மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 30 | அஞ்சாதே ‘தயா’ | வில்லன்தனத்தை காட்ட வசனம் எதற்கு?

30-வது வாரமான இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் அஞ்சாதே திரைப்படத்தில் பிரசன்னா ஏற்று நடித்திருந்த தயா கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.
அஞ்சாதே படம் - நடிகர் பிரசன்னா
அஞ்சாதே படம் - நடிகர் பிரசன்னாட்விட்டர்

(தொடரின் முந்தைய அத்தியாயங்களை, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்...)

சாக்லேட் பாயாக நிலைபெற்று விட்ட ஒரு ஹீரோவை முற்றிலும் எதிரான இன்னொரு வண்ணத்தில் சித்திரிப்பதற்கு சம்பந்தப்பட்ட இயக்குநருக்கு துணிச்சலும் புதுமையான சிந்தனையும் இருக்க வேண்டும். அதுவரை ரொமான்டிக் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த நடிகர் மாதவனை முரட்டுத்தனமான ரவுடியாக சித்திரித்த மணிரத்னம் ஓர் உதாரணம் (ஆய்த எழுத்து).

அஞ்சாதே படம் - நடிகர் பிரசன்னா
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | கோபத்தின் வெப்பமும் அன்பின் குளிர்ச்சியும் ஆய்த எழுத்து இன்பா

இந்த வரிசையில் மிஷ்கினையும் சேர்க்கலாம்.

2002-ல் ‘ஃபைவ்ஸ்டார்’ திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் பிரசன்னா அதுவரை நடித்துக் கொண்டிருந்ததெல்லாம் மென்மையான, ரொமான்டிக் ஹீரோ பாத்திரங்களே. அவருடைய தோற்றத்திற்கும் அதுதான் பொருந்தி வந்தது.

நடிகர் பிரசன்னா
நடிகர் பிரசன்னா

ஆனால் சுமார் ஆறே வருடங்களில், அதாவது 2008-ல் வெளியான ‘அஞ்சாதே’ திரைப்படம், பிரசன்னாவை முற்றிலும் புதிய தோற்றத்திலும் மிரட்டலான நடிப்பிலும் காட்டி பார்வையாளர்களை ஆச்சரியமடைய வைத்தது.

இந்தப் படத்தில் பிரதான பாத்திரங்களில் நடித்த நரேன், அஜ்மல் ஆகியோருக்கு நிகரான கவனத்தை ‘தயா’ என்கிற பாத்திரத்தில் வில்லனாக நடித்த பிரசன்னா பெற்றார்.

அஞ்சாதே - 36 நாட்களில் எழுதப்பட்ட திரைக்கதை

மிஷ்கின் இயக்கிய முதல் திரைப்படமான ‘சித்திரம் பேசுதடி’ வணிகரீதியான வெற்றியை அடைந்தது. எனவே அடுத்ததாக தான் உருவாக்க விரும்பிய லட்சியத் திரைப்படங்களை எடுப்பதற்கு முற்பட்டார் மிஷ்கின். ‘நந்தலாலா’ உள்ளிட்ட சில ஸ்கிரிப்ட்டுகளை தயாரிப்பாளர்களிடம் சொல்லி ஒப்புதல் வாங்க முயன்ற போது ‘இதில் வணிகரீதியான அம்சங்கள் இல்லையே’ என்கிற நிராகரிப்பையே எதிர்கொள்ள நேர்ந்தது. அது சார்ந்த கோபத்தில் எழுதியதுதான் ‘அஞ்சாதே’. 36 நாட்களில் இதன் திரைக்கதை எழுதப்பட்டது. இந்தப் படம் வெளியான பின்பு விமர்சன ரீதியாகவும் வணிகரீதியாகவும் வெற்றி பெற்றது.

அஞ்சாதே படம்
அஞ்சாதே படம்
‘அஞ்சாதே’ திரைப்படத்தின் ஒன்லைன் சுவாரசியமானது. இரண்டு நண்பர்கள் சூழல் காரணமாக நேரெதிர் திசைகளில் பயணித்தால் அந்த முரண் என்னவாக மாறும் என்பதுதான் இந்தத் திரைப்படத்தின் மையம்.

