முடிந்தது பூஜை.. ‘தளபதி 68’ படத்தில் ஹீரோயினாக இளம் நடிகை.. இவரும் நடிக்கிறரா? கசிந்த தகவல்கள்!

நடிகர் விஜய்யின் ‘தளபதி 68’ படத்தில் இளம் நடிகை ஒருவர் ஹீரோயினாக நடிக்க தேர்வாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
thalapathy 68
thalapathy 68file image

லியோ படம் வரும் 19ம் தேதி வெளியாக உள்ள நிலையில், தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் விஜய். படத்தை வெங்கட் பிரபு இயக்கும் நிலையில், யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இயக்குநர், இசைமைப்பாளர், தயாரிப்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் பூஜை இன்று நடப்பதாக தெரிகிறது.

மேலும், பூஜை முடிந்து நாளைய தினமே படப்பிடிப்பு வேலைகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. சில காட்சிகள் சென்னையிலும், சில காட்சிகள் வெளிநாட்டிலும் எடுக்கப்பட இருப்பதாக தெரிகிறது. படத்தில் கதாநாயகி யார் என்று இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், இளம் நடிகை மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்க இருப்பதாக புது தகவல் வெளியாகியுள்ளது.

ஹீரோயினாக இல்லையெனினும் முக்கிய பாத்திரத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. தமிழில் ‘கில்லாடி’, ‘கொலை’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மீனாட்சி சவுத்ரி, விஜய்யின் ரசிகை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் படத்தில் நடிகர் மைக் மோகனும் முக்கிய பாத்திரத்தை ஏற்று நடிக்க இருப்பதாக் கூறப்படுகிறது.

லியோ படத்தை போலவே, இந்த படத்திலும் பல நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாகவும், இதில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் ‘தந்தை - மகனாக’ நடிக்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது. விஜய் உடன் இருக்கும் படத்தை நடிகர் வைபவ் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதால் அவரும் நடிக்கிறாரோ என்ற ஐயத்தை கிளப்பியுள்ளது.

இதனிடையே, தளபதி68 பட பூஜை தொடர்பான படங்கள் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com