தலைவர் 171 - லோகேஷ் கொடுத்த செம அப்டேட்... கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்!

நடிகர் ரஜினிகாந்தின் 171-வது படம் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட் அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை கொடுத்துள்ளது.
லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ்pt web

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில் போன்ற பிற மொழி நடிகர்களும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

ஜெயிலர் - ரஜினி
ஜெயிலர் - ரஜினிTwitter

ஜெயிலர் மற்றும் லியோ திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தலைவர் 171 திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தலைவர் 171 குறித்து மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ்
“தலைவர் 170 படப்பிடிப்பு மிகச்சிறப்பாக நடக்கிறது” - ரஜினி ஷேரிங்க்ஸ்! #Video

காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ள ‘அவள் பெயர் ரஜினி’என்ற திரைப்படத்தின் நிகழ்ச்சி சென்னை வடபழனியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அப்படத்தின் டிரைலரை வெளியிட்டார். அதன்பின்னர் விழாவில் பேசிய அவர், நடிகர் காளிதாஸ் ஜெயராம் மற்றும் படக்குழுவினரை பாராட்டினார்.

லோகேஷ் கனகராஜ்- லியோ
லோகேஷ் கனகராஜ்- லியோ

விழாவில் பேசி முடித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் தலைவர் 171 அப்டேட் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், “தலைவர் 171 படத்திற்கான ஸ்க்ரிப்ட்டை அடுத்த வாரம் முதல் எழுதப்போகிறேன்” என கூறினார்.

மேலும் லியோ படத்தின் வேலைகளில் இருந்ததால் ஸ்க்ரிப்ட் எழுத முடியவில்லை என குறிப்பிட்ட லோகேஷ் கனகராஜ், தலைவர் 171 படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் தொடங்கும் எனவும் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com