20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் விஜய்- சினேகா... Thalapathy68 அப்டேட்ஸ்..!

நேற்று பூஜை இன்று ஒரு பாடல் படப்பிடிப்பு என பரபரப்பாக வேலைகள் துவங்கியிருக்கிறது. ஆனாலும் இதில் மற்ற நடிகர்கள் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
Vijay | Sneha
Vijay | SnehaVaseegara

விஜய்யின் `லியோ’ வெளியாக இன்னும் இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகும். லியோ படத்தின் டிரெய்லரே இன்னும் வெளியாகவில்லை( 5ம் தேதி வெளியாகிறது). ஆனால் அதற்குள் விஜயின் அடுத்த படத்தைப் பற்றிய பரபரப்பு தொற்றிக் கொண்டது. அதன் காரணம் நேற்று வெங்கட்பிரபு - விஜய் கூட்டணியில் உருவாகும் `தளபதி 68’ படத்தின் பூஜை போடப்பட்டது தான். ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் 25வது படமாக உருவாகிறது தளபதி68. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜயுடன் தான் ஒரு படத்தில் கமிட் ஆகியிருக்கிறார் என்பதை முதன்முதலாக சூசமாக வெளியிட்டது யுவன் தான். அப்போதிருந்தே யார் அந்த இயக்குநராக இருக்கும் என்கிற கேள்விகள் சுற்ற ஆரம்பித்திருக்கிறது. ஒருவழியாக அது வெங்கட் பிரபு தான் என்பதை அவரே ட்விட் செய்து வெளியிட இணையம் முழுக்க தளபதி68 ஃபீவர் தான். எல்லா அப்டேட்டும் லியோ வெளியான பின்னர் தான் என வெங்கட் பிரபு எவ்வளவோ விளக்கம் சொன்னாலும், எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக கசிந்துவிடுகிறது. அப்படி நமக்குக் கிடைத்திருக்கும் சில தகவல்களின் தொகுப்பு தான் இது.

  • நேற்று பூஜை இன்று ஒரு பாடல் படப்பிடிப்பு என பரபரப்பாக வேலைகள் துவங்கியிருக்கிறது. ஆனாலும் இதில் மற்ற நடிகர்கள் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

  • இருந்தும் நேற்று இந்தப் பூஜையில் கலந்து கொண்டவர்களின் விவரங்கள் கசிந்ததால், அரசல் புரசலாக மற்ற நடிகர்கள் பற்றிய விவரங்கள் உலா வருகிறது.

  • AI தொழில்நுட்பம் மூலம் சீனியர் விஜயின் லுக்கில் சில மாற்றங்கள் கொண்டு வரவிருக்கிறார்கள். இதற்காகத்தான் கடந்த மாதம், வெங்கட்பிரபு, விஜய் இருவரும் அமெரிக்கா பறந்தார்கள்.

  • இந்தப் படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் நடிக்கிறார் என சொல்லப்படுகிறது.

  • ஒரு விஜய்க்கு ஜோடியாக சினேகா, இன்னொரு விஜய்க்கு மீனாக்‌ஷி சௌத்ரி ஜோடியாக நடிக்கிறாராம். ரவி தேஜாவின் கில்லாடி, விஜய் ஆன்டனியின் 'கொலை' படங்களில் நடித்தவர் மீனாட்சி சௌத்ரி.

Vijay | Sneha
BIGGBOSS Day 1: சிக்கலில் 6 பேர்.. பவா சொன்ன உணர்வுப்பூர்வ கதை.. முதல் நாளில் நடந்ததென்ன?
  • கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பின்னர் விஜயுடன் நடிக்கவிருக்கிறார் சினேகா. இந்தக் கதாபாத்திரத்தில் ஜோதிகா முதலில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. மெர்சல் சமயத்திலும் அப்பா விஜய்க்கு ஜோதிகா தான் ஜோடி என கிசுகிசுக்கப்பட்டது. பின்னர் அந்தக் கதாபாத்திரம் நித்யா மேனனுக்கு சென்றது. வசீகராவுக்குப் பின் மீண்டும் விஜயுடன் இணைகிறார் சினேகா.

  • ?

  • மேலும் இதில் மைக் மோகன், பிரசாந்த், லைலா, ஜெயராம் ஆகியோரும் நடிப்பதாக சொல்லப்படுகிறது. 'உன்னை நினைத்து' படத்தில் முதலில் விஜய் லைலாவை ஜோடியாக வைத்துத்தான் ஃபோட்டோஷூட் நடத்தப்பட்டது. பின்பு அந்த கதாபாத்திரம் சூர்யாவுக்குச் சென்றது. அதே போல், பிரசாந்த் பீக்கில் இருந்த சமயத்திலும் கூட அஜித்துடன் நடித்திருக்கிறார் அதே சமயம் விஜயுடன் இதுவரையில் நடித்ததில்லை.

  • நேற்று இந்தப் படத்தின் வேலைகள் துவங்கியதை சமூக வலைதளக்களில் அறிவித்தார் இயக்குநர் வெங்கட் பிரபு. ஆனால் படம் பற்றிய மற்ற விவரங்கள் நம்ம `லியோ’ ரிலீஸுக்கு அப்பறம் தான் என செக் வைத்திருக்கிறார்.

  • வெய்ட் பண்ணி பாப்போம், என்ன சொல்றீங்க நண்பா..!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com