லியோ கொடுத்த பூஸ்ட்... சம்பளத்தை உயர்த்திய த்ரிஷா.. அடேங்கப்பா இத்தனை கோடிகளா? 

லியோ படம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் குந்தவையான த்ரிஷா தனது சம்பளத்தை பல கோடிகளுக்கு உயர்த்தியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
த்ரிஷா
த்ரிஷாட்விட்டர்

தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக நடித்து வருகிறார் த்ரிஷா. இவருடன் பயணத்தை தொடங்கியவர்கள், சப்போர்ட் ரோல்களில் நடித்து வரும் நிலையில், இன்னமும் பிசியான ஹீரோயினாக நடித்து வருகிறார் த்ரிஷா. 

தமிழில் இவருக்கான சிறப்பான கதாப்பாத்திர ஜோடியாக பார்க்கப்படும் விஜய்யுடன் கில்லி, திருப்பாச்சி, குருவி, ஆதி போன்ற படங்களில் நடித்திருந்த த்ரிஷா, 15 ஆண்டுகளுக்குப் பிறகு லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இருவருக்குமான ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி 15 ஆண்டுகளில் மாறவே இல்லை என்று சிலாகித்தது ரசிகர் பட்டாளம்.

த்ரிஷா
‘சிறகடித்து வானில் பறந்த..’ அன்பு... உணர்ச்சிகரமாக உயிர்கொடுத்த கலையரசன்!

தனது திரைவாழ்க்கையின் தொடக்கத்தில் லட்சங்களில் சம்பளம் வாங்கிய இவர், அடுத்தடுத்து கிடைத்த வெற்றிகளால் சம்பளத்தை கோடிகளுக்கு உயர்த்தியிருந்தார். ஆனால், இடையில் சினிமா பயணத்தில் சிறு தொய்வு ஏற்பட்டாலும், பொன்னியின் செல்வனில் குந்தவையாக நடித்து மீண்டும் கவனம் ஈர்த்திருந்தார். அதனைத்தொடர்ந்து, நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்த த்ரிஷா, லியோ படத்தில் சத்யாவாக கலக்கினார்.

இந்த படத்திற்கு 4 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விடாமுயற்சி, தக்லைஃப் போன்ற படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில், சம்பளத்தை 10 கோடியாக மாற்றியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com