காவல்துறையில் எஸ்.ஐ. ஆவதை கனவாக வைத்திருப்பவன் கிருபா. ஆனால் சத்யாவோ பொறுப்பில்லாமல் அடிதடியில் இறங்கும் முன்கோபக்காரன். அவர்களது பாதையை வாழ்க்கை என்னும் சூதாட்டம் கலைத்துப் போடுகிறது. சத்யா போலீஸ் அதிகாரியாகிறான். இதன் எதிர்முனையில் தீமைகள் செய்யும் ஒரு கூட்டத்தின் கைப்பாவையாகிறான் கிருபா.

அஞ்சாதே படம் - நடிகர் பிரசன்னா
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 24 | கொலைக்கருவிகளை உற்பத்தி செய்யும் அரசியல்வாதி சமுத்திரக்கனி

தயா - சாத்தானின் உருவகம்

சத்யவான் என்கிற சத்யாவிற்கும் கிருபா என்கிற கிருபாகரனுக்கும் இடையிலான பாதை மாறுவதற்கு ஏதுவாக சகுனியாக உள்ளே வருபவன்தான் ‘தயா’ என்கிற தீனதயாளன். நேர்மையான வழியில் சென்றும் பெற முடியாத எஸ்.ஐ. பணியை குறுக்கு வழியில் அடைந்து விடும் சத்யா மீது கோபத்தில் இருக்கிறான் கிருபா. இந்தச் சூழலை கச்சிதமாகப் பயன்படுத்திக் கொள்ளும் தயா, கிருபாவை தனக்கேற்ற ஆயுதமாக மாற்றுகிறான். சத்யாவிற்கு எதிராக ஏவி விடுகிறான்.

தயா என்கிற இந்த வில்லன் பாத்திரத்தை சுவாரசியமாக வடிவமைத்திருந்தார் மிஷ்கின். அகிரா குரசேவாவின் ஆராதகர் என்பதாலோ, என்னவோ, தயாவின் புறத்தோற்றம் ஒருவகையில் சாமுராய் வீரனை நினைவுப்படுத்துகிறது. ஆனால் தன் வீரத்தையும் அறிவையும் தீய வழியில் செலவழிப்பவன் தயா. இளம் பெண்களைக் கடத்திச் சென்று பணம் சம்பாதிக்கும் ஒரு கூட்டத்தின் மாஸ்டர் மைண்ட் ஆக இருக்கிறான்.

அஞ்சாதே படம் - நடிகர் பிரசன்னா
அஞ்சாதே படம் - நடிகர் பிரசன்னா

நடுவகிடு எடுத்த, கண்களை மறைக்கும் வகையில் தொங்கும் நீளமான தலைமுடி, ஜிப்பா, ஜீன்ஸ் பேண்ட், வலது கையில் கட்டப்பட்டிருக்கும் கடிகாரம், கூர்மையான பார்வை, நயவஞ்சகமான சிரிப்பு, எந்தச் சூழலுக்கும் பதட்டப்படாத நிதானம் என்று தயாவின் புறத்தோற்றமும் அகத்தோற்றமும் கச்சிதமாக வடிமைக்கப்பட்டிருந்தது.

‘பயம் உள்ள இருக்கணும். வெளிய காட்டக்கூடாது’

எந்தவொரு சூழலிலும் பதட்டமே அடையாத, ஒரு பிரச்சினையை தர்க்கப்பூர்வமாக தீர்க்க நினைக்கும் தயாவின் குணாதிசயத்திற்கு ஒரு காட்சியை உதாரணம் சொல்லலாம். தயாவின் வலது கரம் போல இருப்பவன் லோகு (பாண்டியராஜன்). தயாவின் துணிச்சலுக்கு நேரெதிராவன். சின்ன பிரச்சினை வந்தாலே பதட்டமடைந்து விடுவான். காவல்துறையில் மாட்டிக் கொள்ளும்படியான ஒரு சிக்கல் ஏற்படும் போது பதட்டமடையும் லோகு “நாம மாட்டிப்போம் போல இருக்கு. தயாவுக்கு என்ன.. பீகாருக்கு ஓடிடுவான். அவனுக்கு அங்க ஆள் இருக்கு” என்று லோகு பதற, அவனுடைய நெஞ்சிற்கு நேராக சட்டென்று துப்பாக்கியை நீட்டுகிறான் தயா.

