கஷ்டம் வரும் போது அப்பாவை நினைத்துக் கொள்வேன்! - துருவ் | Dhruv | Bison | Mari Selvaraj
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ், அனுபமா, ரஜிஷா, பசுபதி எனப் பலரும் நடித்து உருவாகி இருக்கிறது `பைசன்'. தீபாவளி வெளியீடாக அக்டோபர் 17ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இதன் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய துருவ் "இது ஒரு சினிமா என்பதும், அதற்காக ஒரு நிகழ்வு நடக்கிறது என்பதையும் என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. ஆனாலும் இதில் எனக்கு பயிற்சியளிக்க, என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி.
அமீர் சார் என்னைப் பற்றி நீங்கள் இப்படி பேசுவீர்கள் என நினைக்கவில்லை. என் சின்ன வயதில் இருந்து உங்களை தெரியும். இது மிக ஸ்பெஷலான தருணமாக இருந்தது. லால் சார் உங்க வாய்ஸுக்கும், உங்க ஹைட்டுக்கும், ஸ்க்ரீன் பிரசன்ஸ்க்கும் நான் ரசிகன்.
ரஜிஷா இந்தப் படம் மூலமாக நிஜமாகவே நீங்கள் என் சகோதரியாக மாறிவிட்டீர்கள். அனுபமா மூன்று மாநிலங்களில் பெரிய நடிகையாக இருந்த போதும் இன்னும் கடுமையாக உழைக்கிறீர்கள். இன்னும் பல உயரங்களுக்கு போக வாழ்த்துக்கள்.
பசுபதி சார் என் அப்பாவுடைய தூள் படத்தில் வில்லனாகவும், மஜா படத்தில் அண்ணனாகவும் இப்பொழுது பைசன் படத்தில் எனக்கு அப்பாவாகவும் நடித்ததை நான் ஒரு ஸ்பிரிச்சுவல் சைக்கிளாக பார்க்கிறேன். இந்தப் படத்தின் தூணாக நீங்கள் இருப்பீர்கள்.
நான் சிறு வயது முதலே என் அம்மாவை பெருமிதம் அடைய செய்ய பல முயற்சிகளை எடுத்துள்ளேன். ஆனால்,என் கல்வியின் மூலம் அதை நிறைவேற்ற முடியவில்லை. ஆசிரியர்கள் எல்லோரும் என்னை திட்டுவார்கள். இந்த படத்தை அவர்கள் பார்த்த பிறகு பெருமிதம் அடைவார்கள் என நம்புகிறேன்.
ஒவ்வொரு கஷ்டமாக காட்சி நடிக்கும் போதும் என் மனதில் சியானை நினைத்துக் கொள்வேன். அவர் அவ்வளவு செய்யும் போது நம்மால் இது முடியாத என்ற கேள்வி வரும். சியானின் மகனாக இருக்க நான் என்ன செய்தேன் என தெரியவில்லை. ஆனால் அதற்கு என்னை தகுதிப்படுத்த தேவையான எல்லாவற்றையும் செய்வேன். இந்தப் படத்தை கொடுத்த என் குரு மாரி செல்வராஜுக்கு நன்றி. ஒருவேளை அவர் இந்தப் படத்தில் நடித்திருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும். அவ்வளவு அருமையாக சொல்லிக்காட்டுவார்." என்றார்.