mammootty - Gautham Vasudev Menon
mammootty - Gautham Vasudev Menonweb

அதே ஸ்டைல்.. அதே கெத்து.. மம்முட்டி - கௌதம் மேனன் கூட்டணியில் மிரட்டும் புதிய படத்தின் டீசர்!

பிரபல தமிழ் இயக்குநரான கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் முதல் மலையாள திரைப்படத்தில் மம்முட்டி நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

தமிழ் சினிமாவில் மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணை தாண்டி வருவாயா, நீதானே என் பொன் வசந்தம், அச்சம் என்பது மடமையடா, என்னை அறிந்தால், வெந்து தனிந்தது காடு முதலிய ஹிட் திரைப்படங்களை கொடுத்து முன்னணி இயக்குநராக வலம்வருபவர் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்.

kamal haasan
kamal haasan

இவருடைய இயக்கத்தில் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படமாக கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த வேட்டையாடு திரைப்படம், முழுவதுமாக கமலை வேறு ஜார்னரில் காட்டி ரசிகர்களின் அதிகப்படியான வரவேற்பை பெற்றது. எப்போதும் படத்திற்காக கடின உழைப்பை போடும் கமல்ஹாசன், நடிப்பில் மட்டுமே நம்மை ஆக்கிரமித்திருப்பார். தொடர் கொலைகளை செய்யும் மருத்துவம் படித்த இரண்டு இளைஞர்களை கண்டறியும் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராக வந்த திரைப்படம் எல்லோருக்கும் பிடித்தபடமாக மாறியது.

mammootty
mammootty

இந்நிலையில் கமல்ஹாசன் போன்ற ஒரு மிகப்பெரிய நடிகரை ஒர் புதுமையான விதத்தில் வெளிக்கொண்டுவந்த கௌதம் வாசுதேவ் மேனன், தற்போது மலையாள சினிமாவின் மிகப்பெரிய ஸ்டாரான மம்முட்டியை வைத்து அதேபோலான இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படத்தை மலையாளத்தில் உருவாக்கியுள்ளார்.

mammootty - Gautham Vasudev Menon
2.14 மில்லியன் டிக்கெட்டுகள் முன்பதிவு.. முதல் நாளில் மட்டும் 250 கோடி வசூலை குறிவைக்கும் புஷ்பா 2!

மம்முட்டி, கௌதம் வாசுதேவ் மேனன் இணையும் முதல் மலையாள படம்!

பிரபல தமிழ் இயக்குநரான கௌதம் வாசுதேவ் மேனன் மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து ”டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்” என்ற படத்தை இயக்கி வருகிறார். எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர்கள் லீனா, சித்திக், விஜய் பாபு மற்றும் விஜி வெங்கடேஷ் முதலியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

dominic
dominic

இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியிருக்கும் படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார், விஷ்ணு தேவ் ஒளிப்பதிவு செய்கிறார், எடிட்டராக லெவெல்லின் ஆண்டனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தை தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் மம்முட்டியே தயாரிக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பேற்ற நிலையில், படத்தின் டீசர் குறித்த அப்டேட்டை படக்குழு அறிவித்திருந்தது. அப்டேட்டின் படி ”டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்” படத்தின் டீசரானது இன்று மாலை 7 மணிக்கு மம்முட்டி கம்பனியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியாகிறது" என தெரிவிக்கப்பட்டது.

mammootty - Gautham Vasudev Menon
”எல்லோரும் எல்லாமும் கைவிடும்போது..” - செம்ம மாஸ்ஸாக வெளியானது அஜித்தின் ’விடாமுயற்சி’ டீசர்!

அதன்படி, ”டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்” படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகியுள்ளது. இந்த டீசர் வழக்கமான கௌதம் மேனனின் பாணியில் டீசர் ஸ்டைலாக உள்ளது. டீசரில் மம்மூட்டி உள்ளிட்ட இரண்டு கதாபாத்திரங்கள் மட்டும் இருக்கிறார்கள். அதில், “அவர்கள் உள்ளே வந்து நம்மை பயங்கரமாக தாக்குவார்களா? என்ன செய்வது?” என்று மற்றொருவர் கேட்க அதற்கு எப்படி தாக்க வேண்டும் என விவரமாக ஆக்‌ஷன் உடன் செய்துகாட்டுவார்கள். அது பார்க்க அவ்வளவு அட்டகாசமாக இருக்கிறது.

மம்மூட்டியின் லூக்கும் செம்மையாக இருக்கிறது. இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com