காக்க காக்க விவகாரம் - “நியாயமான தொகையை நிர்ணயிக்க நீங்கள் தயாரில்லை”- பட்டுக்கோட்டை பிரபாகர் பதில்!

கௌதம் மேனனின் குற்றச்சாட்டுக்கு பதில் தரும் வகையில், பட்டுக்கோட்டை பிரபாகர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்.
பட்டுக்கோட்டை பிரபாகர் - கௌதம் வாசுதேவ் மேனன்
பட்டுக்கோட்டை பிரபாகர் - கௌதம் வாசுதேவ் மேனன்புதிய தலைமுறை

மின்னலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, சினிமாவில் தனக்கென தனி இடம்பிடித்தவர் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். தொடர்ந்து காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம், என்னை அறிந்தால்.... இன்னும் பல ஹிட் படங்களை அடுத்தடுத்து கொடுத்தார் ஜிவிஎம்.

இவற்றில் அவரது எழுத்தில் 2003-ல் உருவான ‘காக்க காக்க’ படம், இன்றும்கூட அவ்வளவு ஃப்ரெஷ்ஷாக இருக்கும். அதையொட்டிதான் தற்போது ஒரு சிக்கல் எழுந்துள்ளது. சமீபத்தில் இவர் Touring Talkies என்ற யூ-ட்யூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் நெறியாளர் மற்றும் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் சித்ரா லக்‌ஷ்மணன் இவரிடம், “தமிழ் சினிமா மீதுள்ள முக்கியமான விமர்சனம், ‘நம் இயக்குநர்கள் அவர்களே கதையெழுத நினைக்கின்றார்கள்; அதனால்தான் புதிய கதைகள் அதிகம் உருவாக்குவதில்லை’ என்பது. அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?” என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.

Touring Talkies யூ-ட்யூப் சேனலுக்கு கௌதம் வாசுதேவ் மேனன் பேட்டி
Touring Talkies யூ-ட்யூப் சேனலுக்கு கௌதம் வாசுதேவ் மேனன் பேட்டி

அதற்கு பதிலளித்த கௌதம் வாசுதேவன் “நான் என் படங்களுக்காக எப்போதும் கதாசிரியர்களை சந்திருக்கிறேன். சொல்லப்போனால் பெரிய பெரிய கதாசிரியர்களை என் படத்துக்கு ஒவ்வொருமுறையும் அணுகியிருக்கிறேன். சில காரணங்களால் அதை தொடர முடியாமல் போகும். உதாரணத்துக்கு அந்த எழுத்தாளர்கள் தந்த முதல் வடிவம் என்னைத் திருப்திப் படுத்தாமல் இருந்துள்ளன. சில சமயம், நேரம் கைகூடாமல் இருந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் நானே எழுதத் துவங்கினேன்” என்று கூறியதுடன் அவர் சந்தித்த சில கதாசிரியர்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார். அதில் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரின் பெயரும் இருந்துள்ளது.

பட்டுக்கோட்டை பிரபாகர் - கௌதம் வாசுதேவ் மேனன்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 30 | அஞ்சாதே ‘தயா’ | வில்லன்தனத்தை காட்ட வசனம் எதற்கு?

இதையடுத்து பட்டுக்கோட்டை பிரபாகர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில் அவர்,

“மதிப்பிற்குரிய இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் அவர்களுக்கு... வணக்கம்.

தங்கள் திரைப்படங்களின் திரை மொழியில் உள்ள தனித்துவத்தையும், காதலைக் காதலித்து காதலுடன் காட்சிப்படுத்தும் நேர்த்தியையும் ரசிப்பவன் நான்.

சமீபத்தில் சாய் வித் சித்ரா என்கிற பேட்டி நிகழ்வில் ‘நீங்கள் ஏன் பிரபல நாவலாசிரியர்களின் கதைகளைப் படமாக்குவதில்லை’ என்கிற சித்ரா லட்சுமணன் அவர்களின் கேள்விக்குப் பதில் அளிக்கையில்..

‘நான் பல பிரபல கதாசிரியர்களை அணுகியுள்ளேன். அவர்கள் தந்த முதல் வடிவம் என்னைத் திருப்திப் படுத்தாததால்...நானே எழுதத் துவங்கினேன்’ என்று பதில் சொல்லியிருக்கிறீர்கள். அந்தக் கதாசிரியர்களின் பட்டியலில் என் பெயரையும் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

பட்டுக்கோட்டை பிரபாகர்
பட்டுக்கோட்டை பிரபாகர்

இது தொடர்பாக ஒரு விளக்கம் தரவேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டுள்ளது.

காக்க காக்க திரைப்படத்தின்போதுதான் நீங்கள் என்னைச் சந்தித்தீர்கள். பிறகு உங்கள் அலுவலகத்திற்கு நான் வந்தேன். காக்க காக்க கதையின் சுருக்கத்தை விவரித்தீர்கள். அதன் பிறகு அந்தப் படத்தில் பணியாற்ற தொகை பேசினீர்கள். அப்போது நான் வாங்கிக்கொண்டிருந்ததை விடவும் மிகவும் குறைவாகவே குறிப்பிட்டீர்கள். என் சங்கடத்தைத் தெரிவித்தேன். அது முதல் காப்பி அடிப்படையில் நீங்களே தயாரிப்பாளராக செயல்படுவதால் நீங்கள் குறிப்பிட்ட தொகைதான் முடியும் என்று உறுதியாகச் சொன்னீர்கள்.

பட்டுக்கோட்டை பிரபாகர் - கௌதம் வாசுதேவ் மேனன்
‘சேச்சி சேட்டன்மார்...’ - கேரள ரசிகர்களின் அன்புமழையில் விஜய்... இரவு 2 மணி வரை அலைமோதிய கூட்டம்!

ஒரு படத்தில் திரைக்கதையும், வசனமும் எத்தனை முக்கியம் என்று நன்கு உணர்ந்த நீங்கள் அன்று கதாசிரியருக்கு உரிய நியாயமான தொகையை நிர்ணயிக்கத் தயாராய் இல்லை.

அதனால் அந்தப் படத்திற்காக நான் ஒரு வரிகூட எழுதவில்லை. உண்மை இப்படியிருக்க.. பொத்தாம் பொதுவாக கதாசிரியர்கள் கொடுத்த முதல் வடிவம் திருப்தியாய் இல்லை என்கிற பதிலில் என் பெயரும் சொல்லப்பட்டதால்.. விளக்கம் தர வேண்டியதாகிறது.

ஒரு வேளை 21 வருடங்கள் முன்பு நிகழ்ந்த சம்பவம் என்பதால் யாருக்கும் மறதி என்பது இயல்பானது என்று எடுத்துக்கொள்கிறேன்.

உங்கள் கதைக்கு மெருகேற்றும் பணிக்கு அழைக்காமல் திரைக்கேற்ற கதைகள் உங்களிடம் இருக்கிறதா என்று என்னை அணுகியிருந்தால்.. ஒருவேளை நாமிருவரும் இணைந்து சில சுவாரசியமான படைப்புகளைத் தந்திருக்க முடியும் என்று இப்போது யோசிக்கிறேன். நன்றி”

என்று குறிப்பிட்டுள்ளார்.

பட்டுக்கோட்டை பிரபாகர் - கௌதம் வாசுதேவ் மேனன்
‘தல போல வருமா...’ - டீச்சர், செஃப், நண்பன்... பைக் பயணத்தில் All in All-ஆக அஜித்! #ViralVideos

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com