\
மோகன் ஜி - கார்த்திக் சுப்புராஜ்
மோகன் ஜி - கார்த்திக் சுப்புராஜ்kumudham show / karthik subbaraj x

மனிதனின் ஒரே நோக்கம் அதுதானா..? மோகன் ஜி-க்கு கார்த்திக் சுப்புராஜ் கண்டனம்!

திருநங்கை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மோகன் ஜி-க்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Published on: 
Summary

திருநங்கைகள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைத்த மோகன் ஜி மீது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கடுமையாக கண்டனம் தெரிவித்தார். மோகன் ஜியின் பேச்சு மனிதாபிமானம் அற்றது என விமர்சித்தார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் ‘டோரதி (Dorothy). கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் சிக்யா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு, இளையராஜா இசையமைத்துள்ளார்.

dorothy
dorothy dorothy / jio studios

மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கிடையில் வெளியான டோரதி திரைப்படம் ஆண் திருநங்கையாக மாறும் போது குடும்ப சூழல், சமூகத்தால் எப்படி பாதிப்பிற்குள்ளாகிறாள், இச்சமூகம் எப்படி பார்க்கிறது என்பதை உண்மைக்கு நெருக்கமாக பேசியிருந்தது. முடிவில் தனக்குள் இருக்கும் பெண்மையை சமூகத்திற்காக அடக்கிவைக்காமல் சுதந்திர பறவையாக ‘திருநங்கையாக’ மாறுவதும், சிறுவயது நண்பனை இறுதியில் காதலனாக கைக்கோர்ப்பதுமாக படம் முடிகிறது.

ஒருபக்கம் இந்தப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், மறுபக்கம் படத்தில் இடம்பெற்ற முத்தக்காட்சியும், நண்பர்களை கொச்சையாக காட்டியிருக்கிறார்கள் என்றும் விமர்சனம் வைக்கப்பட்டது.

மோகன் ஜி - கார்த்திக் சுப்புராஜ்
”டோரதி பல விருதுகள் மேடைக்கு செல்லவேண்டும்..” கன்னட நடிகர் உபேந்திரா பாராட்டு!
மோகன் ஜி - கார்த்திக் சுப்புராஜ்
”ஒரே மாதிரியாகச் சுருக்கிவிடாமல்..” - ‘டோரதி’ படத்தைப் பாராட்டிய சகோதரன் அமைப்பினர்!
மோகன் ஜி - கார்த்திக் சுப்புராஜ்
’டோரதி’ படத்தில் இலுமினாட்டி டாலர்? உண்மை என்ன? உடைத்து பேசிய கார்த்திக் சுப்புராஜ்!

இந்தசூழலில் ஒரு நிகழ்ச்சியில் திருநங்கைகள் குறித்தும், டோரதி படம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மோகன் ஜி, ஆணும் திருநங்கையும் இணைந்து திருமணம் செய்து என்ன செய்வார்கள் என மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பி, பாலியல் ரீதியாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

இந்நிலையில் மொகன் ஜியின் மோசமான பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், மனிதாபிமானம் அற்ற பேச்சு என்றும், நாய், பன்றிகள் கூட தான் இனப்பெருக்கம் செய்கிறது, மனிதனின் அதிகபட்ச நோக்கம் அதுமட்டும் தானா என்று கேள்வி எழுப்பி மோகன் ஜியின் பேச்சுக்கு கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

மோகன் ஜி - கார்த்திக் சுப்புராஜ்
திரையுலகம் சொல்ல மறந்த உன்னதப் படைப்பு ‘Dorothy'..! விஜய் ஆண்டனி பாராட்டு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com