yuvraj - pollard - Dipendra Singh Airee
yuvraj - pollard - Dipendra Singh Airee PT
T20

6,6,6,6,6,6.. இரண்டு முறை 6 பந்தில் 6 சிக்சர்கள் அடித்த நேபாள் வீரர்! முதல் வீரராக வரலாறு!

Rishan Vengai

ACC ஆண்கள் டி20 பிரீமியர் கோப்பை தொடரில் கத்தார் மற்றும் நேபாள் அணிகள் விளையாடிய போட்டியில், ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்களை அடித்த நேபாள் வீரர் திபேந்திர சிங் ஐரி, டி20 கிரிக்கெட்டில் யுவராஜ் சிங் மற்றும் பொல்லார்ட் இரண்டு வீரர்களின் வரலாற்று தருணத்தை மீண்டும் கண்முன் கொண்டுவந்தார்.

யுவராஜ், பொல்லார்டை தொடர்ந்து 3வது வீரராக ஒரே ஓவரில் 6 சிக்சர்கள்..

கத்தார் மற்றும் நேபாள் அணிகள் மோதிய டி20 போட்டியில், முதலில் விளையாடிய நேபாள் அணி ஆஷிஃப் சேக்கின் 52 ரன்கள் மற்றும் குஷால் மல்லாவின் 35 ரன்கள் பேட்டிங்கால் நல்ல அடித்தளத்தை பெற்றது. முதல் இன்னிங்ஸில் பேட்டிங் ஆடிய நேபாள் அணி 19 ஓவர்களுக்கு 174 ரன்களில் இருந்தபோது, கடைசி ஓவரை அதிரடி வீரர் திபேந்திர சிங் ஐரி எதிர்கொண்டார்.

திபேந்திர சிங்

கம்ரான் வீசிய 6 பந்துகளையும் 6 சிக்சர்களாக பறக்கவிட்ட திபேந்திரா வானவேடிக்கை காட்டினார். 6 பந்துகளையும் வெவ்வேறு லெந்த்களில் கம்ரான் கான் வீசிய போதும், அத்தனை பந்துகளையும் கிரவுண்டின் நாலாபுறமும் பறக்கவிட்ட திபேந்திரா டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை பட்டியலில் இணைந்தார்.

யுவராஜ் சிங்

2007ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக யுவராஜ் சிங், 2021ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் கிரன் பொல்லார்ட் மட்டுமே இதுவரை சர்வதேச டி20 அரங்கில் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை பதிவுசெய்திருந்த நிலையில், மூன்றாவது வீரராக தன்னை இணைத்துள்ளார் திபேந்திர சிங் ஐரி.

இரண்டு முறை 6 பந்துகளில் 6 சிக்சர் அடித்த முதல் வீரர்..

கத்தார் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் அடித்திருந்த திபேந்திரா, கடந்த 2023ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் மங்கோலியா அணிக்கு எதிரான டி20 போட்டியிலும் இரண்டு ஓவர்களில் ஸ்பிலிட் செய்து தொடர்ச்சியாக 6 பந்துகளுக்கு 6 சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தியிருந்தார்.

திபேந்திர சிங்

அந்தப்போட்டியில் 10 பந்துகளுக்கு 8 சிக்சர்களுடன் 52 ரன்களை குவித்திருந்தார் திபேந்திர சிங் ஐரி. முதல்முறையாக ஒரு சர்வதேச டி20 போட்டியில் மங்கோலியா அணிக்கு எதிராக 300 ரன்களை கடந்த நேபாள் அணி, டி20 கிரிக்கெட் வரலாற்றில் 314 ரன்களை பதிவுசெய்து அதிகபட்ச டோட்டலை பதிவுசெய்த அணியாக மாறியது.