‘தல போல வருமா...’ - டீச்சர், செஃப், நண்பன்... பைக் பயணத்தில் All in All-ஆக அஜித்! #ViralVideos
மத்தியப் பிரதேசத்திற்கு பைக்கில் சக ரைடர்ஸ் உடன் சென்றுள்ள நடிகர் அஜித், அவர்களுக்கு உணவு சமைத்து கொடுத்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகின்றன.
அத்துடன் சக ரைடர் ஒருவருக்கு பைக் ஓட்டும் நுணுக்கத்தையும் அஜித் பகிர்ந்துள்ளார். இது தொடர்பான காணொளியும் வெளியாகியுள்ளது. நடிகர் ஆரவ் இதை தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தற்போது விடா முயற்சி திரைப்படத்தில் நடித்து வரும் அஜித்குமார், சமீபத்தில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிறிய அறுவை சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித்தின் அடுத்தப்படம், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனோடு அமைய உள்ளது. அப்படத்துக்கு Good Bad Ugly என பெயரிடப்பட்டுள்ளது.
முன்னதாக நடிகர் விஜய் தனது அடுத்தப் படமான G.O.A.T படப்பிடிப்புக்காக கேரளா சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் அங்கு ரசிகர்கள் மழையில் விஜய் நனைந்துவரும் நிலையில், இங்கு அஜித் அந்த அன்பை இணையத்தில் பெற்றுவருகின்றார். இருவருமே தற்போது கோலிவுட்டின் டாக் ஆஃப் தி டவுன் ஆகியுள்ளார்கள்.