Vijay
Vijaypt

அம்மா சொன்னதும் விஜய்க்கு முத்தம் கொடுத்த குழந்தை.. கேரளாவில் நெகிழ்ந்துபோன விஜய்!

கேரளாவுக்கு சென்றுள்ள நடிகர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டு வருகிறது. அதில் இன்று அதிகாலை நடிகர் விஜய்யை சந்தித்த ரசிகர்களில், குழந்தை ஒன்று விஜய்யுடன் இணைந்து செல்ஃபி எடுத்துக்கொண்டதோடு, முத்தமிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Published on

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் G.O.A.T. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது. இதற்காக 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கேரளா சென்றுள்ளார் நடிகர் விஜய். படப்பிடிப்பு போக, தன்னைக் காண குவியும் ரசிகர்களையும் தினசரி சந்தித்து வருகிறார்.

கேரள மாநிலம் சென்றபோதே அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த 3 நாட்களாக அங்கிருக்கும் ரசிகர்களின் ஆரவாரமும், விஜய்யின் கியூட் மொமண்ட்ஸ் தொடர்பான வீடியோக்களும் வைரலாகி வருகிறது.

Vijay
‘தல போல வருமா...’ - டீச்சர், செஃப், நண்பன்... பைக் பயணத்தில் All in All-ஆக அஜித்! #ViralVideos

நேற்றைய தினம் கூட, தன்னை காண வந்த ரசிகர்களிடம் வேன் மீது ஏறி நின்று மைக்கில் பேசினார் விஜய். மலையாள மொழியில் பேசியதையடுத்து, தமிழ்நாட்டு நண்பா, நண்பிகளைப்போல நீங்களும் வேல லெவல் என்று கூறியது ரசிகர்களை கொண்டாட வைத்தது.

இதற்கிடையே, இன்றைய தினம் அதிகாலையும் ரசிகர்கள் பலர் நடிகர் விஜய்யை காண குவிந்தனர். அப்போது கூட்டத்தில் ஒரு ரசிகரின் குழந்தை, அவரை நோக்கி ஆரவாரம் செய்தபோது குழந்தையை கையில் வாங்கி கொஞ்சிய விஜய், அவருடன் போட்டோவும் எடுத்துக்கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Vijay
‘சேச்சி சேட்டன்மார்...’ - கேரள ரசிகர்களின் அன்புமழையில் விஜய்... இரவு 2 மணி வரை அலைமோதிய கூட்டம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com