"இந்தியன் 2 உருவாக காரணம் இதுதான்" - நடிகர் கமல் சொன்ன ரகசியம்!

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கமல் - சித்தார்த் - சங்கர்
கமல் - சித்தார்த் - சங்கர்இந்தியன் 2

கமலின் 'இந்தியன் 2' அவதாரத்தை காண அவரது ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அவர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது இந்தியன் 2 படத்தின் ட்ரெய்லர்.

"சிஸ்டம் சரியில்லை என்று குறை சொல்லிக்கிட்டே இருப்போம், ஆனால் அதை சரிசெய்ய முயல மாட்டோம்" என்பது போன்ற அரசியல் வசனங்கள், அதிரடி சண்டை காட்சிகள் என படத்தின் மீதான ஆர்வத்தை ட்ரெய்லர் மேலும் அதிகரித்துள்ளது.

சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும், இந்தியன் 2 திரைப்படம் உருவாக முக்கிய காரணம், தற்போதும் தொடரும் ஊழல்தான் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் 1996 ஆம் ஆண்டு உருவான இந்தியன் திரைப்படத்தின் 2 ஆம் பாகம் அடுத்த மாதம் 12 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய நடிகர் கமல்ஹாசன், இந்தியன் 2 உருவாக தேவையான காரணத்தை அரசியல்தான் வழங்கியுள்ளதாக கூறினார்.

ஊழலுக்கு காரணம் அரசியல்வாதிகள் தவிர வேறுயாரும் உள்ளனரா என்ற கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், “மக்கள் இன்றி ஊழல் நடக்காது என்பதால் நாமும் காரணம்” எனத் தெரிவித்தார்.

இதனிடையே உரையாற்றிய இயக்குநர் ஷங்கர், ”இந்தியன் திரைப்படம் தமிழகத்தில் நடப்பது போன்று உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்படம் நாடு முழுவதும் விரிவடைகிறது. இப்படம் நன்றாக வருவதற்கு முதற்காரணம் கமல்ஹாசன்” என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

கமல் - சித்தார்த் - சங்கர்
பிரபாஸ் - கமல்ஹாசனின் ‘கல்கி 2898 AD-1’ ரிலீஸ் தேதி மாற்றம்? இதுதான் காரணம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com