அஞ்சாதே படம் - நடிகர் பிரசன்னா
அஞ்சாதே படம் - நடிகர் பிரசன்னா

“இப்ப.. இந்தச் சமயத்துல.. உனக்கு எது பிரச்சினை.. போலீஸா.. துப்பாக்கியா.. யோசி” என்று பாவனையாக மிரட்டியவுடன், பிறகு வரப்போகிற போலீஸை விடவும் தற்போது முன்னால் நிற்கும் துப்பாக்கிதான் லோகுவிற்கு பெரிய பிரச்சினையாக மாறி விடுகிறது. துப்பாக்கி அகற்றப்பட்டதும் லோகு நிம்மதிப் பெருமூச்சு விடுகிறான். சில நிமிடங்களுக்கு முன் பதட்டத்தில் இருந்தவன்தான் அவன். இந்தக் காட்சியின் வழியாக தயாவின் நிதானவுணர்வு பார்வையாளர்களுக்கு சரியாக கடத்தப்பட்டு விடுகிறது. “பயம் இருக்கணும். ஆனா உள்ள இருக்கணும். வெளிய காட்டக்கூடாது” என்பது தயா இன்னொரு இடத்தில் பேசும் வசனம்.

அஞ்சாதே படம் - நடிகர் பிரசன்னா
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 23 | உடலசைவிலேயே அசாத்திய நடிப்பை கொடுத்த ‘முதல்வன்’ பட ரகுவரன்

கைகடிகாரம் சொல்லும் ஆருடம்

பொதுவான வழக்கத்திற்கு மாறாக வலதுகையின் மணிக்கட்டில் கைகடிகாரம் கட்டிக் கொள்ளும் பழக்கம் சிலரிடம் உண்டு. (எம்.ஜி.ஆர் ஓர் உதாரணம்). அவர்களுக்கு அது பிடித்திருக்கலாம் அல்லது தங்களை வித்தியாசமானவர்களாக காட்டிக் கொள்ளும் முயற்சியாக இருக்கலாம். தயாவும் இப்படியே. தன்னுடைய வலதுகையில் கட்டியிருக்கும் கைகடிகாரத்தை அவ்வப்போது உற்றுப் பார்க்கிறான். அதன் படி சில முடிவுகளை எடுக்கிறான்.

அஞ்சாதே படம் - நடிகர் பிரசன்னா
அஞ்சாதே படம் - நடிகர் பிரசன்னா

இறுதியில் அவனுடைய வீழ்ச்சி ஆரம்பிக்கும் போது கடிகாரம் நகராமல் உறைய ஆரம்பிக்கிறது. அந்த சமிக்ஞையை அலட்சியப்படுத்தி விட்டு செல்கிறான். தன்னுடைய மரணத்தின் போது கூட கடிகாரத்தை உற்றுப் பார்க்கிறான். அது நின்று போயிருக்கிறது. இப்படியொரு சுவாரசியமான கேரக்டர் ஸ்கெட்சை வரைந்திருக்கிறார் மிஷ்கின்.

மது அருந்துவதற்கென்றே தனியாக ஒரு பித்தளை தம்ளரை வைத்திருக்கிறான் தயா. தயா தடாரென்று அறிமுகமாகும் ஆரம்பக்காட்சியே வித்தியாசமாக இருக்கிறது. மதுவருந்தும் இடத்தில் ஒரு சில்லறைத் தகராறு. வம்பிழுத்து விடும் லோகுவை அவனுடைய இடத்திற்கே வந்து நையப் புடைத்து விடுவான் சத்யா. லோகுவைக் காப்பாற்ற வரும் ஆட்களும் அடிவாங்குவார்கள்.

