
Michele Giannusa உருவாக்கியுள்ள சீரிஸ் `Ripple'. நான்கு வெவ்வேறு மனிதர்களை தொடர்புபடுத்தும் நிகழ்வுகள் பற்றிய கதை.
BenDavid Grabinski இயக்கத்தில் Vince Vaughn, James Marsden, Eiza González நடித்துள்ள படம் `Mike & Nick & Nick & Alice'. இரு நண்பர்கள் ஆபத்தான ஒரு க்ரைம் உலகத்தில் பயணிப்பதே கதை.
சுரேந்தர் இயக்கிய படம் `மாயபிம்பம்'. ஒரு நபருக்கு காதலால் ஏற்படும் சம்பவங்களே கதை.
சுஹாஸ், ஷிவானி நடித்துள்ள படம் `Hey Balwanth'. தன் தந்தையை பற்றி தெரிந்துகொள்ளும் ஹீரோ பற்றிய கதை.
வீர்தாஸ் இயக்கி நடித்த படம் `Happy Patel'. ரகசிய உளவாளியான ஹேப்பி படேல் தனது மிஷனுக்காக கோவா செல்கிறார். அங்கு நடக்கும் காமெடி கலாட்டாக்களே படம்.
விமல் நடித்த படம் `வடம்'. காளை வளர்ப்பு சம்பந்தமான பிரச்சனையும், அதை தொடர்ந்து வரும் சிக்கல்களுமே கதை
சஞ்சய் மிஷ்ரா, நீனா குப்தா நடித்த படம் `Vadh 2'. 2022ல் வெளியான Vadh படத்தின் தொடர்ச்சியாக, இந்த பாகத்தில் யாரை வாதம் செய்கிறார்கள் என்பதே கதை.
2024ல் வெளியான வாழ படத்தின் இரண்டாம் பாகம் சாவின் இயக்கத்தில் உருவாகியுள்ளது. கடந்த பாகத்தில் இருந்த நான்கு நபர்களுக்கு இம்முறை வாழ்வில் என்ன நடக்கிறது என்பதே கதை.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜெண்ட் சரவணன் நடித்துள்ள படம் `லீடர்'. மகளை காக்க ஒரு தந்தை எடுக்கும் அதிரடி முடிவே கதை.
ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் பரத் நடித்துள்ள படம் `காளிதாஸ் 2'. நகரத்தில் நடக்கும் பல கொலைகளை செய்பவன் யார் என்ற விசாரணையே கதை.
சமுத்திரக்கனி, கௌதம் மேனன் நடித்துள்ள படம் `கார்மேனி செல்வம்'. பணத்தேவைக்காக ஒரு மனிதன் எடுக்கும் முயற்சிகளே கதை.
சந்தோஷ் பிரதாப் நடித்துள்ள படம் `மரகதமலை'. மரகத மலையை சுற்றி நடக்கும் மர்மங்களே கதை.
சங்கீத் சோபன், நயனா நடித்துள்ள படம் `Raakaasa'. தனது காதலுக்காக சொந்த ஊர் வரும் இளைஞர் செய்யும் ஒரு தவறு, அந்த ஊரையே ஆபத்தில் சிக்க வைக்கிறது. அதன்பின் என்ன என்பதே கதை.
ஷர்வானந்த் நடித்துள்ள படம் `Biker'. பைக் ரேசர் நாயகனின் பயணமே கதை.
Aaron Horvath இயக்கியுள்ள படம் `The Super Mario Galaxy Movie'. சூப்பர் மேரியோ வீடியோ கேமை தழுவி உருவாக்கப்பட்டுள்ள அனிமேஷன் படம்தான் இது.
Zendaya, Robert Pattinson நடித்துள்ள படம் `The Drama'. எம்மா - சார்லி இடையேயான உறவில் வரும் சிக்கல்களே கதை.
Matt Bettinelli-Olpin - Tyler Gillett இயக்கத்தில் Samara Weaving நடித்து 2019ல் வெளியான படம் `Ready or Not'. இதன் இரண்டாம் பக்கமாக உருவாகியுள்ளது `Ready or Not 2: Here I Come'. இம்முறை நாயகிக்கு வரும் ஆபத்தில் இருந்து எப்படி தப்புகிறார் என்பதே கதை.