நடையை கட்டிய குணசேகரன்.. புது ஆயுதத்தை கையில் எடுத்த எதிர்நீச்சல்!

ஆதி குணசேகரன் இல்லாமல் எதிர்நீச்சலில் மற்றவர்களின் நடிப்பை பார்க்க முடியவில்லை என்கின்றனர் ரசிகர்கள். இந்நிலையில், சீரியலை மீண்டும் தூக்கிப்பிடிக்கும் முயற்சியில் புதிய ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார் இயக்குநர்.. முழு விவரத்தை பார்க்கலாம்
adhi gunasekaran
adhi gunasekaranfile image

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ஆதி குணசேகரனின் பாத்திரத்தில் ஏற்பட்ட குளறுபடிகளால் தனது வரவேற்பை இழந்து நிற்கிறது. மாரிமுத்து ஆதி குணசேகரனாக நடித்தவரை இந்த சீரியலுக்கு இருந்த மவுசு என்பது வேறு. அவரது மறைவுக்கு பிறகு வேல ராமமூர்த்தி ஆதி குணசேகரனாக நடித்தபோது வந்த விமர்சனங்கள் வேறு என்கின்றனர் ரசிகர்கள்.

மாரிமுத்து அளவுக்கு ஆதி குணசேகரன் பாத்திரத்தோடு வேல ராமமூர்த்தி பொருந்தாததால் குணசேகரன் பாத்திரம் ஜெயிலுக்கு போவது போல காட்சி அமைத்து, தற்போதைக்கு குணசேகரனுக்கு டாட்டா சொல்லியுள்ளனர். சீரியலில் உயிர்நாடியே ஆதி குணசேகரன்தான்.

அவர் இல்லாமல் மற்றவர்களின் நடிப்பை பார்க்க முடியவில்லை என்கின்றனர் ரசிகர்கள். இந்நிலையில், சீரியலை மீண்டும் தூக்கிப்பிடிக்கும் முயற்சியில் புதிய ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார் இயக்குநர்.

adhi gunasekaran
எதையாவது பேசுவோம் | Bharathi Raja Party... அருணாச்சலம் ஜி அட்ராசிட்டீஸ்!

அதாவது ஊரில் திருவிழாவை ஆரம்பித்து அதில் எதிர்பாராத திருப்பங்களை கொண்டுவர முடிவு செய்துள்ளாராம். அடிமையாக இருக்கும் மருமகள்களுக்கு விடிவு காலம் பிறப்பது போன்று ட்விஸ்ட் வைக்கும் காட்சிகள் வரப்போகிறது. குறிப்பாக அப்பத்தாவும், அந்த 40% சொத்துக்கு ஒரேடியாக முடிவுகட்டப்போவதாக தெரிகிறது.

இதற்கு ஜீவானந்தம் தலைமை தாங்க, அவரது கதையை முடித்துவிடலாம் என்று சைக்கோ வளவன் மூலமாக காரியத்தை நகர்த்தப்போகிறார் கதிர். இதனால் நாடகம் மீண்டும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

adhi gunasekaran
கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கு: பாஜக ஓபிசி அணி செயலாளர் கைது!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com