‘சேச்சி சேட்டன்மார்...’ - கேரள ரசிகர்களின் அன்புமழையில் விஜய்... இரவு 2 மணி வரை அலைமோதிய கூட்டம்!

கேரளாவில் நேற்று ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய் மலையாளத்தில் உரையாற்றினார்.
கேரளாவில் விஜய்
கேரளாவில் விஜய்ட்விட்டர்

கடந்த 2010ஆம் ஆண்டு காவலன் படத்தின் படப்பிடிப்புக்காக கேரளா சென்ற விஜய் அதன் பின் எந்த படப்பிடிப்புக்கும் அங்கு செல்லவில்லை. இந்நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் G.O.A.T. படத்தின் படப்பிடிப்புக்காக கேரளா சென்றுள்ளார். அப்படி 14 ஆண்டுகள் கழித்து படப்பிடிப்புக்காக கேரளா சென்றுள்ள நடிகர் விஜய்க்கு அங்குள்ள அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

இதில் நேற்று ரசிகர்களை நேரில் சந்தித்த நடிகர் விஜய் அவர்களிடம் மலையாளத்தில் உரையாற்றினார். அந்தக் காணொளி, இணையத்தை ஆக்கிரமித்துள்ளது!

விஜய் பேசுகையில், “ஓணம் பண்டிகையின் போதும் எத்தனை சந்தோஷம் இருக்குமோ அதே மகிழ்ச்சியை இப்போது உங்கள் முகத்தில் நான் பார்க்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள எனது நண்பா நண்பிகள் போல நீங்களும் வேற லெவல்” என மலையாளத்தில் கூறினார்.

இதற்கு சற்று முன்பு ரசிகர் ஒருவர் விஜய்யை சந்திக்க வரும்போது விஜய்க்கு கொடுப்பதற்காக மாலை ஒன்றை கொண்டு வந்திருந்தார். அதைக்கண்ட விஜய், ‘இதோ இதோ... நான் வரேன்’ என சைகை காட்டியபடி வேகமாக அந்த ரசிகரை நோக்கி ஓடிவந்தார்.

வந்தவர், மாலையை ரசிகரின் கையால் போட்டுக்கொண்டார். இந்த வீடியோவை விஜய் ஃபேன்ஸ் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து நேற்று நள்ளிரவு 2 மணியளவில் மீண்டும் கூடிய ரசிகர் கூட்டத்தையும் சந்தித்தார் விஜய். அப்போது கூட்டத்தில் இருந்த குழந்தையொன்றை தூக்கி கொஞ்சியது, ரசிகருக்கு ஆட்டோகிராஃப் போட்டுக்கொடுப்பது என சில நிமிடங்கள் இருந்துள்ளார். இவையாவும் அவரது கேரள ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

முன்னதாக கடந்த 18-ம் தேதி அவர் கேரளா சென்றிருந்தார். அன்றைய தினம் அவரது காரை நகரகூட விடாமல் ரசிகர்கள் அன்புமழை பொழிந்தனர். இதில் அவர் கார் கண்ணாடி உடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் விஜய்
த.வெ.க தலைவர் விஜய்யை சூழ்ந்த கேரள ரசிகர்கள்... உற்சாக வரவேற்பில் உடைந்த கார் கண்ணாடி...!

தொடர்ந்து மார்ச் 19-ம் தேதி ரசிகர்ளோடு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார். இவற்றை தொடர்ந்துதான் நேற்று (மார்ச் 20) ரசிகர்கள் மத்தியில் மலையாளத்தில் சம்சாரித்து மகிழ்ந்துள்ளார் தளபதி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com