இந்த வார ஓடிடி ரிலீஸ்
இந்த வார ஓடிடி ரிலீஸ்புதிய தலைமுறை

புஷ்பா 2 | அமரன் | Family Padam | Sir - இந்த வார தியேட்டர், ஓடிடி ரிலீஸ் லிஸ்ட் இதோ..!

புஷ்பா 2, அமரன், Family Padam, Sir என இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ள படங்கள், சீரிஸ் லிஸ்ட் இதோ...

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ள படங்கள், சீரிஸ் லிஸ்ட் இதோ...

Series

1. Tanaav S2: Vol 2 (Hindi) SonyLIV - Dec 6

Tanaav S2
Tanaav S2

சுதீர் மிஷ்ரா - நிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சீரிஸ் ` Tanaav S2: Vol 2’. தீவிரவாத கும்பலுக்கும், சிறப்பு படையினருக்குமான மோதலே கதை. 

2. Maeri (Hindi) Zee5 - Dec 6

Maeri
Maeri

சச்சின் டாரிக்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள சீரிஸ் `Maeri’. தன் மகள் மானசிக்கு நடந்த கொடுமைக்கு நியாயம் கேட்டு தாரா நடத்தும் போராட்டமே கதை.

OTT

3. Juror #2 (English) Apple TV+ - Dec 3

Juror
Juror

Clint Eastwood இயக்கியுள்ள படம் `Juror #2'. காதலியை கொலை செய்துவிட்டார் என குற்றம் சுமத்தப்படும் நபரின் வழக்கு விசாரணைக்கு வருகிறது. அவர் நிரபராதியா? குற்றவாளியா என விவாதிக்க ஜூரி குழு கூடுகிறது. அதில் ஒருவர்தான் ஹீரோ. இவ்வழக்கு என்ன ஆகிறது என்பதே கதை.

இந்த வார ஓடிடி ரிலீஸ்
அதே ஸ்டைல்.. அதே கெத்து.. மம்முட்டி - கௌதம் மேனன் கூட்டணியில் மிரட்டும் புதிய படத்தின் டீசர்!

4. Agni (Hindi) Prime - Dec 6

Agni
Agni

ராகுல் தோலக்யா இயக்கி ப்ரதிக் காந்தி, திவ்யந்து நடித்துள்ள படம் `Agni’. மும்பையில் நிகழும் தீவிபத்து ஒன்று எப்படி சரி செய்யப்படுகிறது என்பதே கதைக்களம்.

5. Longing (English) Jio Cinema - Dec 7

Longing
Longing

இஸ்ரேலியப் படமான `Longing’ அதே பெயரில், அதே இயக்குநர் Savi Gabizon ரீமேக் செய்திருக்கிறார். தனது  கேர்ள்ஃப்ரெண்டை சந்திக்க செல்லும் மோகுல் தெரிந்து கொள்ளும் உண்மைகளே படம்.

Post Theatrical Digital Streaming

6. Amaran (Tamil) Netflix- Dec 5

Amaran
Amaran

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடித்த படம் `அமரன்’. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு தான் இப்படம்.

இந்த வார ஓடிடி ரிலீஸ்
ஃபெஞ்சல் புயல் நிவாரணம்.. எடுத்துக்காட்டாக ஓடி வந்து நிதியுதவி வழங்கினார் சிவகார்த்திகேயன்!

7. Matka (Telugu) Prime - Dec 5

Matka
Matka

கருணா குமார் இயக்கத்தில் வருண் தேஜ் நடித்த படம் `Matka’. 1958 - 82 வரை விசாகபட்டிணத்தில் நிகழ்ந்த கேம்ப்ளிங் சம்பவத்தைப் பற்றிய படம்.

8. Sir (Tamil) Prime - Dec 6

Sir
Sir

போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடித்த படம் `சார்’. கல்வியை கொடுப்பதில் நடக்கும் சிக்கல்களே கதைக்களம்.

9. Jigra (Hindi) Netflix - Dec 6

Jigra
Jigra

வாசன் பாலா இயக்கத்தில் அலியா பட் நடித்த படம் `Jigra’. சத்யாவுக்கு குடும்பமாக இருப்பது அவளது தம்பி மட்டுமே. அவனுக்கு ஒரு சிக்கல் வரும் போது, எப்படி காப்பாற்றுகிறாள் என்பதே கதை.

10. Vicky Vidya Ka Woh Wala Video (Hindi) Netflix - Dec 6

Vicky Vidya Ka Woh Wala Video
Vicky Vidya Ka Woh Wala Video

ராஜ் ஷாண்டில்யா இயக்கத்தில் ராஜ்குமார் ராவ், த்ரிப்தி இம்ரி நடித்த படம் `Vicky Vidya ka Woh Wala Video'. விக்கி - வித்யா தங்களின் முதலிரவை வீடியோவாக பதிவு செய்து ஞாபகார்த்தமாக வைத்துக் கொள்கிறார்கள். அந்த சிடி காணாமல் போன பிறகு நடக்கும் கலாட்டாக்களே கதை.

11. Fly Me to the Moon (English) Apple TV+ - Dec 6

Fly Me to the Moon
Fly Me to the Moon

Greg Berlanti இயக்கத்தில் Scarlett Johansson, Channing Tatum நடித்துள்ள படம் `Fly Me to the Moon’. fake moon landing பற்றிய கதையாக உருவாகியிருக்கிறது.

Theatre

12. Pushpa 2 (Telugu) - Dec 5

Pushpa 2
Pushpa 2

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்துள்ள படம் `புஷ்பா 2’. 2021ல் வெளியான முதல் பாகத்தின் தொடர்சியாக, புஷ்பா - பன்வர் சிங் சிக்காவத் இடையே நடக்கும் மோதல்களும், புஷ்பாவின் வளர்ச்சியுமே கதை.

இந்த வார ஓடிடி ரிலீஸ்
2.14 மில்லியன் டிக்கெட்டுகள் முன்பதிவு.. முதல் நாளில் மட்டும் 250 கோடி வசூலை குறிவைக்கும் புஷ்பா 2!

13. Family Padam (Tamil) - Dec 6

Family Padam
Family Padam

செல்வகுமார் இயக்கியுள்ள படம் `பேமிலி படம்’. இயக்குநர் கனவில் இருக்கும் கடைசி பிள்ளைக்காக, ஒரு குடும்பம் செய்யும் விஷயமே கதை.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com