தளபதி 68-ல் நடிகர் மோகன்!

இயக்குநர் விஜய் ஸ்ரீஜியின் கதையை பெரிதும் விரும்பி 'ஹரா' திரைப்படத்தில் நாயகனாக மோகன் நடிப்பது குறிப்பிடத்தக்கது. அதையடுத்து தளபதி 68 படத்திலும் அவர் நடிக்கிறார் என உறுதியாகியுள்ளது.
நடிகர் மோகன்
நடிகர் மோகன்ட்விட்டர்

பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே முதலுதவி, குட் டச், பேட் டச் உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு சொல்லித் தருவது போல, ஐபிசி சட்டங்களையும் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் உருவாகி வருகிறது 'ஹரா' திரைப்படம். அதில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நாயகனாக மோகன் நடிக்கிறார். இயக்குநர் விஜய் ஸ்ரீஜி இப்படத்தை இயக்குகிறார்.

ஹரா
ஹராட்விட்டர்

80-களில் மென்மையான பாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் தனியிடம் பிடித்த மோகன், 'ஹரா'வில் அதிரடி வேடத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், ஹராவுக்கு அடுத்தபடியாக ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தளபதி 68' திரைப்படத்தில் மோகன் நடிக்கிறார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

நடிகர் மோகன்
“விஜய் படம் என்றாலே பிரச்னை வந்துவிடுகிறது” - செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

தற்போது ‘ஹரா' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கோத்தகிரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'ஹரா' திரைப்படத்தில் சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார், யோகி பாபு, அனுமோல், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், அனித்ரா நாயர், மற்றும் சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடிக்க, மிகுந்த பொருட்செலவில் இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

ஹரா
ஹராட்விட்டர்
நடிகர் மோகன்
முடிந்தது பூஜை.. ‘தளபதி 68’ படத்தில் ஹீரோயினாக இளம் நடிகை.. இவரும் நடிக்கிறரா? கசிந்த தகவல்கள்!

தளபதி 68 படத்தில் விஜய், தந்தை - மகன் மற்றும் எதிர்நாயகன் என 3 வேடங்களில் நடிப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரியங்கா மோகன், சிநேகா ஆகியோர் நாயகிகளாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

நடிகர் மோகன்
20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் விஜய்- சினேகா... Thalapathy68 அப்டேட்ஸ்..!

இவர்களுடன் இப்படத்தில் மோகன் எதிர்நாயகான நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே அமீர்கான் ஒப்பந்தமானதாக கூறப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com