Nivin Pauly steps in for Benz shoot
Nivin PaulyBenz

LCUவில் கால்வைத்த ட்வின் ஃபிஷ் வால்டர்! | Benz | Lokesh Kanagaraj

ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் `பென்ஸ்' படத்தை `ரெமோ' மற்றும் `சுல்தான்' படங்களை இயக்கிய பக்கியராஜ் கண்ணன் இயக்கி வருகிறார்.
Published on

லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸில் (LCU) `கைதி', `விக்ரம்', `லியோ' படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்த LCUன் துவக்க கதையை சொல்லும்படி, Chapter Zero என்ற குறும்படமும் தயாராகி உள்ளது. இப்போது LCUன் அடுத்த படமாக `பென்ஸ்' தயாராகி வருகிறது.

ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் `பென்ஸ்' படத்தை `ரெமோ' மற்றும் `சுல்தான்' படங்களை இயக்கிய பக்கியராஜ் கண்ணன் இயக்கி வருகிறார். இப்படத்தில் ட்வின் ஃபிஷ் வால்டர் என்ற வில்லன் பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார் நிவின் பாலி. ஜூன் மாதம் நிவின் பாத்திரத்திற்கான ஒரு சிறிய டீஸர் வெளியிடப்பட்டது.

இப்படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக நிவின் பாலி சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளார். சாய் அபயங்கர் இசை, கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு, பிலோமின் ராஜ் படத்தொகுப்பு, ஜாக்கி கலை இயக்கம் என வலுவான தொழிநுட்ப கூட்டணி இப்படத்திற்காக இணைந்துள்ளது. இப்படத்தின் கதையை லோகேஷ் கனகராஜ் எழுதியதோடு, சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோருடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

Nivin Pauly steps in for Benz shoot
“மாற்றம் மாற்றம் என்று பேசினால் போதாது; ஏழை மக்களின் பசியை போக்க வேண்டும்” - நடிகர் ராகவா லாரன்ஸ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com