Manisharma emotional at Chennai Love Story event
Manisharmax

"வீட்டில் ஈ ஓட்டிக் கொண்டு... ஹார்மோனியம் எங்கே எனக் கூட..." - எமோஷனலான மணிசர்மா | Manisharma

தெலுங்கு திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் மணிசர்மா. பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்தவர், டோலிவுட் மட்டுமின்றி கோலிவுட், சாண்டில்வுட், பாலிவுட் வரை கொடி கட்டி பறந்தார்.
Published on

தெலுங்கு திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் மணிசர்மா. பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்தவர், டோலிவுட் மட்டுமின்றி கோலிவுட், சாண்டில்வுட், பாலிவுட் வரை கொடி கட்டி பறந்தார். விஜயகாந்தின் `நரசிம்மா' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர், ஏழுமலை, யூத், போக்கிரி, படிக்காதவன், சுறா எனப் பல படங்களில் ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார். 2023-க்கு பிறகு இவருக்கு பெரிய அளவில் படங்கள் அமையாததால் கொஞ்சம் சினிமாவில் இருந்து விலகியே இருந்தார்.

இப்போது `பேபி' என்ற தெலுங்குப் படம் மூலம் ஹிட் கொடுத்த சாய் ராஜேஷ் அடுத்து இயக்கியுள்ள `சென்னை லவ் ஸ்டோரி' படத்துக்கு இசையமைத்துள்ளார். தமிழ் தெலுங்கில் பைலிங்குவலாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் முதல் பாடல் Guruthundha வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மணிசர்மா பேசும்போது "வழக்கமாக காலையில் எழுந்து தினசரி வேலைகளை பார்ப்போம். அப்படி ஒருநாள் வீட்டில் ஈ ஓட்டிக் கொண்டிருந்த போது இவர் வந்தார். இவருடன் முன்பு பரிட்சயம் கிடையாது. சார் நான் ஒரு இயக்குநர் `பேபி' என்ற படம் செய்திருக்கிறேன். சரி இவர் எதற்கு இதை என்னிடம் சொல்கிறார் என்னால் இவருக்கு என்ன வேலை ஆகவேண்டும் என யோசித்துக் கொண்டிருந்தேன்.

Manisharma emotional at Chennai Love Story event
விஜயின் `ஜனநாயகன்' பட ரிலீஸ் தேதி குறிக்கப்பட்டுவிட்டதா? | Jana Nayagan | Vijay | H Vinoth

சார் நீங்கள் என் படத்துக்கு இசையமைக்க வேண்டும் என்றார். என்னுடைய ஹார்மோனியம் இப்போது எங்கே இருக்கிறது என்பது கூட எனக்கு தெரியாது என்றேன். உடனே அவரே போய் அதை தேடி எடுத்து, தூசி எல்லாம் தட்டி சுத்தமாக்கினார். உடனே அமர்ந்து வேலையை துவங்கினோம். ஒரு டியூன் கம்போஸ் செய்த பின்னர் தான் தெரிந்தது, இன்னும் எனக்குள் இருந்து இசை வருகிறது என்று. நல்ல நல்ல டியூன்களை வாங்கிக் கொண்டார். அருமையாக பணியாற்றி இருக்கிறோம். நம் அனைவருக்கும் நல்லது நடக்கட்டும் என இந்தக் குழுவுக்காக நான் பிரார்த்திக்கிறேன்." என்றார். பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் வாய்ப்பில்லாமல் இருக்கிறார் என்பதை பார்த்து ரசிகர்கள் பலரும், மேடையில் கலங்கும்படி பேசிய மணிசர்மாவின் பேச்சை பகிர்ந்து வருகின்றனர்.

Manisharma emotional at Chennai Love Story event
இன்ஸ்டாவில் அனைவரையும் அன்ஃபாலோ செய்த ரிஷப் ஷெட்டி! | Rishab Shetty | Instagram

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com