pushpa 2
pushpa 2web

2.14 மில்லியன் டிக்கெட்டுகள் முன்பதிவு.. முதல் நாளில் மட்டும் 250 கோடி வசூலை குறிவைக்கும் புஷ்பா 2!

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியிருக்கும் புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் நாளை வெளியாகவிருக்கும் நிலையில், முன்பதிவில் மட்டும் இதுவரை 100கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் ‘புஷ்பா: தி ரைஸ்’. இத்திரைப்படம் தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் செம்மரக் கடத்தலை மையமாக கொண்ட கதைப்பொருளாக உருவாக்கப்பட்டிருந்தது. இதில் புஷ்ப ராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் அல்லு அர்ஜுன் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

அவரின் நடிப்பு ஒருபுறம் அசுரத்தனமாக இருந்தது என்றால், செம்மரக் கடத்தலை தடுக்கும் போலீஸ் அதிகாரியாக கடைசி சில நிமிடங்களில் தெறிக்கவிட்ட ஃபஹத் பாசில் புஷ்பாவே கண்டு அஞ்சும் ஒரு கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

pushpa
pushpa

தொய்வாகாத திரைக்கதை, பக்கபலமான இசை, பாட்டு என பட்டையை கிளப்பிய திரைப்படம், இரண்டு எதிரெதிர் திமிர் கொண்ட கதாபாத்திரங்கள் ஒன்றையொன்று எதிர்கொள்ளும் விதமாகவும், போலீஸ் அதிகாரி ஃபஹத் பாசிலை எதிர்த்து எப்படி புஷ்பா தன் ராஜாங்கத்தை கட்டமைக்கப்போகிறார் என்ற கேள்விகளுடன் முதல் பாகம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் இதன் அடுத்தபாகமாக எடுக்கப்பட்டிருக்கும் ”புஷ்பா 2: தி ரூல்” திரைப்படமானது நாளை உலகளவில் ரிலீஸாகவிருக்கும் நிலையில், படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது.

pushpa 2
”நேஷ்னல் மட்டும்னு நினைச்சிங்களா இண்டர்நேஷ்னல்” - தீயாக அல்லு அர்ஜுன்.. தெறியாக புஷ்பா 2 ட்ரெய்லர்!

முன்பதிவில் மட்டும் 100 கோடி வசூல்..

படத்தின் ட்ரெய்லரானது கடந்த நவம்பர் 17ம் தேதி வெளியாகி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு பீகாரில் திரண்ட புஷ்பா திரைப்பட ரசிகர்கள், இவ்வளவு ஃபேன்ஸ் இருக்காங்களா என ஆச்சரியபடுத்தும் வகையில் ஒட்டுமொத்த திரைத்துறையையும் திரும்பி பார்க்க வைத்தது.

புஷ்பா 2
புஷ்பா 2

இந்நிலையில், நாளை வெளியாகவிருக்கும் புஷ்பா 2 திரைப்படத்துக்கான முன்பதிவு மட்டும் 100கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் இதுவரை 2.14 மில்லியன் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், முதல்நாளில் மட்டும் 250-275 கோடி ரூபாய் வசூலை புஷ்பா 2 ஈட்டும் எனவும் கூறப்படுகிறது.

முதல்நாளில் அதிக வசூல்செய்த இந்திய திரைப்படமாக ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான RRR திரைப்படம் ரூ.223 கோடியை ஈட்டி முதலிடத்தில் உள்ளது. இதனை புஷ்பா 2 முறியடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

புஷ்பா 2
புஷ்பா 2

Sacnilk வெளியிட்டிருக்கும் தகவலின் படி, புஷ்பா 2 ஏற்கனவே 2.14 மில்லியன் டிக்கெட்டுகளை விற்று இதுவரையான முன்பதிவில் இந்தியாவில் மட்டும் ரூ 77.97 கோடி வசூல் செய்துள்ளது என்றும், உலகளவில் ரூ.100 கோடியை கடந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் BookMyShow சினிமாஸ் சிஓஓ ஆஷிஷ் சக்சேனா, புஷ்பா 2 திரைப்படம் BookMyShow-ல் அதிவேகமாக 1 மில்லியன் டிக்கெட்டுகளை விற்ற திரைப்படமாக மாறியுள்ளதாக கூறியுள்ளார்.

புஷ்பா 2 திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்திய மற்றொரு இந்திய படமாக மாறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

pushpa 2
”எல்லோரும் எல்லாமும் கைவிடும்போது..” - செம்ம மாஸ்ஸாக வெளியானது அஜித்தின் ’விடாமுயற்சி’ டீசர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com