”இதை சகித்துக் கொள்ளவே முடியவில்லை” - டிஸ்ட்ரோபின் உலகில் நிகழும் ஒரு நவீன மகாபாரதமே கல்கி 2898 AD!

படம் முழுக்க மிக மெத்தனமாக நடித்திருக்கிறார் பிரபாஸ். ஒவ்வொரு காட்சியிலும் அவ்வளவு அசட்டைத்தனம். அவருக்கு என எழுதப்பட்டிருக்கும் பில்டப் காட்சிகள், காமெடி காட்சிகள் என அத்தனையும் மிக போரான ஒன்றாக மாறுகிறது.
kalki
kalkipt

எதிர்கால காசி... கங்கையே வறண்டு மணல் மேடுகளாய் மாறியிருக்கும் நிலம், அங்கு பிழைப்பு நடத்த போராடுகிறார்கள் எளிய மனிதர்கள். அந்நிலத்தின் மேல் எல்லா வளங்களையும் சுமந்து மிதந்து கொண்டிருக்கிறது காம்ப்ளெக்ஸ் (சகல சொகுசும் நிறைந்த வாழிடம்). அதன் தலைவன் சுப்ரீம் யாஸ்கின் (கமல்ஹாசன்), பெண்களை சிறைபிடித்து வந்து தனது சோதனைக்கு எலிகளாக பயன்படுத்துகிறான். அதே காசியில் எந்த பொறுப்புமின்றி, ஊதாரியாக ஊர் வம்பை விலைக்கு வாங்கிக் கொண்டிருக்கிறான் பைரவா (பிரபாஸ்). அவனது அதிகப்படியான லட்சியம், சீரழிந்திருக்கும் இந்த காசியிலிருந்து தப்பி, சொகுசான காம்ப்ளெக்ஸ் உள்ளே நுழைய வேண்டும்.

அதற்கு தேவை, 1 மில்லியன் யூனிட். அதை சம்பாதிக்க பவுண்டி ஹண்டராக சுற்றுகிறார். இன்னொரு பக்கம் தூதுவன் வருவன், மாரி பெய்யும் என தங்களுக்கு விடிவெள்ளி தரும் கடவுளை, வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும் பெண்ணை தேடிக் கொண்டிருக்கிறது சம்பாலா எனும் இடத்தில் மறைந்து வாழ்ந்து வரும் ரெபல்ஸ் கூட்டம். அதே பெண்ணைக் காப்பாற்ற பல வருடமாக தவமிருக்கும் அஷ்வத்தமாவும் (அமிதாப் பச்சன்) விழித்துக் கொள்கிறாள். ஒருகட்டத்தில் சுப்ரீம் யாஸ்கின் - பைரவா - அஷ்வத்தமா - ரெபல்ஸ் என நால்வரின் டார்கெட்டும் அந்தப் பெண்ணாக மாற, அதன் பின் என்ன நடக்கிறது என்பதே மீதிக் கதை.

kalki
வைரலாகும் லெஜெண்ட் சரவணனின் புதிய லுக்... அடுத்த படத்தின் இயக்குநர் இவர்தானா?

டிஸ்ட்ரோபியன் உலகம், அதில் இதிகாசத்தை கலந்துகட்டி ஒரு நவீன மகாபாரதத்தை உருவாக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் நாக் அஷ்வின். எல்லா வளங்களும் சுரண்டப்பட்ட எதிர்கால உலகம், அதில் வசிக்கும் மனிதர்கள், வாகனங்கள், டெக்னாலஜி, ஆடைகள், வீதிகள், பாலையாக மாறிய கங்கை என கற்பனை உலகத்தை மிக நேர்த்தியாக கட்டமைத்திருக்கிறார்.

க்ரியேட்டிவாக அவர் செய்திருக்கும் மெனக்கெடல்கள்தான், அந்த உலகத்தை நம்பும்படி மாற்றுகிறது. அதற்கு பெரிதும் உதவியிருக்கும் கலை இயக்க குழுவுக்கும், விஷுவல் எஃபக்ட்ஸ் குழுவுக்கும் தனி வாழ்த்துகள். Djordje Stojiljkovic ஒளிப்பதிவும் படத்திற்கு அசுர பலம் சேர்த்திருக்கிறது.

சந்தோஷ் நாராயணன் தனது பின்னணி இசையால் படத்திற்கு ஒரு எபிக் தன்மையை சேர்த்திருக்கிறார். சுப்ரீம் யாஸ்கினாக கமலின் நடிப்பும் தோற்றமும் அத்தனை மிரட்டல். இந்த பாகத்தில் அவருக்கு பெரிதாக வேலை இல்லை என்றாலும், வரும் காட்சிகளும் நம்மை அசர வைக்கிறார். எட்டடி உயர அஷ்வதமனாக அமிதாப் பச்சன், கம்பீரமான நடிப்பை வழங்கியிருக்கிறார். தீபிகா படுகோன், பிரம்மானந்தம், ஷோபனா, பசுபதி, திஷா பதானி, ராஜேந்திர பிரசாத், சஸ்வதா சாட்டர்ஜி, ஆன்னா பென், மால்விகா நாயர் என அத்தனை பேரும் நல்ல பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

kalki
"KING OF POP" மைக்கேல் ஜாக்சன் நினைவு தினம் இன்று!