அஞ்சாதே படம் - நடிகர் பிரசன்னா
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 17 | நினைவுகள் உறைந்து போன ஒரு தகப்பனாக எம்.எஸ்.பாஸ்கர்...!

இந்தச் சமயத்தில்தான் தயாவின் என்ட்ரி. தனது வலதுகரமான லோகுவைக் காப்பாற்ற தயா முற்பட வேண்டியதுதான் லாஜிக். ஆனால் மூக்கில் ரத்தம் வழிய விழுந்து கிடக்கும் லோகுவின் கழுத்தைப் பிடித்து மூர்க்கமாகத் திருப்பி விடுவான் தயா. ‘அநாவசியமான வம்பை விலைக்கு வாங்கி தன்னை அம்பலப்படுத்திக் கொள்ளக்கூடாது’ என்பது இதன் பாடம்.

அஞ்சாதே படம் - நடிகர் பிரசன்னா
அஞ்சாதே படம் - நடிகர் பிரசன்னா

சண்டை முடிந்து ஆவேசமாக கிளம்பும் சத்யாவிடம் ‘நான் தயா’ என்று நட்புக் கரம் நீட்டுவான் தயா. ஆனால் அதை ஏற்காமல் சத்யா கிளம்பி விடுவான். பிறகு தன் கையை தானே பற்றிக் கொண்டு ‘தயா’ என்று புன்னகைப்பான். பெண் சபலம் கொண்ட தயா, கிருபாவின் தங்கை குளிப்பதை ஒளிந்திருந்து பார்த்து கட்டிப்பிடிக்க அதன் காரணமாக பலருக்கும் முன்பு தயாவை அடித்து உதைப்பான் சத்யா. இங்கிருந்துதான் தயாவின் பகைமைப்புள்ளி ஆரம்பமாகும்.

டெரரான வில்லன் பாத்திரத்தில் பிரகாசித்த பிரசன்னா

எஸ்.ஐ பணி கிடைக்காத விரக்தியில் பாரில் அமர்ந்திருக்கும் கிருபாவிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் தயா, மெல்ல நட்பாகி “உன்னால சத்யாவை எதுவுமே செய்ய முடியாது” என்று அவனுடைய அகங்காரத்தை மெல்ல தூண்டி விடுவான்.

அஞ்சாதே படம் - நடிகர் பிரசன்னா
அஞ்சாதே படம் - நடிகர் பிரசன்னா

அஞ்சாதே படம் - நடிகர் பிரசன்னாஏற்கெனவே சத்யாவின் மீதுள்ள வெறுப்பில் இருக்கும் கிருபாவிடம் இந்த யுக்தி நன்றாக வேலை செய்து பற்றிக் கொண்டு எரியும். “உன் பிரெண்டு உன்னை ஏமாத்திட்டான். நான் கெட்ட தொழில் பண்றவன்தான். ஆனா நான் உன்னை ஏமாத்த மாட்டேன்” என்று லாஜிக்காக சொல்லி நம்பிக்கையை வளர்ப்பான். ஆனால் போலீஸில் மாட்டிக் கொள்ள நேரும் போது கூட இருக்கும் தன்னுடைய வலது கரங்களையே (லோகு, சப்பை) மனச்சாட்சி துளியும் இன்றி சாகடிப்பான்.

வில்லன் என்பதற்காக ‘ஆ.. ஊ’வென்று வெறிக்கூச்சல் இட வேண்டியதில்லை. பொழுது பூராவும் ஹீரோவுடன் மல்லுக்கட்ட வேண்டியதில்லை.

அஞ்சாதே படம் - நடிகர் பிரசன்னா
அஞ்சாதே படம் - நடிகர் பிரசன்னா

வசனமே அதிகம் பேசாமல் மிரட்டலான உடல்மொழியிலேயே வில்லன்தனத்தை காட்ட முடியும் என்று இந்தக் கேரக்டரை வடிவமைத்த மிஷ்கினையும் அதைச் சிறப்பாக வெளிப்படுத்திய பிரசன்னாவின் ‘தயா’ என்கிற பாத்திரத்தையும் மறக்கவே முடியாது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com