கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கு: பாஜக ஓபிசி அணி செயலாளர் கைது!

கும்பகோணத்தில் கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் பாஜக நிர்வாகி சாக்கோட்டை கார்த்தியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சாக்கோட்டை கார்த்தி
சாக்கோட்டை கார்த்தி pt web

கும்பகோணத்தில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக கூறி ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் 500 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த புகாரில் அர்ஜுன் கார்த்திக் என்பவரையும், அவரது நிறுவனத்தில் பணிபுரிந்த 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் அர்ஜுன் கார்த்திக்கிடம் நடத்திய விசாரணையில் அவர் பாஜகவின் மாவட்ட ஓபிசி அணி செயலாளர் சாக்கோட்டை கார்த்தி என்பவர் தன்னிடம் பல கோடி ரூபாயை பறித்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து திருச்சி அருகே முசிறியில் தலைமறைவாக இருந்த சாக்கோட்டை கார்த்தியை காவல்துறையினர் கைது செய்தனர்.

சாக்கோட்டை கார்த்தி
போலி Foxconn App-ல் காத்திருந்த ஆபத்து; லட்சங்களில் பணத்தை இழந்த சாமானியர்கள்! என்ன நடந்தது?

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அர்ஜுன் கார்த்திக்கை மிரட்டி இவர் பணம் பறித்தது தெரியவந்தது. சாக்கோட்டை கார்த்தி மீது ஏற்கனவே பல்வேறு மோசடி வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். கும்பகோணம் கிரிப்டோ கரன்சி விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வரும் நிலையில் மேலும் பல முக்கிய தகவல்கள் தெரியவரும் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com