படத்தின் குறைகள் கண்டிப்பாக கதையை சொல்லியிருக்கும் விதம்தான். குறிப்பாக இந்த பாகத்தில் நிகழ்ந்த எல்லா விஷயங்களுமே, அடுத்து வரப் போகும் பாகத்துக்கான அறிமுகம். அடுத்த பாகத்தில் தான் கதையே ஆரம்பிக்கப் போகிறது என்றால், அதை மட்டுமே வெளியிட்டிருக்கலாமே. வெறுமனே கதாப்பாத்திரங்களின் அறிமுகத்துக்காக மூன்று மணி நேரத்தை எடுத்துக் கொண்டது பெரும் போங்கு. சரி சொல்லப்பட்ட விஷயங்கள் ஏதாவது சுவாரஸ்யமானதாக இருந்ததா என்றால் அதுவும் இல்லை. திரைக்கதை அத்தனை மேலோட்டமாக இருக்கிறது. படத்தின் பிரம்மாண்ட காட்சிகளைப் பார்க்கும் ஆடியன்ஸ், படத்தில் கதை, திரைக்கதையை பற்றி கவலைப்பட மாட்டார்கள் என நாக் அஸ்வின் நினைத்துவிட்டாரா எனத் தெரியவில்லை. அதைக் கூட பொறுத்துக் கொள்ளலாம்.

ஆனால் படத்தில் பிரதானமான மூன்று பிரச்சனைகள், சண்டை காட்சிகள், கேமியோ மற்றும்... பிரபாஸ். இம்மூன்றும் சகித்துக் கொள்ளவே முடியாதவை. பிரபாஸின் அறிமுக காட்சியில் வரும் சண்டையில் துவங்கி ஒவ்வொரு சண்டையும் அத்தனை அலுப்பைத் தருகிறது, எப்போது தான் சண்டை முடிந்து கதைக்கு வருவார்கள் எனும் அளவு பொறுமையை சோதிக்கிறது.

kalki
"இந்தியன் 2 உருவாக காரணம் இதுதான்" - நடிகர் கமல் சொன்ன ரகசியம்!

டிரெய்லரில் கமிட்டான நடிகர்கள் லிஸ்ட்டே ஒரு லாரி இருக்க, கேமியோ ரோலில் ஒரு டிப்பர் லாரி நிரம்பும் அளவுக்கு பலர் வருகிறார்கள். பத்து நிமிடத்துக்கு ஒரு கேமியோ என படம் நெடுகிலும் பல கேமியோக்கள். துவக்கத்தில் சுவாரஸ்யமாக இருந்தாலும், ஒரு கட்டத்துக்கு மேல் அவை எரிச்சலூட்டுகிறது. சொல்லப்போனால் படத்தின் யார் மெண்ட் கேரக்டர், யார் கேமியோ என்ற குழப்பமே எழுகிறது. ஒரு படத்தின் நாயகனே அந்தப் படத்தின் மைனஸ் என சொல்ல வேண்டிய நிலையை எப்படி விவரிப்பது.

படம் முழுக்க மிக மெத்தனமாக நடித்திருக்கிறார் பிரபாஸ். ஒவ்வொரு காட்சியிலும் அவ்வளவு அசட்டைத்தனம். அவருக்கு என எழுதப்பட்டிருக்கும் பில்டப் காட்சிகள், காமெடி காட்சிகள் என அத்தனையும் மிக போரான ஒன்றாக மாறுகிறது. ஒருகட்டத்தில் பிரபாஸ் காட்சி வரும் போதெல்லாம் நம்மை அறியாமல் ”ப்ச்” என உச்சரிக்கிறது உதடு.

kalki
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்|'மனதில் உறுதி வேண்டும்'- எஸ்.பி.பி ஏற்று நடித்த Dr.அர்த்தநாரி!

தொழில்நுட்ப ரீதியாக, கல்கி எட்டியிருப்பது ஒரு அசாத்தியமான உச்சம். கிராபிக்ஸ், புரொடக்‌ஷன் டிசைன் ஆகியவற்றில் இந்தப் படம் இந்திய சினிமாவிற்கு ஒரு பென்ச்மார்க். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அதே அளவுக்கான மெனக்கெடலை எழுத்திலும் காட்டியிருக்கலாம். இதிகாசம் + டிஸ்ட்ரோபியன் என சுவாரஸ்யமான காமினேஷனில் கதை பிடித்திருந்தது போல், அதை சொன்ன விதத்திலும் சுவாரஸ்யத்தைக் கொடுத்திருந்தால் மிகத் தரமான அனுபவமாக மாறியிருக்கும் இந்த கல்கி.

kalki
செக் மோசடி வழக்கு: தங்க மீன்கள் பட தயாரிப்பாளர் சதீஷ் குமாருக்கு 18 மாதம் சிறை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com