பராசக்தி படத்திற்கு எதிர்மறை விமர்சனங்களை பரப்புவதாக விஜய் ரசிகர்களை குற்றஞ்சாட்டிய தயாரிப்பாளர்
பராசக்தி - ஜனநாயகன்web

விஜய் ரசிகர்களுக்கு பராசக்தி தரப்பு எச்சரிக்கை.. திட்டமிட்டே படத்தை சிதைப்பதாக பதிவு! என்ன நடந்தது?

பராசக்தி படத்தை திட்டமிட்டே மோசமாக சித்தரித்து வருவதாக விஜய் ரசிகர்களை குற்றஞ்சாட்டி பராசக்தி படத்தின் க்ரியேட்டிவ் ப்ரொடியூசர் இணையத்தில் பதிவிட்டிருப்பது பேசுபொருளாக மாறியுள்ள்து.
Published on
Summary

பராசக்தி திரைப்படத்தின் க்ரியேட்டிவ் ப்ரொடியூசர் தேவ் ராம்நாத், விஜய் ரசிகர்கள் திட்டமிட்டே எதிர்மறையான விமர்சனங்களை பரப்புவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். விஜய் ரசிகர்கள், தயாரிப்பாளரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து, பல்வேறு விவாதங்களை எக்ஸ் தளத்தில் முன்னெடுத்து வருகின்றனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் ’பராசக்தி’. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் எதிர்மறையான கதாபத்திரத்தில் நடித்துள்ளார். உடன் அதர்வா, ஸ்ரீலீலா போன்ற நடிகர்கள் நடித்திருக்கும் நிலையில், படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இது அவருடைய இசையில் 100ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றுவருகிறது..

சிவகார்த்திகேயன் - பராசக்தி
சிவகார்த்திகேயன் - பராசக்திpt
பராசக்தி படத்திற்கு எதிர்மறை விமர்சனங்களை பரப்புவதாக விஜய் ரசிகர்களை குற்றஞ்சாட்டிய தயாரிப்பாளர்
“பராசக்தி தோல்வி” என நண்பர்கள் சொன்னதாக ட்விட்., திமுக தலைமையைச் சீண்டும் மாணிக்கம் தாகூர்.!

1959ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து போராடிய மாணவர்கள் போராட்டத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்திருக்கும் பராசக்தி திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், மொழி உணர்வை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்சென்ற முன்னெடுப்பிற்காக பாராட்டப்பட்டும் வருகிறது.

இந்தசூழலில் ஒருபக்கம் படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் பரவிவரும் சூழலில், காங்கிரஸ் தரப்பிலிருந்தும் பராசக்தி படத்தை தடை செய்யவேண்டும் என்ற குரல் எழுந்துவருகிறது. இந்நிலையில் பராசக்தி படத்திற்கு விஜய் ரசிகர்கள் தான் வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்மறையான விமர்சனங்களை பரப்புவதாக பராசக்தி திரைப்படத்தின் க்ரியேட்டிவ் ப்ரொடியூசரும் நடிகருமான தேவ் ராம்நாத் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பராசக்தி படத்திற்கு எதிர்மறை விமர்சனங்களை பரப்புவதாக விஜய் ரசிகர்களை குற்றஞ்சாட்டிய தயாரிப்பாளர்
பற்றிக்கொண்ட பராசக்’தீ’| 2 நாட்களில் இவ்வளவு கோடி வசூலா..? புதிய மைல்கல் படைக்கவிருக்கும் SK!

விஜய் ரசிகர்கள் திட்டமிட்டே செய்கின்றனர்..

விஜய் ரசிகர்களை குற்றஞ்சாட்டி சில புகைப்படங்களுடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் பராசக்தி திரைப்படத்தின் க்ரியேட்டிவ் ப்ரொடியூசரான தேவ் ராம்நாத், “உங்களுடன் சேர்ந்து ஒரு படத்தை வெளியிடுகிறோம் என்பதற்காகவே எங்களது படத்தை சிதைக்கும் உரிமை உங்களுக்கு இல்லை.

முதலில் நாங்கள் தான் வெளியீட்டு தேதியை அறிவித்தோம். உங்கள் படத்தை தடுக்க நாங்கள் முயற்சித்தோமா? இல்லை.

பிரச்னைகளை தீர்க்க சென்னை மற்றும் மும்பையில் தணிக்கை குழு அலுவலகத்திற்கு நான் ஒவ்வொரு நாளும் சென்றேன். உங்களது குழுவை போன்றே நாங்களும் தணிக்கையில் பிரச்னைகளை எதிர்கொண்டோம். வெளியீட்டிற்கு 18 மணி நேரத்திற்கு முன்பாகவே எங்கள் படத்திற்கு சான்று கிடைத்தது.

