trump, gold pt web
உலகம்

HEADLINES | காஸா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது முதல் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் வரை

இன்றைய தலைப்புச் செய்தியில் காஸா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது முதல் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் வரையிலான செய்திகளைப் பார்க்கலாம்.

PT WEB

புதிய தலைமுறையின் இன்றைய தலைப்புச் செய்தியில், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்குகிறது, கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவு, தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு, காஸா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது உள்ளிட்ட பல்வேறு செய்திகளை பார்க்கவிருக்கிறோம்.

காஸா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது... ஆவணத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார்...

காஸா அமைதி ஒப்பந்தம் நிகழ்வில் 20க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு... இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் பங்கேற்பு...

இஸ்ரேல் - காஸா போர்

உதயமானது புதிய மத்திய கிழக்கு... இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சு...

ஹமாஸின் பிடியிலிருந்து 20 பேர் விடுவிக்கப்பட்டதை நெகிழ்ச்சியுடன் கண்டுகளித்த உறவினர்கள், நண்பர்கள்... 2 ஆண்டுகளுக்கு பின் உயிருடன் மீண்டு வந்த நிலையில் உருக்கம்...

இஸ்ரேலிய பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவிடுத்ததை வரவேற்பதாக பிரதமர் மோடி கருத்து... காஸாவில் அமைதியை கொண்டு வர ட்ரம்ப் எடுத்த முயற்சியை இந்தியா ஆதரிப்பதாகவும் பதிவு...

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்குகிறது... 4 நாட்கள் கூட்டத்தொடரை நடத்த அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவு...

முதலமைச்சர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நவம்பர் 5, 6 தேதிகளில் ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள் மாநாடு... மக்கள் நலத் திட்டங்கள், வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்க திட்டம்...

கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்... விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்தும் ஆணை...

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு, அருணா ஜெகதீசன் ஆணையம் ரத்து... ஆவணங்களை சிபிஐ வசம் ஒப்படைக்கவும் உச்ச நீதிமன்றம் ஆணை...

கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்... மதுரை அமர்வின் கீழ் வரும் வழக்கை சென்னை அமர்வு நீதிபதி விசாரித்தது ஏன் எனவும் கேள்வி...

கரூர் வழக்கில் சம்பந்தப்பட்டோருக்கு தெரியாமல் மனு தாக்கல் செய்து நீதிமன்றத்தை ஏமாற்றியுள்ளதாக அபிஷேக் சிங்வி குற்றச்சாட்டு... உரிய விசாரணை நடத்தி தேவைப்பட்டால் சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிடப்படும் என உச்ச நீதிமன்றம் உறுதி...

விஜய்

நீதி வெல்லும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு... கரூர் நெரிசல் வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவு வெளியான நிலையில் கருத்து...

சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது இடைக்கால உத்தரவுதான் என திமுக வழக்கறிஞர் வில்சன் பதில்... மனு தாக்கல் மோசடி என்பது நிரூபணமானால் உத்தரவு ரத்தாகும் எனவும் உறுதி...

குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான இருமல் மருந்தை உற்பத்தி செய்த ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை... முக்கிய ஆவணங்கள், கணினி, ஹார்ட்டிஸ்க் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக தகவல்...

அடுத்த ஆண்டு 3 முறை சிறப்பு டெட் தேர்வு... உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு பள்ளிக்கல்வித் துறை அனுமதி...

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் கணிப்பு...

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர், புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை... கோவை, விருதுநகர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருவாரூர் மாவட்டங்களிலும் பரவலாக மழை...

சென்னை பெருங்களத்தூரில் பெய்த மழையால் சாலைகளில் தேங்கிய தண்ணீர்... முறையான வடிகால் வசதிகள் இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு...

வேலூர் அருகே கானாற்று கால்வாயின் கரை உடைந்து வெளியேறிய தண்ணீர்... ஊருக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதி...

நீலகிரி அருகே ராட்சதப் பாறைகள் சரிந்து விழுந்தன... கடந்த சில நாட்களாகப் பெய்த மழையின் காரணமாக விபத்து...

அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்கில் எதுவுமே நகர்வதில்லை என உயர் நீதிமன்றம் அதிருப்தி... மற்றவர்கள் மீதான வழக்கில் வந்தே பாரத் ரயில் போல வேகம் உள்ளதாக எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கில் கருத்து...

விவசாயிகளிடம் இருந்து உற்பத்தி பொருட்களைப் பெற்று ஹைட்ரஜன் எரிபொருளை உருவாக்க திட்டம்... ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு...

வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டிய முதன்மைப் பொறுப்பு தேர்தல் ஆணையத்திற்கே உள்ளது... பிஆர்எஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கவிதா பேட்டி...

சென்னையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து 92ஆயிரத்து 640 ரூபாயாக அதிகரிப்பு... சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 7 ரூபாய் உயர்ந்து 197 ரூபாய்க்கு விற்பனை...

பிஎஃப் வைப்புத் தொகையிலிருந்து இனி 100 சதவீத பணத்தை எடுக்கலாம்... விதிகளை தளர்த்தியது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம்...

2025ஆம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு... தொழில்நுட்ப முன்னேற்றம் மூலம் நீடித்த வளர்ச்சி காண்பது குறித்த ஆய்வுக்காக உலகின் உயரிய கவுரவம்...

சைக்கிளில் அதிவேகமாகப் பயணித்து கின்னஸ் உலக சாதனை... தனது முந்தைய சாதனையை முறியடித்தார் நீல் கேம்ப்பெல்...

A R Rahman

ஆரம்பத்தில் தன் பாடல்கள் மீது எழுந்த விமர்சனங்களாலேயே உருது கற்கத் தொடங்கினேன்... இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தகவல்...

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் படத்தின் ட்ரெய்லர் வெளியானது... கபடியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படத்தின் ட்ரெய்லருக்கு வரவேற்பு...

நடிகை பூஜா ஹெக்டேவிற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து சிறப்பு போஸ்டர் வெளியிட்ட ஜனநாயகன் படக்குழு... படத்தில் கயல் கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு தகவல்...