைவாகவே இந்திய அளவில் வசூலித்திருந்தன.

