என்னைப் பற்றிய மன்சூர் அலிகானின் கேவலமான பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன்: கொந்தளித்த த்ரிஷா

தன்னைப் பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசிய மன்சூர் அலிகானுக்கு நடிகை த்ரிஷா கண்டனம் தெரிவித்துள்ளார். லியோ பட அனுபவம் குறித்து அவர் மோசமாக பேசியது கண்டிக்கத்தக்கது என்று X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
த்ரிஷா, மன்சூர் அலிகான்
த்ரிஷா, மன்சூர் அலிகான்ட்விட்டர்

லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் வெளியான லியோ படத்தில் நடிகை த்ரிஷா நாயகியாக நடித்திருந்தார். மிஷ்கின், ஜிவிஎம், சஞ்சய் தத் மற்றும் மன்சூர் அலிகான் என பலரும் நடித்திருந்தனர். சமீபத்தில் வெளியான படம் பெரிய அளவில் ஹிட் ஆன நிலையில், வெற்றிவிழாவும் நடத்தப்பட்டது.

இதற்காக, சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில், படத்திற்கான வெற்றிவிழாவும் கொண்டாடப்பட்டது. இதில் படத்தில் நடித்த அனைவரும் பங்கேற்க, விஜய்யும் கலந்துகொண்டு பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். ரசிகர்களுக்கோ இந்த விழாவே தீபாவளி கொண்டாட்டமாக இருந்தது.

த்ரிஷா, மன்சூர் அலிகான்
தலைவர் 171 - லோகேஷ் கொடுத்த செம அப்டேட்... கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்!

அப்போது, விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் மன்சூர் அலிகான், “தொடக்கத்தில் த்ரிஷாவுடன் நடிக்கிறோம் என்பதை நினைத்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். ஆஹா, நம்ம த்ரிஷாலாம் இருக்காங்க.. வழக்கம்போல அது இது துரத்துவோம், கொல்லுவோம். அப்டின்னு நெனச்சேன்.

ஆனால், கண்ணுலயே காட்டல. ஃப்ளைட்லயே கொண்டுபோயி ஃப்ளைட்லயே கொண்டு வந்துட்டாங்க” என்று பேசினார். இந்த பேச்சு, மோசமான எண்ணத்தில் பேசப்பட்டதாக அப்போதே சமூகவலைதளத்தில் பேசுபொருளாக மாறியது.

அதனைத்தொடர்ந்து, சமீபத்தில் பேட்டியளித்த அவர், ”லியோ படத்தில் த்ரிஷா கூட நடிக்கிறோமா.. நிச்சயமாக பெட்ரூம் சீன்லாம் இருக்கும். குஷ்பு, ரோஜாவை கட்டிலில் தூக்கிப்போட்டது போன்று, த்ரிஷா உடன் நடிக்கலாம். 150 படங்களில் நம்ம பண்ணாத ரேப்பா, பண்ணாத அட்டூழியமா. சிரஞ்சீவி மலையை அனுமான் தூக்குவது போன்று த்ரிஷாவை விமானத்தில் அழைத்துச் சென்று, மறுபடியும் அழைத்து வந்துவிட்டார்கள்” என்று மோசமாக பேசியிருந்தார்.

இந்த நிலையில், வீடியோவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகை த்ரிஷா, “நடிகர் மன்சூர் அலிகான் என்னை பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோவை பார்த்தேன். பாலியல் ரீதியாகவும், மரியாதைக்குறைவாக மற்றும் கேவலமான எண்ணத்துடன் பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன்.

என்னுடன் நடிக்க வேண்டும் என்று அவர் தொடர்ந்து ஆசைப்படலாம். இதுவரை அவருடன் சேர்ந்து நடித்ததில்லை என்பதில் நிம்மதியடைகிறேன். இனியும் சேர்ந்து நடிக்கமாட்டேன். இவரைப்போன்றவர்கள் மனிதகுலத்திற்கே அவப்பெயரை ஏற்படுத்துகிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார். நெட்டிசன்கள் பலரும் மன்சூர் அலிகான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

த்ரிஷா, மன்சூர் அலிகான்
லியோ கொடுத்த பூஸ்ட்... சம்பளத்தை உயர்த்திய த்ரிஷா.. அடேங்கப்பா இத்தனை கோடிகளா? 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com