வைரலாகும் லெஜெண்ட் சரவணனின் புதிய லுக்... அடுத்த படத்தின் இயக்குநர் இவர்தானா?

தொழிலதிபர் லெஜெண்ட் சரவணனின் புதிய படம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதுதொடர்பான கூடுதல் விவரங்களை விரிவாகப் பார்க்கலாம்.
லெஜெண்ட் சரவணனின் புதிய படம்?
லெஜெண்ட் சரவணனின் புதிய படம்?முகநூல்

செய்தியாளர்: புனிதா பாலாஜி

2022ஆம் ஆண்டு அதிகம் TROLL செய்யப்பட்ட நபர்களில், தொழிலதிபர் சரவணனும் ஒருவர். அவர் தயாரித்து நடித்த லெஜெண்ட் திரைப்படம்தான் அவர் மீதான விமர்சனங்களுக்கு காரணம். முதல் படத்திற்கே ஏன் இத்தனை பிரமாண்டம் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, எல்லாம் பெருமைக்காகத்தான் என பதில் கூறி அதிர வைத்தார், சரவணன்.

லெஜண்ட் சரவணன்
லெஜண்ட் சரவணன்

அப்படி தான் கடும் விமர்சனங்களை பெற்ற இடமான சமூக ஊடகத்தை, இன்று சற்று கவனிக்க வைத்திருக்கிறார் சரவணன். முன்னதாக ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவான லெஜெண்ட் திரைப்படம் விமர்சன ரீதியில் தோல்வியடைந்தது. ஆனால், எதற்கும் அசராத சரவணனோ தனது அடுத்த படத்தை ஹாலிவுட் லெவலில் படமாக்க திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றார் என்ற செய்திகள் பரவின.

லெஜெண்ட் சரவணனின் புதிய படம்?
“நான் நலமாக இருக்கிறேன்...” - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ‘பாட்டுக்கு பாட்டு’ அப்துல் ஹமீது!

இந்த நிலையில்தான், சரவணனின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியிருக்கிறது. அண்மையில் வெளியாகி ஹிட் ஆன கருடன் பட இயக்குநர் துரை செந்தில்குமாரின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார், லெஜெண்ட் சரவணன்.

PHOTO SHOOT முடிந்து, PROMO காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்புக்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஓரிரு வாரங்களில் படத்தின் பூஜை நிகழ்ச்சி நடைபெறும் என்றும், அதில் கதை குறித்தும், கதாபாத்திரங்கள் குறித்தும் தகவல் தெரிவிக்கப்படும் என்றும் படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com