With Love Movie Review
Abishan Jeevinth, Aranswara RajanWith Love

அனஸ்வராவின் அசத்தலான நடிப்பு, காதல் கதையாக ஈர்க்கிறதா? - வித் லவ் விமர்சனம் | With Love Review

படத்தின் மிகப்பெரிய பலம் மோனிஷாவாக வரும் அனஸ்வரா ராஜன்தான். சொல்லப்போனால் படத்தின் லீட் ரோலே அவர்தான்.
Published on
அனஸ்வராவின் அசத்தலான நடிப்பு, காதல் கதையாக ஈர்க்கிறதா? - வித் லவ் விமர்சனம்(2.5 / 5)

பால்யத்தில் தொலைத்த காதலை தேடிச் செல்லும் ஜோடியின் கதையே `வித் லவ்'

சத்யசீலன் (அபிஷன் ஜீவிந்த்) பெண்பார்க்கும் படலத்தில் உழன்று கொண்டிருக்கும் இளைஞர். ப்ளைன்ட் டேட் ஸ்டைலில், மோனிஷாவை  (அனஸ்வரா ராஜன்) பெண்பார்க்கச் செல்கிறார். முதல் சந்திப்பில் என்ன பேசுவது என தெரியாமல் சத்யா தயக்கம் காட்ட, ஐஸ் பிரேக் செய்வதற்காக இருவரும் தங்கள் பள்ளிக் காலத்தில் சொல்ல மறந்த `காதல்' கதைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அப்போதுதான் இருவரும் ஒரே பள்ளியில் படித்தது இருவருக்கும் புரிகிறது. இருவரின் காதலும் வெளிப்படுத்தப்படாமலே கடந்துவிட்டதால், பள்ளிக் கால காதலர்களைச் சந்தித்து, காதலைச் சொல்லலாம் என ஐடியா கொடுக்கிறார் மோனிஷா. இருவரும் கிளம்ப, இந்தப் பயணம் கொடுக்கும் அனுபவம் என்ன? இறுதியில் சத்யா - மோனி ஜோடி இணைந்ததா என்பதெல்லாம்தான் மீதிக்கதை.

With Love
With Love

காதல் கதையில் நாஸ்டால்ஜி முலாம் பூசி, அதில் சின்ன சின்ன கருத்துக்களையும் தூவி கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் மதன். சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக சொன்ன விதத்தில் பாஸ் மார்க்கும் வாங்குகிறார்.

படத்தின் மிகப்பெரிய பலம் மோனிஷாவாக வரும் அனஸ்வரா ராஜன்தான். சொல்லப்போனால் படத்தின் லீட்ரோலே அவர்தான். துறுதுறுவென பேசுவது, சத்யாவின் கதையைக் கேட்டு கலாய்ப்பது, பொறுமையாக எடுத்துக் கூறுவது, பழைய காதலைச் சந்திக்கும் முன்பு காட்டும் தயக்கம், காம்ப்ஸ் எடுத்துக் கொண்டு மாஸாக வருவது எனப் பல இடங்களில் ஆச்சர்யம் சேர்க்கிறார். ஒற்றை ஆளாக படத்தையே தாங்குகிறார். சத்யா ரோலில் வரும் அபிஷன் நடனத்தில் மிக சிறப்பாக கலக்கி இருக்கிறார். நடிப்பைப் பொறுத்தவரை முடிந்த அளவு நல்ல நடிப்பை கொடுக்க முயல்கிறார். ஆனால் அந்த முயற்சிக்கு `பெட்டர் லக் நெக்ஸ்டைம்' தான் சொல்ல வேண்டியதாக இருக்கிறது. ஹுமர், அழுகை, கோபம், தயக்கம் என ஏகப்பட்ட உணர்வுகளை காட்டும் பாத்திரம். ஆனால் அவை எதுவும் திரையில் அவ்வளவு அழுத்தமாக வெளிப்படவில்லை.

With Love Movie Review
’’ `ப்ரியமுடன்' என்றுதான் முதலில் வைத்தோம்’’... - `வித் லவ்' டீம் சொன்ன தகவல் | With Love

பள்ளிக் காதலர்களாக வரும் காவ்யா அனில், சச்சின் நாச்சியப்பன், அப்பாவாக வரும் தேனி முருகன், அக்காவாக வரும் R.J.ஆனந்தி ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக முடித்திருக்கிறார்கள். சாமிநாதன் சார் பாத்திரத்தில் வரும் சரவணன் அழுத்தமாக மனதில் பதிகிறார்.

மேலோட்டமாக பார்க்கையில், ஒரு காதல் கதைதான் என்பதாக தெரிந்தாலும், தவறுகளை ஒப்புக்கொள்வது பற்றியும், ஒருவரை முன் முடிவோடு அணுகுவது தவறு என்பது பற்றியும் படம் பேசி இருந்த விதம் தனி பாராட்டுக்கு உரியது.

With Love
With Love

ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு படத்தை ஜாலியான, கலர்ஃபுல்லான படமாக கொடுத்திருக்கிறது. ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் எல்லாம் துள்ளல் ரகம். பின்னணி இசையிலும் உணர்வுகளை கடத்துகிறார். ’அவள் வருவாளா’ பாடலை பயன்படுத்தியிருந்த விதமும் சூப்பர்.

With Love Movie Review
"என்னுடைய அடுத்த படம்..." - SK கொடுத்த அப்டேட் | Sivakarthikeyan

படத்தின் குறைகள் எனப் பார்த்தால், பழைய காதலைத் தேடிச் செல்லும் அந்தப் பயணம் துவங்கும் வரையில், பெரிய சுவாரஸ்யம் எதுவும் இல்லாமல் கதை நகர்வதுதான். இருவரும் கிளம்பிச் சென்ற பின்பே படத்தில் பல தருணங்கள், பல சம்பவங்கள் என நகர்கிறது. இரண்டாம் பாதியைப் போலவே முதல் பாதியையும் Happening ஆக மாற்றும் விஷயங்களைச் சேர்த்திருந்தால், ஆரம்பத்திலிருந்தே நம்மை கட்டிப்போட்டிருக்கும் படம். சத்யா, மோனி இருவரின் கடந்தகால காதல் கதையில் இருக்கும் அழுத்தம், இவர்கள் இருவருக்கும் நிகழும் நிகழ்கால காதலில் மிஸ்ஸிங். எனவே இந்த ஜோடி சேர வேண்டுமே என்ற டென்ஷன் பார்வையாளர்களுக்கு பெரிய அளவில் ஏற்படவில்லை. இந்த விஷயங்களில் இன்னும் கவனம் சேர்த்திருந்தால் வித் லவ்வுக்கு, நாமும் லவ் யூ டூ சொல்லியிருக்கலாம்.

With Love
With Love

மொத்தத்தில் ஒரு ஓகேவான ஃபீல் குட் படம் என்ற பட்டியலில் சேர்க்கிறது இந்த `வித் லவ்'.

With Love Movie Review
LCUவில் கால்வைத்த ட்வின் ஃபிஷ் வால்டர்! | Benz | Lokesh Kanagaraj
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com