எதிர்மறையான விமர்சனங்கள், பழைய வீடியோக்கள், மக்களிடையே எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்துவது, திரையரங்குகளில் அரசியல் முழக்கங்களை எழுப்புவது, புக் மை ஷோ செயலி ரேட்டிங்கில் விளையாடுவது, இப்படி செய்வதெல்லாம் போட்டியல்ல.

கடந்த ஆண்டு வெளியான ஒரு பெரிய படத்திற்கும் இதையே தான் செய்தீர்கள்.

சினிமா ரசிகனாக சொல்கிறேன், இது நமக்கு ஆரோக்கியமானது அல்ல. பராசக்தி திரைப்படம் மாணவர்களின் இயக்கத்தை பற்றியது, அதை கண்டு தமிழர்களாகிய நாம் பெருமைப்பட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

பராசக்தி படத்திற்கு எதிர்மறை விமர்சனங்களை பரப்புவதாக விஜய் ரசிகர்களை குற்றஞ்சாட்டிய தயாரிப்பாளர்
பராசக்தி | ”அமரனை விட சிறப்பாக உள்ளது..” சிவகார்த்திகேயன் பகிர்ந்த ரிவ்யூ!

பதிலளித்து வரும் விஜய் ரசிகர்கள்..

பராசக்தி திரைப்படத்தின் ப்ரொடியூசர் தேவ் ராம்நாத் பதிவிட்டிருக்கும் பதிவில் பதிலளித்து வரும் விஜய் ரசிகர்கள், ‘ஜனநாயகன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்ட அதே நாளில் பொங்கல் வெளியீட்டை அறிவித்தது, ஆர்கானிக் வியூஸ்கள் என்று கூறியது, ரிலீஸ் தேதியை ஜனவரி 14-லிருந்து 10ஆம் தேதிக்கு மாற்றியது, அதற்கு விநியோகஸ்தர்களிடமிருந்து கோரிக்கை வைத்ததால் மாற்றினோம் என்று கூறியது, சிவகார்த்திகேயன் ரசிகர்களில் சிலர் 41 ஐக் குறிப்பிட்டு கருத்திட்டு வருவது, இதையெல்லாம் செய்து விஜய் ரசிகர்களை தூண்டிவிட்டதே நீங்கள் தான்’ என்று ஒரு விஜய் ரசிகர் பதிவிட்டுள்ளார்.

பராசக்தி படத்திற்கு எதிர்மறை விமர்சனங்களை பரப்புவதாக விஜய் ரசிகர்களை குற்றஞ்சாட்டிய தயாரிப்பாளர்
"பராசக்தி அரசியல் சார்பு கொண்ட படம் அல்ல.." - நடிகர் சிவகார்த்திகேயன்

மற்றொரு விஜய் ரசிகரோ, ஆர்கானிக் வியூஸ் என்று தயாரிப்பாளரே ரசிகர்கள் சண்டையை ஏற்படுத்திய போது அமைதியாக இருந்திங்க, போட்ஸ் வச்சி டிரெய்லர் வியூஸ ஜனநாயகன விட அதிகமாக காமிச்சப்போ எதுவும் பேசாம இருந்திங்க, ஜனநாயகன் படம் தள்ளிப்போனபோது பராசக்தி படத்தின் பிரிண்ட்டை தர மறுக்கிறார்கள் என தியேட்டர் ஓனர்கள் அதிகாரப்பூர்வமாக கூறியபோதும் அமைதியாக இருந்திங்க, காங்கிரஸ் தலைவர்கள் படத்த எதிர்மறையா பேசும்போது அமைதியா இருந்திங்க, இதெல்லாம் நடக்கும்போதெல்லாம் அமைதியா இருந்திட்டு, ஸ்பேஸில் விஜய் ரசிகர்கள் ஜனநாயகன் குறித்து பேசியதற்கு பதிவு போட்டுட்டு இருக்கீங்க என பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து பலர் தயாரிப்பாளரின் பதிவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்திட்டு வருகின்றனர்.

பராசக்தி படத்திற்கு எதிர்மறை விமர்சனங்களை பரப்புவதாக விஜய் ரசிகர்களை குற்றஞ்சாட்டிய தயாரிப்பாளர்
’பராசக்தி படத்தை தடை செய்யவேண்டும்.. முழுக்க பொய், கட்டுக்கதை’ - தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com