தளபதி 68 ல் அமீர்கானா? என்னப்பா சொல்றீங்க

வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் நடிகர் விஜய் மூன்று கதாபாத்திரங்களில் தோன்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் தற்போது ஒரு சுவாரசிய கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
தளபதி 68 ல் அமீர்கானா
தளபதி 68 ல் அமீர்கானாமுகநூல்

‘லியோ’ திரைப்படத்தைத் தொடர்ந்து, வெங்கட் பிரபுவுடன் இணைந்துள்ளார் நடிகர் விஜய். அவரது 68 ஆவது படமான இந்தத் திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். படத்தில் விஜய், தந்தை - மகன் மற்றும் எதிர்நாயகன் என 3 வேடங்களில் நடிப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரியங்கா மோகன், ஸ்னேகா ஆகியோர் நாயகிகளாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் சமீப காலமாக தமிழ் திரைப்படங்கள் பெரும்பாலும் ”பான் இந்தியா” திரைப்படமாக அதிகளவில் எடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மலையாளம், தெலுங்கு, கன்னடம் , மலையாளம் , ஹிந்தி என்று பல மொழிகளிலிருந்தும் நடிகர்கள் தமிழ் சினிமாவில் ஒரு சில கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

உதாரணமாக விக்ரம், மாமன்னன் போன்ற திரைப்படங்களில் நடித்த மலையாள நடிகர் ஃபஹத் பாசில் தன் நடிப்பு திறமையால் மக்கள் மனதில் தனக்கென சிறப்பு இடம் பிடித்திருந்தார். மேலும் நடிகர் விஜய் ஓபராய், ஜாக்கி ஷெராப், சஞ்சய் தத் போன்றோரும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் ஐஸ்வர்யா கல்பாத்தி சமீபத்தில் நடிகர் அமீர்கானை சந்தித்து தான் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.”ஒரு மிகப்பெரிய நடிகருடன் சில நிமிடங்கள் செலவு செய்வேன் என்பதை நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை” என்றும் பதிவிட்டிருந்தார்.

ஐஸ்வர்யா கல்பாத்தி-அமீர்கான்
ஐஸ்வர்யா கல்பாத்தி-அமீர்கான்இன்ஸ்டாகிராம்

ஏஜிஎஸ் நிறுவனம் தற்போது விஜய், ஜெயம் ரவி நடிக்க இருக்கும் படங்களுக்கு தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் நிலையில் இவரின் அமீர்கானுடனான சந்திப்பானது ஒரு வேளை தளபதி அல்லது ஜெயம் ரவியின் படத்தில் அமீர்கான் வில்லன் வேடத்திலோ அல்லது முக்கிய வேடத்தில் நடிக்க வாய்ப்பு இருக்குமோ என்று ரசிகர்கள் யூகித்து வருகின்றனர். அப்படி இருந்தால் ரசிகர்களுக்கு திரை விருந்துதான் என்பதில் சந்தேகமில்லை.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com