Ramayana movie glimpse video out now
Ranbir KapoorRamayana

பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ராமாயணா... வெளியான க்ளிப்ம்ஸ்! | Ramayana | Ranbir Kapoor

இன்செப்ஷன், இன்டர்ஸ்டெல்லர் மற்றும் டூன் திரைப்படங்கள் போன்ற படங்களுக்காக 8 அகாடமி விருதுகளை வென்ற விஎஃப்எக்ஸ் நிறுவனமான டிஎன்இஜி (DNEG) வழங்கியதே இந்தக் கவர்ச்சிகரமான காட்சிகள்.
Published on

ரன்பீர் கபூர், சாய் பல்லவி நடிப்பில் நிதேஷ் திவாரி இருபாகங்களாக இயக்கிவரும் படம் `ராமாயணா'. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இப்படம் பற்றிய அறிமுக வீடியோ ஒன்றை வெளியிட்டது படக்குழு. இப்போது இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு வெளியிட்டுள்ளனர்.

ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி, ராவணனாக யஷ், அனுமனாக சன்னி தியோல், லட்சுமணனாக ரவி தூபே, சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத் சிங், மண்டோதரியாக காஜல் அகர்வால், ஜடாயுவாக அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர். இப்போது வெளியாகியுள்ள இராமாயணா, உலகத்தை விவரிக்கும் இந்த வீடியோ பிரமிக்கவைக்கும் காட்சிகளுடன் தொடங்குகிறது. அட்டகாசமான VFX காட்சிகள் மூலமாக பல இதிகாச சம்பவங்கள் காட்சிகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இன்செப்ஷன், இன்டர்ஸ்டெல்லர் மற்றும் டூன் திரைப்படங்கள் போன்ற படங்களுக்காக 8 அகாடமி விருதுகளை வென்ற விஎஃப்எக்ஸ் நிறுவனமான டிஎன்இஜி (DNEG) வழங்கியதே இந்தக் கவர்ச்சிகரமான காட்சிகள்.

இப்படத்தின் இசையை ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் அமைத்துள்ளனர். இருபாகங்களாக வெளியாகவுள்ள இப்படத்தின் முதல் பாகம், இந்த ஆண்டு தீபாவளிக்கும், அடுத்த பாகம் 2027-ஆம் ஆண்டு அதே தீபாவளிக்கும் வெளியாகவுள்ளது.

Ramayana movie glimpse video out now
இன்ஸ்டாவில் அனைவரையும் அன்ஃபாலோ செய்த ரிஷப் ஷெட்டி! | Rishab Shetty | Instagram

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com